(Reading time: 8 - 16 minutes)

சந்திரன் குற்றவாளிகளை கேள்வி கேட்க நீதிபதியிடம் அனுமதி கேட்க அவரும் அனுமதி அளித்தார்.

“உங்களுக்கு நாராயணன் அப்படிங்கறவரைத் தெரியுமா?”

“இல்லை சார்... எங்களுக்கு அவரை யாருன்னே தெரியாது.....”

“ராத்திரி நேரத்துல மயூரி வீட்டுல போய் கலாட்டா பண்ணுனீங்க அப்படின்னுதான் உங்களை கைது பண்ணி இருக்காங்க..... அது உங்களுக்குத் தெரியுமா.....”

“தெரியும் சார்....”

“எதுக்காக அவங்க வீட்டுக்கு அந்த நேரத்துல அங்க போனீங்க....”

“அது முருகேசு சார்தான் அந்த நேரத்துல அந்த வீட்டுக்குப்போய் கலாட்டா பண்ண சொல்லி சொன்னாரு....”

“விஷயம் என்ன எதுவுமே சொல்லாமயா உங்களை அங்க போக சொன்னாரு....”

“இல்லை சார்.... இந்த மாதிரி நாராயணன் அப்படிங்கறவர் பேருல கொடுத்திருக்கற கேஸ் வாபஸ் வாங்கணும் அப்படின்னு சொல்ல சொல்லி மிரட்ட சொன்னாரு.....”

“ஹ்ம்ம்ம் அவர் சொன்ன உடனே நீங்களும் கிளம்பிட்டீங்க இல்லை.... சரி... அந்த நாராயணன் யாரு... என்ன விஷயம் எதுவும் கேட்டுக்கலையா....”

“இல்லை சார்.... கேட்டோம்... அந்த வீட்டை வாங்கறதுக்காக  அந்த வீட்டுல இருக்கறவங்க கூட நாராயணன் பேசிட்டு இருக்காருன்னு முருகேசு சொன்னார் சார்.....”

“உங்களுக்கு பாத்திரக்கடை வச்சிருக்கற முருகேசனை எத்தனை நாளா தெரியும்......”

“எங்களுக்கு ரொம்ப வருஷமா பழக்கம் சார்... எப்பவாச்சும் இந்த மாதிரி சின்ன சின்ன வேலைங்க செய்ய கூப்பிடுவாரு சார்....”

“உங்ககிட்ட கடைசியா என்னைக்கு முருகேசு பேசினார்....”

“அந்தப்பொண்ணு வீட்டுக்கு போன அன்னைக்கு சாயங்காலம்தான் பேசினாரு சார்.... ஒரு நாலு பேர் சேர்ந்து போங்க அப்படின்னு சொன்னாரு....”

“யுவர் ஹானர்... நீங்க இந்த வீடியோவை பார்த்தீங்கன்னா இவங்க நாராயணன் அனுப்பித்தான் மயூரி வீட்டுக்கு போய் இருக்காங்கன்னு தெரியும்....”

சந்திரன் பாரதி மயூரி வீட்டில் ரெகார்ட் செய்த வீடியோவை அவர் தரப்பு சாட்சியாக நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.... அதில் தெளிவாக மயூரியின் தாயை அந்த நான்கு ரௌடிகளும் மிரட்டுவது தெளிவாக இருக்க நீதிபதி நாராயணன் தரப்பு வக்கீலிடம்

“இந்த வீடியோவில் மிகத் தெளிவா இவங்க மிரட்டறது பதிவாகி இருக்கே... இதுக்கு என்ன சொல்றீங்க.....”

“கனம் நீதிபதி அவர்களே, அந்த நால்வருமே மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்களே... அந்த முருகேசுதான் இவர்களை நாராயணன் பேரை சொல்லி மிரட்ட சொல்லி இருக்கான் அப்படி என்று.... நாராயணனுக்கும் இவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை....”

“அந்த முருகேசு என்பவர் இங்கு அழைக்கப்பட்டு உள்ளாரா....”

“இல்லை நீதிபதி அவர்களே, அவர் வெளியூர் சென்றுள்ள காரணத்தால் அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை... இன்னும் இரண்டொரு நாளில் அவர் சென்னை திரும்புவார்....”,என்று போலீஸ் தரப்பில் கூற வழக்கை அடுத்த புதன்கிழமைக்கு மாற்றி, அன்று அனைத்து சாட்சியங்களையும் காவல்துறை தரப்பில் சமர்ப்பிக்குமாறு கூறி, அதுவரை அந்த நால்வரையும் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார் நீதிபதி.

யாருடா இது புதுசா ஒரு முருகேசு.....”

“அவன் அந்த ஏரியாலையே பாத்திரக்கடை வச்சிருக்கறவன் சீனியர்... நாராயணனுக்கும், அவனுக்கும் ஏற்கனவே அவங்க சங்கம் சார்பா தகராறு இருந்தது... அதை இப்படி தீர்த்துக்கறான் போல....”

இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்கும்போது மதி அருகில் வர,

“என்ன மதி சார், உங்களுக்கு எப்படி இப்படி ஒரு ட்விஸ்ட் தெரியாம போச்சு... முன்கூட்டியே தெரிஞ்சிருந்தா நாம உஷாரா இருந்து இருக்கலாம்.....”

“அந்த போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கற இன்ஸ்பெக்டர் இந்த நாராயணன் ஆள் சந்திரன் சார்... அதுதான் இவங்க இப்படி மாத்தி பேசப்போறது தெரியாம போச்சு... கவலைப்படாதீங்க... அவனுங்களை இந்தமுறை சென்ட்ரல் ஜெயில்லதான் போடப்போறோம்.... இனி அந்த இன்ஸ்பெக்டர் ஒண்ணும் பண்ண முடியாது... அதுக்குள்ளே அந்த முருகேசன் யாரு என்னன்னு விவரம் தேத்திடலாம்.....”

பாரதியும், சாரங்கனும் மதியிடமும் சந்திரனிடமும் விடைபெற்று மயூரியையும், அவள் தாயாரையும் அவர்களுடன் அழைத்து சென்றார்கள். அவர்களை வீட்டில் விட்டு மயூரியும், சாரங்கனும் வீடு வந்து சேர்ந்தார்கள்.

“ப்ச் இன்னைக்கு இந்த நாராயணன் கேஸ் முடிஞ்சுடும்ன்னு நினைச்சேன்.... கடைசில ஒரு பொய்யை சொல்லி தப்பிச்சுட்டானே....”

“வொர்ரி பண்ணாத சப்பாணி.... அடுத்த வாரம் அந்தாளு கண்ணுல விரலை விட்டு ஆட்டிடலாம்... சரி நம்ம நடிகர் திலகம் எப்படி இருக்காரு....”

“நாளைக்கு அந்தாளுக்கு ஆபரேஷன் பண்ணப்போறாங்க.... அந்த ஹாஸ்பிட்டல் வாசல்ல அப்படி ஒரு ரசிகர் கூட்டம்.... தனி போலீஸ் படையே கூட்டத்தை கட்டுப்படுத்த போட்டிருக்காங்க....”

“ஹே சப்பாணி... இதுதான் நமக்கு சரியான டைம்.... இன்னைக்கு ராத்திரி நாம ரெண்டு பேரும் வேட்டைக்கு கிளம்பறோம்... நீ அந்தாளோட வீட்டுக்குப் போ.... நான் பண்ணை வீட்டுக்கு போறேன்.... நமக்கு கிடைக்கற ஆதாரம் அத்தனையும் திரட்டறோம்....”என்று கூற, பாரதியின் சொல்படி அன்று இரவு பன்னிரெண்டு மணி அளவில் பாரதியும், சாரங்கனும் நரேஷின் தனி வீட்டிலும், பண்ணை வீட்டிலும்  நுழைந்தார்கள்.

தொடரும்

Episode 23

Episode 25

{kunena_discuss:1100} 

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.