(Reading time: 20 - 39 minutes)

அழகுநிலாவிற்கு தான் சங்கடமாக போய்விட்டது. அவன் கையை லாவமாக தட்டிவிட்டவள் என்னை தொடாம பேசுங்க என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள். .அதன் பின் மேடம் நான் என் திங்க்ஸ்சை பேக் பண்ணிட்டு வருகிறேன் என்று அவள் ரூமிற்கு விரைந்தாள் அழகுநிலா.

தன அறைக்கு வந்தவள் தன அண்ணனின் மொபைலுக்கு தொடர்புகொள்ள முயன்றால் தனது நிலையை அவனுக்கு எப்படியாவது விளக்கி கூறிவிட்டால் தன்னை புரிந்து கொள்வானோ..! என்று நினைத்தாள் ஆனால் பலதடவை முயன்றும் அவள் அண்ணன் அவளின் அழைப்பை எடுத்து பேசாததால் சோர்ந்து போய் மடங்கி உட்கார்ந்து அழுக ஆரம்பித்தாள். அப்பொழுது அவளின் ரூம் கதவு தட்டப்பட்டது. உடனே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள் தனது கண்ணீரை துடைத்துவிட்டு யார் என்று கதவை திறந்து பார்த்தாள்.

வெளியில் இருந்த அந்த ஹாஸ்டலின் மெய்ட் அழகுநிலாவிடம், “உங்களுக்கு விசிட்டர் வந்திருகிறார்கள் என்றாள்.” யார்..? பேர் எதுவும் சொன்னார்களா..? என்று கேட்டதும், ஆமா, வர்ஷா வந்துருகேன்னு சொல்லச்சொன்னார்கள் என்றாள். இதோ ஒரு நிமிட்சத்தில் வந்துவிடுகிறேன் அவங்களை ரிசப்சனில் உட்காரச்சொல்லுங்கள் என்று கூறியவள் தன முகத்தை நீர் அடித்து கழுவி துடைத்துவிட்டு ரிசப்சனை நோக்கி நடக்கும்போதே நினைத்தால் நான் அங்க பேசப்போகும்போது எல்லாம் அதை கேட்கவே விரும்ப படவில்லையே! இப்போ எதற்கு இங்கு வந்திருகிறார்கள் என்று யோசனையுடன் ரிசப்சனை அடைந்தாள் அழகுநிலா.

அழகுநிலாவை பார்ப்பதற்கு வர்ஷாவிற்கு கொஞ்சம் சங்கடமாக இருந்தது. நான் அப்போ இவளை அவமானப்படுத்தியதை மனதில் வைத்து இப்போ தன்னிடம் திமிராக நடந்துகொள்வாளோ..? என்று யோசனையுடன் அவளை பார்த்தாள்

ஆனால் அழகுநிலா அவளை பார்த்து நட்பாக சிரித்தபடி, நானே உங்களை பார்த்துப் பேசனும் என்று நினைத்திருந்தேன், ஆனா நீங்களே வந்துட்டீங்க வாங்களேன் கார்டனில் போய் உட்கார்ந்து பேசலாம் என்று கூட்டிக்கொண்டு சென்றாள்.

அங்கிருந்த பெரிய வேப்பமரத்தின் அடியில் போட்டிருந்த கல்பெஞ்சில் அமர்ந்ததும் அழ்குநிலா கூறினால் ரிசப்சனில் பலர் வருவாங்க நம்மால் ப்ரீயா பேசமுடியாது அதனால்தான் இங்க கூட்டிவந்தேன் என்றாள்.

வர்ஷா தேவையில்லாமல் யாரையும் இகழ்வாக பேசுபவள் இல்லை. ஆதித்துகும் அவளுக்கும் இடையே அழகுநிலா திடீரென்று முளைத்ததால் அழகுநிலவின் மேல் ஏற்பட்ட வெறுப்பின் காரணமாகவே அவளிடம் அப்பொழுது கடுமையாக நடந்துகொண்டாள். ஆனால் அதை மனதில் வைத்துக்கொள்ளாமல் அழகுநிலா நட்பாக அவளிடம் பேசினாள்.

எனவே வார்ஷா கூறினாள், உங்களிடம் நான் ஹார்சாக நடந்துகிட்டேன் அதற்கு சாரி மிஸ் அழகுநிலா என்றாள்.

அதற்கு அழகுநிலா நான் அதை பெருசாக நினைக்கவில்லை. ஏன்னா உங்களுக்கும் ஆதிதுகும் இடையே பிரச்சனை வந்ததுக்கு நான் தானே காரணம் , ஆனா நீங்க நினைக்கிற மாதிரி எனக்கும் அவருக்கும் இடையே தவறாக எதுவும் கிடையாது. அவர் எனக்கு ஆபத்தான சூழலில் உதவினார் இப்பொழுதும் உதவிக்கொண்டு இருக்கிறார்.

நீங்க மாலில் வைத்து கண்ணால் பார்த்ததோ, என் பாஸ் மாதேஷ் ஆதித்திடம அவரின் வருங்கால மனைவியா நான்? என்று கேட்டதற்கு அவர் ஆமாம் என்று சொன்னதோ எதுவும் உண்மையில்லை. உங்களுக்கு முதலில் இருந்து நடந்த அனைத்த்சும் சொன்னால்தான் புரியும் என்று கூறி,

ஆதித்தை முதன்முதலில் ஹோட்டலில் பார்த்ததில் இருந்து அதன்பின் நரேனால் நிகழ்த்த அசம்பாவிதம் பின் அந்த மொபைல்மிரட்டல் மாலில் அதைத் தான் கொடுக்கவந்தது அதன்பின்பு தனக்கு ஆக்சிடென்ட் ஆனது. அப்பொழுது ஆதித் தன்னை காப்பாற்றி அவரின் வீட்டிற்கு ஆதித்தின் அம்மா ஜானகி அழைத்ததால் கூப்பிட்டுப்போனது. பின் அவனுடன் கோவிலுக்குப் போனது வரை எல்லாம் கூறினாள்.

அவள் கூறிய அனைத்தையும் கேட்ட வர்ஷாவிற்கு ஆதித்தை தான் சந்தேகப்பட்டது எவ்வளவு தவறு என்று புரிந்தது. மேலும் யோசனையுடன் அழகுநிலாவிடம் நீ சொல்வதைப் பார்த்தால் உன்னுடைய பிரச்சனை எல்லாவற்றிற்கும காரணம் அந்த மினிஸ்டர் மகன் நரேன் தானே பின் எதற்கு மாதேஷ் உன்னிடம் அந்த மொபைலையும் அதில் இருந்த பதிவையும் பற்றி கேட்டு டென்சன் ஆனான் என்று கேட்டாள்.

அதற்கு அழகுநிலா கூறினாள், அந்த நரேனும், மிஸ்டர் மாதேசும் நண்பர்களாம். மேலும் அவங்க என்னிடம் அந்த மொபைலை என் வீடியோ பதிவிற்காக ஒன்றும் கேட்கவில்லைபோல, அதில் அந்த நரேனுக்கும் மாதேசுகும் எதிரான ஏதோ வீடியோ ரெகார்ட் உள்ளதுபோல, அதற்காகத்தான் அதை என்னிடம் வாங்க அத்தனை மிரட்டல் எனக்கு கொடுத்திருகிறார்கள் என்றாள்.

அதனை கேட்ட வர்ஷா அதில் அப்படி என்ன இருந்தது என்று கேட்டாள். எனக்கு அதுதெரியாது. ஆதித்திடம் அவங்க வீட்டில் இருந்து வரும் போது அதில் இருந்த என் ரெகார்டை டெலிட் செய்து தருமாறு அந்த மொபைலை கொடுத்தேன் அவர்தான் அதில் உள்ள வீடியோ பதிவுகளை பார்த்திருக்கிறார். இன்று மறுபடி அவரை பார்த்தபோது அது பற்றி கேட்கும் முன் என் அண்ணன் என்னிடம் கோபப்படுப்போனதால் அந்த டென்சனில் அதை கேட்காமல் விட்டுவிட்டேன் என்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.