(Reading time: 19 - 37 minutes)

“ஹாய் அண்ணா, ஹாய் இளா.. “ என்று அழைக்க, இருவரும் அவளுக்கு “ஹாய்” என்றனர் பதிலாக.

“என்ன ரெண்டு பேரும் காலையிலேயே சீரியஸ்சா ஏதோ பேசிட்டு இருக்கீங்க..” அவள் வண்டியை நிறுத்திய படி கேட்க,

‘ஒன்னும் இல்லை..  மலர் .. அங்கே ஊட்டியில் நடந்ததை பற்றி பேசிக் கொண்டு இருந்தோம்..” என்றபடி அவள் சென்டர் ஸ்டான்ட் போட்டு நிறுத்த எதுவாக வண்டியை பிடித்தான்.

“அதில் எதுவும் பிரச்சினையா ?”

“இல்லைமா.. அங்கே தீவிரவாதிகள் பட்டிய விவரம் எல்லாம் வெளியில் சொல்ல வேண்டாம்ன்னு அர்ஜுன் மாமா சொன்னார். அததான் சொல்லிட்டு இருந்தேன்”

“ஓ .. அப்படியா.. ஆனால் அர்ஜுன் அண்ணா சொன்னால் அத அப்படியே பாலோ பண்றதுதான் சரி.. இல்லாட்டா அவங்களுக்கு தேவை இல்லாத பிரச்சினை வரும்”

‘அட ..அட.. இந்த நினைப்பு எல்லாம் அங்கே எங்க போச்சு மேடம் உங்களுக்கு” என்று கேலியாக வினவ,

“அது நமக்கு வேண்டியவங்களுக்கு ஒண்ணுன்னா அப்படிதானே பதறும் அண்ணா “ என்று அவள் முகம் சிவந்தபடி பதில் சொன்னாள்.

“அது சரி” என்று அவன் சிரிக்க,

“டேய்.. ரொம்ப ஒட்டாதே.. அப்புறம் உன் வண்டவாளம் எல்லாம் ராக்கெட்லே ஏத்திடுவேன் பார்த்துக்கோ “ என செழியன் முறைக்க,

“ஆத்தாடி .. ரெமோ அந்நியனா மாறிட்டான்.. செந்தில் நீ எஸ்கேப் ஆகிக்கோ “ என்று தனக்குள் முனங்கியவனாக.

“சரி.. சரி.. வாங்க ஸ்டாப் ரூம் போகலாம்” என்ற படி இருவரையும் அழைத்துக் கொண்டான்.

இவர்கள் மூவரும் எதுவும் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், மற்ற லெக்சரர் எல்லாம் இவர்களின் செயலை பாராட்டி அவரவர் வகுப்பில் சொல்லிருக்க, மாணவர்கள் எல்லோரும் , இவர்கள் மூவரையும் வந்து பார்த்து வாழ்த்து சொல்லி சென்றனர்.

மாணவர் தலைவன் வந்து, இவர்கள் மூவருக்கும் ஒரு பாராட்டு விழா எடுக்க வேண்டும் என, பிரின்சிபாலிடம் கேட்க, அவர் செழியனிடம் கருத்து கேட்டார்.

செழியன் அது எல்லாம் வேண்டாம் என்று தடுத்து விட, மாணவர் தலைவன் அவனிடமே வந்து கேட்க, அவனை சமாதான படுத்தி அனுப்பி வைத்தான்.

இதற்கு இடையில் மாநில, மத்திய அரசு இருவரிடமிருந்தும் , இவர்களை பாராட்டி தனி தனியாக கடிதங்கள் வந்து இருக்க, கல்லூரி தாளாளர் வந்து பிரின்சிபாலிடம் பேசி, காலேஜ்சிறகுள் ஒரு மீட்டிங் போல் ஏற்பாடு செய்து, இவர்கள் மூவரையும் பாராட்டினார்.

மாணவர்கள் எல்லோரும் செழியனை அந்த அனுபவத்தை பற்றிக் கூறுமாறு கேட்க, அவன் சற்று தயங்கினாலும், மாணவர்களுக்கு அங்கே நடந்ததை எடுத்து உரைத்தான். சில விஷயங்களை தவிர்த்து, அவர்களை மோடிவேட் செய்யும் விதமாக விளக்கினான்.

அதோடு நாட்டு எல்லையில் பாதுகாக்க இராணுவம் இருந்தாலும், உள்நாட்டு பாதுகாப்பை நம்மால் முடிந்த வரை நாம் செய்ய வேண்டும். போலீஸ் இருந்தாலும், அவர்களுக்கு உதவியாக நாம் சிறு சிறு தகவல்கள் கொடுத்தாலே பாதி குற்றங்கள் குறைந்து விடும்.. நமக்கென்ன என்று ஒதுங்காமல் நாம் ஒவ்வொருவரும் நம்மை சுற்றியுள்ள விஷயங்களை சரி செய்தால், நாமும் வளர்ந்த நாடுகள் நிலையை விரைவில் எட்டி விடலாம்.. என்று சிறியதாக உரை நிகழ்த்தி முடிக்க, மாணவர்கள் மத்தியில் பலத்த கைதட்டல் எழுந்தது.

இப்படியே நாட்கள் விரைவாகவும், அதே சமயம் எந்த மாற்றமில்லாமலும் சென்று கொண்டு இருந்தது.

செழியனின் ஆராயிச்சி முடிவு நெருங்கும் நிலையில் இருந்ததால், அவனின் பெரும்பானமையான நேரத்தை அது விழுங்கிக் கொண்டது.

அவனுக்கு அதில் உதவியும் தேவைப்பட, மலரிடம் அதை பற்றி பேசும்போது அவள் உதவுவதாக கூறினாள். அதனால் தேவைப்படும் விவரங்களை அவன் ஒரு பேப்பரில் எழுதிக் கொடுக்க, அது சம்பந்தப்பட்ட தகவகல்களை நெட்டில் தேடி, அதை தன்னால் முடிந்த அளவு சுருக்கி அவனுக்கு அனுப்பி வைத்தாள். அவன் அதிலும் தனக்கு வேண்டியவற்றை தேர்வு செய்து, அதை தன் குறிப்போடு சேர்த்துக் கொண்டான்.

நடுவில் காலேஜ் பிரக்டிகல் செஷனுக்காக, அருகில் உள்ள ஊர்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று வரும் பொறுப்பு மலரிடம் ஒப்படைக்க பட்டது.

அவள் பாட்டி முடிந்தவரை தடுக்க, மலர் அவரை கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி என்று சம்மதிக்க வைத்து மாணவர்களோடு இன்ப்லான்ட் டூர் சென்றாள் .

இந்த நிலையில் மகா சிவராத்திரி வர, அதிலும் சனிக்கிழமை வர, சனி , ஞாயிறு இரண்டு நாட்களும் கல்லூரி விடுமுறை என்பதால், மலர் வீட்டில் எல்லோரும் தஞ்சாவூர் பெரிய கோவில் சென்று வரலாம் என்று முடிவு செய்தனர்.

அன்றைக்கு மலரின் அப்பா வேலனின் அரசாங்க துறை மந்திரி வந்து இருந்ததால், அதிலும் அவர் பெரிய கோவிலில் சிவராத்திரி உற்சவம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே வந்து இருந்ததால் அவரின் பொழுது எல்லாம் மந்திரியோடு சென்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.