(Reading time: 21 - 41 minutes)

அவள் அவ்வாறு கேட்டது ஆதித்தின் மனதிற்குள் பெரும் பாரமாக இருந்தது. இருந்தாலும் அதை அவளிடம் வெளியில் காண்பிக்காமல் கெத்தாக இருப்பதுபோல் பாவனையை அவளிடம் காட்டியவன். ஆமா! நீ எனக்கு தூண்டில் பார்வை வீசுன நானும் அதில் சிக்குனேன் தான். ஆனா நான் சக்ஸஸ்புல் பிஸ்னஸ்மேனாக இல்லாமல் இருந்திருந்தால் என்னை நீ திரும்பிப் பார்த்திருப்பா? இல்லையில்ல, நான் வேற ஒருத்திகூட நெருக்கமா இருக்குரேனு தெரிஞ்சதும் நீ என்ன செஞ்ச? என்முன்னே இன்னொருத்தன் கூட நெருக்கமா டான்ஸ் ஆடுனவதானே நீ.

எனக்கு அப்படிப்பட்ட நீ வேண்டாம். உனக்கு ஒன்னு தெரியுமா? இன்னும் ஒருவாரத்தில் எனக்கும் அழகுநிலாவுக்கும் கல்யாணம் என்றான் .

அவன் சொன்னதை கேட்டு அதிர்ந்த வர்ஷா. அழகுநிலா அந்த கல்யாணத்திற்கு ஒத்துக்கொண்டாளா? என கேட்டாள்.

அவள் அவ்வாறு கேட்டதும் ஒருநிமிஷம் அவளை யோசனையுடன் பார்த்தவன் சொன்னான், நல்லவேளை உனக்கும் எனக்கும் இடையில் எதுவும் தப்பா நடக்கல. அப்படி நடந்து நீ எனக்கு பொண்டாட்டி ஆகியிருந்த பின்பு நான் அழகுநிலாவை பார்த்திருந்தாலும் அவ என்னை அடுத்தவ புருசன்னு வேண்டாம்னு சொல்லிஇருந்தாலும் அவளை என்னவளா ஆக்கணும் என்ற எண்ணம் எனக்கு வந்திருக்கும் அளவு அவ எனக்குள்ள இப்போ நெறஞ்சு இருக்கா! ஆனா நீயே உன்னைவிட்டு நான் தூரமா ஒதுங்கிபோற மாதிரி நடந்துகிட்ட இப்போ நான் சிங்கிள் இந்த நிலையில் அவளை எப்படி மிஸ்டர் ஆதித் ஆக்காமல் இருப்பேன் என்று சொன்னதும்,

போதும் ஆதித்........ இதுக்கு மேல பேசாதீங்க என்றவள், குரல் நடுங்க நான் எப்பவும் என் ஜாய்ஸ் பெஸ்ட் ஆகத்தான் இருக்கும் என்று நினைதிருத்தேன் அது இப்போ பொய்யாயிடுச்சு குட் பை என்றவள் எழுந்து விறுவிறுவென்று வெளியேறினாள்.

ஆதிதுக்கு மனம் பாரமாக இருந்தது. தனக்கு வர்ஷா தூண்டில் பார்வை வீசினால் என்று குற்றம் சொல்ல எனக்கு என்ன அருகதை இருக்கு. அவளின் பார்வைக்கு பதில் பார்வை தந்தவன் தானே நான் என்று கலக்கமடைந்தான்.

ஆனால் கண்டிப்பாக வர்ஷாவை தான் தன்னவளாக ஆக்கியிருந்தால் கட்டாயம் தன்னை சலனப்படுத்தும் அழகுநிலாவை எட்டத்தான் நிறுத்தியிருப்பேன். ஆனால் அதை மாற்றி சொன்னால்தான் அவள் தன்னை இனி நெருங்க முயலமாட்டாள். என் மேல் கொண்ட காதலையும் மறக்க முயன்று வேறு வாழ்க்கை அமைத்துகொள்வாள் என்பதற்க்காகவே அவ்வாறு அவளிடம் கூறினேன் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டான் ஆதித் .

மேலும் மாதேசுடன் வர்ஷவை அன்று பார்த்ததும் அவளின் மேல் கொண்ட மோகமும் காதலும் தனக்கு இல்லாமல் போய்விட்டதே அவளுடன் இனி தன வாழ்க்கையை இணைத்துக்கொள்ள தன்னால் முடியவே முடியாதே என்று தனக்குத்தானே பேசிக்கொண்டான். ஆனால் ஒன்றில் இப்பொழுது தெளிவாக இருந்தான், வர்ஷாவின் மீது தனக்கு உண்டானது ஆத்மார்த்தமான காதல் கிடையாது அப்படி இருந்திருந்தால் இப்பொழுது நான் அவளை மாதேசுடன் இணைந்து ஆடியதை காரணம் காட்டி விலக்கியிருக்கமாட்டேன். என்னை பற்றி நல்லவன் என்று நான் நினைத்திருந்த பிம்பம் மாறி நானும் சுயநலவாதிதான் என்று புரியவைத்திருக்கிறது என்னுடைய இந்த செயல் . ”இந்த உலகத்தில் யாரும் முழுவதுவும் கெட்டவர்களும் கிடையாது முழுவதுவும் நல்லவர்களும் கிடையாது “ என்று யோசித்தபடி தனது காரை எடுத்து அழகுநிலாவின் விடுதி நோக்கி விரட்டினான் .

அழகுநிலா தன ட்ராலி பேக், மற்றும் இதர பொருட்களுடன் ரிசப்சனுக்கு வந்து அங்கிருந்த நிர்வாகியிடம் தனது அரை சாவியை கொடுக்கும் போது ஆதித்தும் உள்ளே நுழைந்தான். இயல்பாக அவளின் பேக்கை தானும் எடுத்துக்கொண்டவன் போலாமா! என்று கேட்டதும் ஒரு தலை அசைவை கொடுத்தபடி அவனுடன் காரின் அருகில் வந்தவள் ஏறப்போன நிமிடம் யோசனையுடன் ஆதித்தை பார்த்து உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இபோ தான் உங்க வர்ஷா வந்து என்னிடம் பேசிட்டுப் போனாங்க. அவங்களுக்கு உங்க மேல உள்ள சந்தேகம் போயிடுச்சு என்னால உங்களுக்குள் இனி பிரச்சனை வராது என்று கூறியவள், இனி வரும்போது என்னிடம் நமக்கு கல்யாணம் அது இது என்று உளறுநீங்களே அதேபோல் இனிமேலும் நீங்க என்கிட்டேயோ, மத்தவங்க கிட்டயோ பேசக்கூடாது. அதுக்கு சரின்னு சொன்னீங்கனா இப்போ நான் உங்க கூட வருவேன் என்றவள் அவனின் பதிலுக்காக அவனின் முகத்தையே பார்த்தாள்.

அழகுநிலா பேசும் வரை அமைதியாக இருந்தவம் இவளை எப்படி சமாளிக்கறது என்று நினைத்து ஒரு புருவத்தை உயர்த்தி அவளை பார்த்து சீரியஸாக சொன்னான் , வர்ஷாவை பற்றி என்னிடம் நீ பேசுவது இது தான் கடைசி தடவையாக இருக்க வேண்டும். அதேபோல் நான்சொல்வதை கேட்டு புரிந்து நடக்கப்பாரு. உன்னை நான் கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று சொன்னது உளறலா இருக்கா? உனக்கு. இப்போ நான்தான் எல்லாமே அதை ஞாபக்கம் வச்சு பேசு என்றான்.

அவன் தன்னை அவ்வாறு கேட்டதும் உங்களுக்கு என்னப்பார்த்தா நாதியில்லாதவ தானே நாம சொல்றதுக்கு இவ தலையாட்டிதானே ஆகணும் அப்படின்னு நெனப்போ? நீங்க என்னை இங்க விட்டு போன மறுநிமிசமே என் பிரின்ட் சுமதி விசு இரண்டுபேரும் போன்செய்து வரச் சொன்னாக தெரியுமா..? என்று மேலும் பேசப்போனவளை, போதும்.... போதும் நிறுத்தரயா.. உனக்கு ஊர் முழுக்க பிரெண்ட்ஸ்தான். ஆனா உனக்காக உதவுற உன் நண்பர்களை அந்த நரேன் பிரிச்சு மேஞ்சுடுவான் அதுதான் உனக்கு ஓகேவா என்றதும் அதிர்ந்து அவனின் முகத்தை பார்த்தாள் அழகுநிலா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.