Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகா

Aathibanin kaadhali

திபன் சொன்னதை கேட்டு தாத்தா சிறிது கலக்கத்துடனே தன் அறைக்கு செல்வதை பார்த்துவிட்டு பாட்டி ஆதிபனிடம் வந்து

”ஏன்டா நிஜமாத்தான் அந்த பொண்ணு உன்னை காதலிக்கிறாளா இல்லை நீயே ஏதாவது பொய் சொல்றியா” என சந்தேகமாக கேட்க அதற்கு ஆதிபனின் தாயே பதிலளித்தார்.

”என்ன அத்தை நீங்களே இப்படி பேசறீங்க என்  பையன் என்னிக்கு பொய் சொல்லியிருக்கான்” என கூறவும் பரதனும் பாட்டியிடம் வந்து

”ஆமாம் பாட்டி நானும் பார்த்தேன் தென்னந்தோப்புல இன்னிக்கு அண்ணி அண்ணனை கட்டிப்பிடிச்சி ஐ லவ் யுன்னு சொன்னாங்க”

”அண்ணியா” என பாட்டி வியப்புடன் கேட்க

”ஆமாம் பாட்டி நான் எப்பவோ முடிவு செஞ்சிட்டேன்” என சிரித்துக்கொண்டே சொன்னான்.

”நீ முடிவு பண்ணா போதுமா” என பரதனிடம் சொல்ல

”அதான் தாத்தாவும் சரின்னு சொன்னாரே”

”உன் மாமன்கள் கல்யாணத்தை நடத்த விடனுமேடா”

”பாட்டி ஒரு விசயம் அண்ணியே அண்ணனைத்தான் விரும்பறாங்க. அவங்க ஒரு வக்கீல் அதனால மாமன்களால அவங்களை எதுவுமே செய்ய முடியாது. இந்த கல்யாணத்தை நிறுத்த நினைச்சாலும் அண்ணி ஸ்ட்ராங்கா இருக்கிறதால அவங்களால ஒண்ணும் செய்ய முடியாது பாட்டி”

”நிஜமாவாடா சொல்ற, நீ சொல்ற மாதிரி என் பேரனுக்கு மட்டும் கல்யாணம் நடந்துச்சின்னா நீ என்ன கேட்டாலும் சரி இ்ந்த பாட்டி உனக்கு தருவேன்”

”நிஜமாவா பாட்டி அப்புறம் கேட்டதுக்கப்புறம் முடியாதுன்னு சொல்லமாட்டியே”

”இல்லைடா கண்டிப்பா நீ கேட்கறது எதுவானாலும் உனக்கு நான் தருவேன் போதுமா” என பாட்டி சொல்லிவிட்டு சென்றதும் பரதன் சந்தோஷத்தில் குதூகலமடைந்தான்.

அதை கவனி்த்த ஆதிபனின் தந்தையோ பரதனிடம்

”டேய் பரதா என்னடா ஆச்சி உனக்கு, கல்யாணம் உங்கண்ணனுக்குதான் உனக்கில்லை என்னவோ உனக்கே கல்யாணம் நடக்கற மாதிரி சந்தோஷப்பட்டுக்கற”

”அப்பா அண்ணாக்கு கல்யாணம் ஆனா அடுத்து எனக்குதானே கல்யாணம் ஆகும்”

”டேய் மடையா உங்கண்ணன் திலீபன் இருக்கான் மறந்துட்டியா அவனுக்கும் கல்யாணமானாத்தான் உனக்கு அதுவரைக்கும் அமைதியா இரு” என பரதனை அதட்டிவிட்டு உள்ளே சென்றுவிட்டார்.

”உங்கப்பா சொன்னதும் நிஜம்தானே முதல்ல ஆதிபனுக்கு ஆகட்டும் அடுத்து திலீபன் அதுக்கடுத்து உனக்கு சும்மா இப்படி வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காம போய் வேலையை பாரு” என பரதனின் அம்மா சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

ஆதிபன் மட்டும் தனியாக ஏதோ யோசனையில் இருப்பதை பரதனும் திலீபனும் பார்த்துவிட்டு ஆதிபனிடம் சென்று பேசலானார்கள்.

”அண்ணா என்னாச்சி அதான் தாத்தா ஓகே சொல்லிட்டாரே”

”இல்லை திலீபா நான் மாமாவை பத்தி நினைச்சேன்”

”அண்ணா விடுங்க அண்ணி ஸ்ட்ராங்கா இருக்காங்க அவங்ககிட்ட மாமன்களால ஒண்ணும் செய்ய முடியாது”

”டேய் வாயை மூடு நான் ஆதிராவோட அப்பாவை பத்தி யோசிக்கிறேன். நீயே சொல்லு அவள் எவ்ளோ அழகா இருக்கா நான் கருப்பா இருக்கேன். அதோட வயசு வேற வித்தியாசப்படுதே அவளோட அப்பா எப்படி ஒத்துக்குவாரு”

”அய்யோ அண்ணா அன்னிக்கு முதல்நாளே வெண்பா உங்க கலர் வயசு பத்தியெல்லாம் அண்ணிகிட்ட சொல்லிட்டா அதுக்கு அண்ணி என்ன சொன்னாங்க தெரியுமா கருப்பா இருந்தாலும் களையா இருக்காரு எனக்கு ஆதிபன் அத்தான்தான் வேணும்னு சொன்னாங்க. அதை நாங்க ரெண்டு பேருமே கேட்டோம் திலீபன் அண்ணா சொல்லுங்க நீங்களும் தானே கூட இருந்தீங்க” என திலீபனை துணைக்கு அழைக்க அவனும் ஆதிபனிடம்

”ஆமாம் அண்ணா நானும்தான் கேட்டேன். ரொம்ப யோசிக்காதீங்க அண்ணா ஆக வேண்டியதை பாருங்க” என திலீபன் கூறும் போதே ஆதிபனுக்கு போன் வரவும் ஆதிபன் அங்கிருந்து தனியாக அவன் அறைக்கு சென்று பேசலானான்.

மறுமுனையில் வெண்பா இருந்தாள்.

”அத்தான் நான் வெண்பா பேசறேன்”

”சொல்லும்மா ஆதிரா என்ன பண்றா”

”ஆதிராவா அவள் இப்பதான் தூங்கி எழுந்தா”

”சரி இப்ப சாயந்திரம் 6 ஆகுது நான் அவள்கிட்ட தனியா பேசனும். நீ அவளை எப்படியாவது ரைஸ்மில்லுக்கு கூட்டிட்டு வரமுடியுமா. கவலைப்படாத திருவிழாவுக்காக ரைஸ்மில்லுக்கு லீவு கொடுத்துட்டேன். அதனால அங்க யாரும் இருக்க மாட்டாங்க”

”சரிங்கத்தான் நான் முயற்சி பண்றேன்”

”இல்ல வெண்பா நீ கண்டிப்பா அவளை கூட்டிட்டு வந்தே ஆகனும்”

”ஏன் அத்தான் ஏதாவது பிரச்சனையா”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7  8  9 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகாSaaru 2018-02-08 10:20
Nice update sasi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகாSAJU 2018-02-02 09:48
ha ha superrrrrrrrrrrrrrr
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகாAdharvJo 2018-02-01 21:23
:eek: nijamave Ella drama thana facepalm anyway ivangalukk adhiban nala padam eduparun nambuvom... Adhiban oda family really super ellarum humble type but rombha emaliya irukanga ippadi ellam yaru venumnalum pesalame idhaya nambuvanga :sad: but adhira oda smartness adhiban munadi nil agapogudhey ;-) adha theriyama goat thana gate kula vandhu matikidichi :dance: indha age difference sollitte irukinga appadi ena thaa age namba herovk therindhu kola waiting...adhiban adhira oda dad meet pana poi iruparo?? Eppadi ivanga wedding nadandhadhun therindhu kola curious... I miss the fun factor in this epi :sad: matrapadi as usual super update :clap: :clap: thank you unga consistent ah long epis kodupadharkk. :hatsoff: hey marakama jewels vangi vainga patti ippadi over nalavangala irukakudadhu :P
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகாThenmozhi 2018-02-01 20:11
Super athiyayam Sasireka (y)

Thathavin kelvigalai Athira madakkiya vitham arumaiyo arumai (y) (y)

Ivanga oru suvarasiyamana kathapathiram.

nallavanganum solla mudiyalai kettavanganum solla mudiyalai.
appavinum solla mudiyalai, ethukum thuninchavanganum solla mudiyalai.

ellaame kalantha oru aacharya pada vaikkum kathapaathiram.

Intha kathaiyil core aga kavarum oru kathaapathiram. pala kathaigalil naam santhikkum kathapaathirangalil irunthu verupattu thaniye theriyum oru thanipatta kathaapathiram.

Kathanayagiyai ippadi kaata kattayam thairiyam vendum. :hatsoff: :hatsoff: to you

Padapada ena pesum Athira Athibanin ammaa anbil urugi kan kalanguvathu avangaloda innoru pakkathai azhagaa kaatugirathu (y) (y)

Aathiban, Athira irandu peril yaar yaarai yematra poranga?

Athira nadavadikaigalil irukkum marmathirkaana kaaranam enna?

Waiting to read ji :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 13 - சசிரேகாmadhumathi9 2018-02-01 18:26
:clap: aadhiraavin attakaasathirkku sariyana badhiladiyaaga amaiyum.arumaiyaana epi.aadhibanin thittam ariya varum epiyai miga aavalaaga kaathu kondu irukkirom. :thnkx: 4 this epi. (y) kathiyin vegam kooduthu. :clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top