(Reading time: 19 - 37 minutes)

“சரிம்மா.. நீங்க போய் படுத்துக்கோங்க..”

“இல்ல.. உன் கைக்கு இதமா ஒத்தடம் கொடுத்துட்டு போறேன்”

வேண்டாம் என்று சொல்லியும் அவர் விடவில்லை. அதற்கு மேல் அவரிடம் வாதாட முடியாது என்று உணர்ந்தவன், சாப்பிட்டு படுத்தான்.

மலரிடம் பேச வேண்டும் என்று எண்ணியிருந்தவன், அலுப்பிலும், அம்மா அருகில் இருந்ததாலும் அப்படியே படுத்து விட்டான்.

றுநாள் காலையில் இருவர் வீட்டிலும் முந்தைய நாள் பிரச்சினைகளை பற்றி பேசாமல் இருக்கவே, அந்த நாள் நல்லபடியாக கழிந்தது.

செழியனின் அப்பா, அவனை கடைக்கு வந்து செல்லுமாறு அழைக்கவே, அவனும் சென்றான். ஓரளவு சரியாகத்தான் வைத்து இருந்தார்கள். இருந்தாலும் பேங்க் என்ட்ரியும், இவர்கள் சிஸ்டம் என்ட்ரியும் அங்கே அங்கே வேறு பட்டு இருக்க, அதை மிக கவனமாக சரி பார்த்து வைத்தான்.

இதை சரி செய்து வைத்தால் மற்றதை, பிரிண்ட் அவுட் எடுத்து தர சொல்லி, அவன் தந்தையே சரி பார்த்து விடுவார். ஓரளவு நெருக்கி அந்த வேலையை எல்லாம் முடித்து வைத்தான்.

மீண்டும் காலேஜ் திறக்க, மாணவர்களும், ஆசிரியர்களும் ஒரு சோம்பலுடனே வந்து சேர்ந்தனர்.

செந்திலிடம் வீட்டில் இருக்கும் போது பேச முயற்சித்தவன், அவன் மனைவியோடு கிடைத்த நாட்களில் உறவினர் வீட்டிற்கு சென்று இருப்பதாக கூறவே, சரி பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு விட்டான்.

மலரிடமும் பேச முடியவில்லை.. இரண்டு மூன்று முறை அவன் முயற்சித்த போது எல்லாம் அவள் எடுத்து பேசினாலும், அதிகம் பேசவில்லை.. அங்கே ஏதோ பிரச்சினை என்று புரிந்து கொண்டவன், காலேஜ்ஜில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டான்.

காலேஜ் திறந்த அன்று எப்போதும் போல் செழியன் தன் புல்லேட்டில் வந்து இறங்க, அவன் பின்னாடியே செந்திலும் தன் பல்சர் பைக்கில் வந்து இறங்கினான்.

அவன் வண்டியை நிறுத்துவதை பார்த்த செழியன், சுற்று முற்றும் பார்த்து விட்டு , செந்திலை நன்றாக மொத்தினான்.

“ஹேய்.. ஏண்டா.. காலங்கார்த்தால இந்த கொலை வெறி?”

“எருமை மாடு.. நீ மட்டும் அன்னிக்கே என் கையில் கிடைச்சு இருந்த, மொத்தமா கைமா பண்ணிருப்பேன்... “

“எதுக்குடா.. இப்போ இவ்ளோ அனலடிக்குது.. ? அடி.. தப்பில்ல.. ஆனா எதுக்குன்னு சொல்லிட்டு அடி..”

“பக்கி.. இவரு பெரிய வடிவேலு... காமெடி பண்றாராம்.. எனக்கு இருக்கிற கடுப்பிலே, தூக்கி போட்டு மிதிச்சு இருப்பேன்.. காலேஜ்லே இருக்கோமேன்னு அடக்கி வாசிக்கிறேன்”

“அடப்பாவி.. அப்போ இவ்ளோ நேரம் அடிச்சும் உன் கோபம் தீரலயா .. என்னாச்சு.. அதாவது சொல்லிதொலை..”

“ஏண்டா.. எங்கப்பா கேட்டா, அங்க நடந்தத அப்படியே ஒப்பிக்கணுமா? அதிலும் நான் சொல்லி தான் அந்த அவலாஞ்சி ட்ரிப் ஏற்பாடு செய்தோம்ன்னு வரை சொல்லிருக்க.. அவர் என்னைய போட்டு தாளிச்சு எடுத்துட்டார்..”

“ஏண்டா. உன்னை பத்தி பெருமையாதானே சொன்னேன்..’

“கிழிச்ச.. நீ சொன்ன லச்சனத்துலே அவர் பெருமைய எல்லாம் விட்டுட்டு, தேவை இல்லாம மாட்டிக்கிட்டதோடு , மலருக்காக நான் சண்டை போட்டேன் வரை கண்டு பிடிச்சு வைச்சு சீக்கிரமே கல்யாணம் பண்ணி வைக்க போறேன்னு மிரட்டிட்டு இருக்கார்.”

“ஏண்டா. அதுவும் நல்லதுதானே.. நீ உங்க அப்பா கிட்டே மலர பத்தி சொல்லிடலாமே..”

“க்கும். .அந்த வெங்காயம் எங்களுக்கு தெரியாதா.? அவர் தான் வேற முடிவு பண்ணி வச்சுட்டு உக்கந்துருக்காரே.. அதானே நான் பேசாமல் இருக்கேன்.. இந்நேரம் அவருக்கு என் மனசு புரியாம இருக்குமா என்ன.. அது எல்லாம் நல்லாவே தெரிஞ்சு இருக்கும். அவரும் வெளிப்படையா மலர பத்தி பேச மாட்டேங்குறாரு. அவர் ஆரம்பிச்சார்ன்னா , நானும் அப்படியே அத பிடிச்சுக்கிடுவேன்னு அவருக்கும் தெரியும். அதான் ரெண்டு பேரும் கண்ணாமூச்சி ஆடிட்டு இருக்கோம்..”

“இதுவும் நல்லதுக்குதாண்டா.. இல்லாட்டா உன் மனச மாத்திரலாம்னு நினைச்சுட்டு அவர் பாட்டுக்கு ஏதாவது ஏற்பாடு பண்ணிட்டு இருப்பார்..”

“ஹ்ம்ம்.. நீ சொல்றதும் சரிதான்.. “ என்று பேசிக் கொண்டு இருக்கும்போதே மலரும் தன் ஸ்கூட்டியில் வர, அவளை பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான் செழியன்..

செந்தில் மனதுக்குள் “ஹப்ப.. நல்ல வேளை .. மலர் நம்மள காப்ப்திட்டா.. இல்லாட்டா அவன் இருந்த வெறிக்கு இன்னிக்கு என்னை கொத்து பரோட்டா போட்டுருப்பான்.. அம்மா மலரே.. நீ வாழ்க.. “ என்றபடி மலரையும் செழியனையும் பார்த்தான்.

செழியன் கண்ணில் வழியும் காதலை பார்த்தவன், “ஹப்பா.. அவன் வாடேர்பால்ல்ஸ் ஓபன் பண்ணிட்டான்.. இனிமே நம்மள அவன் கண்ணுக்கு தெரியாது.. தெய்வமே.. நீ எங்கியோ இருக்க” என்று தனக்குள் கூறிக் கொண்டான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.