அவள் தயக்கத்தை உணர்ந்து அவள் அருகில் சென்ற மங்களம் அவள் கையை பிடித்து கொண்டு, "மதி, ஏன் மா அமைதியவே இருக்க? இங்க வந்தது உனக்கு பிடிக்கலையா?", என்று கேட்டாள்.
"ஐயோ அப்படி எல்லாம் இல்லை அத்தை. புது இடம் அதனால கொஞ்சம் சங்கோஜமா இருக்கு. அதான்"
"இது உன்னோட வீடு டா. எங்க குடும்பம் அவமான பட இருந்த நேரத்தில் அதை துடைக்க வந்தவ நீ. இனி நீயும் இந்த குடும்பத்தில் ஒருத்தி. உள்ள இருக்குறது உன்னோட புருஷன். அவளுக்கு நிச்சயம் பண்ண பொண்ணு ஓடி போனது, அவன் மனசுல ஒரு பெரிய வலியை கொடுத்திருக்கு. அந்த வலிக்கு நீ தான் டா மருந்தா இருக்கணும். சூர்யா இருக்கானே, அவன் ரொம்ப நல்லவன். என்ன கொஞ்சம் கோபம் மட்டும் வரும். அதையும் அவன் என்கிட்ட மட்டும் தான் காட்டுவான். இனி என்னை விட நீ தான் அவனுக்கு முக்கியம். அதனால உரிமையா உன்கிட்ட கோபத்தை காட்டினா கூட கொஞ்சம் பொறுத்துக்கோ டா"
"ஹ்ம்ம் சரி அத்தை"
அதுக்கு மேல் என்ன சொல்ல எப்படி சொல்ல என்று தெரியாமல், "பாத்து நடந்துக்கோ மதி. உள்ளே போ", என்று அனுப்பி வைத்தார்.
அதே பயத்துடன் தான் உள்ளே போனாள்.
கட்டிலில் கால் நீட்டி அமர்ந்திருந்தவன், அவளை பார்த்த பின்னர் காலை மடக்கி நிமிர்ந்து அமர்ந்தான்.
"கட்டில் பெருசு தான் மதி. இங்கயே ஓரமா படுத்துக்கோ", என்று சொன்னான் சூர்யா.
"இல்லை நான் கீழயே படுத்துக்குறேன்", என்று தயக்கத்துடன் சொன்னாள் கலைமதி.
"இங்க பாய் எல்லாம் இல்லை. பரவால்ல மேலயே படுத்துக்கோ. அப்புறம் உன்னை கீழே படுக்க வச்சிட்டேன்னு உன் பிரண்ட் என்னை கொலை பன்னிற போறா", என்று சிரித்தான்.
"ஐயோ, அவ தெரியாம சொல்லிட்டா. என் மேல அவளுக்கு ரொம்ப அன்பு. நீங்க தப்பா நினைக்காதீங்க ப்ளீஸ்", என்று அவசரமாக சொன்னாள்.
"நான் தப்பா எல்லாம் நினைக்கலை. உண்மையான அன்பு கிடைக்கிறது கஷ்டம். அது உனக்கு கிடைச்சிருக்குன்னா, நான் அதை தப்பா எல்லாம் நினைக்க மாட்டேன்"
"தேங்க்ஸ்"
"ஏன் அங்கேயே நின்னுட்ட. இங்க வந்து உக்காரு", என்று சொன்னான்.
தயக்கத்துடன் அவனுக்கு மறுபுறம் கட்டிலில் அமர்ந்தாள்.
"தூக்கம் வருதா?", என்று கேட்டான் சூர்யா.
"இல்லை", என்னும் விதமாய் தலை அசைத்தாள் கலைமதி.
"அப்ப கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாமா?"
"ம்ம்ம்"
"அப்புறம், நீ இயல்பா இரு சரியா. இப்படி பயந்து பயந்து எல்லாம் என்கிட்ட பேச வேண்டாம் தைரியமா பேசு. அம்மா, அப்பா உன்னை எதுவுமே சொல்லமாட்டாங்க"
"அவங்க சொன்னா கூட என் நல்லதுக்குனு தான் எடுத்துக்குவேன்", என்று சொன்னாள் கலை மதி.
அவளை ஆச்சர்யத்துடன் ஒரு பார்வை பார்த்தவன், "நீ தான் காலேஜ் பர்ஸ்ட் டாமே?", என்று கேட்டான்.
"ஹ்ம்ம் ஆமா"
"சரி இப்படியே நல்ல படி சரியா? அப்புறம் ஐ. டீ கம்பெனியில் வேலை பாக்கணும்னு ஆசையா? இல்லை என்னை மாதிரி கவர்ன்மென்ட் வேலை பாக்கணும்னு நினைக்கிறியா?"
"முதலில் எது கிடைக்குதோ அது. வீட்ல இருந்து யாரு கிட்டயும் பணம் வேணும்னு கேக்காத நிலை வரணும்னு தான் ஆசை", என்று தயக்கத்துடன் சொன்னாள் கலைமதி.
"அது உங்க வீட்ல இருந்து சரியா? ஆனா இனி நீ இங்க என்ன வேணும்னாலும் கேக்கலாம். உனக்கு என்ன தேவையோ ஒன்னு என் கிட்ட கேளு. இல்லைனா அம்மா கிட்ட கேளு சரியா?"
"ம்ம்"
"சரி எப்படியும் நீயா எதுவும் பேச போறது இல்லை. படுத்துக்கோ. நான் தூங்க நேரம் ஆகும்"
"ஹ்ம்ம் சரி", என்று சொன்னவள் அவனுக்கு முதுகு காட்டி படுத்து விட்டாள்.
ஒரு புத்தகத்தை எடுத்து கொண்டு அதில் ஆழ்ந்து போனான் சூர்யா.
ஆனால் அடுத்த நாள் காலையில் குளித்து முடித்து வெளியே வந்த கலைமதியின் கண்கள் கலங்கி இருந்தது.
அதை பார்த்து பயந்தே போனாள் மங்களம்.
"என்ன மா ஆச்சு? எதுக்கு மதி அழுற?", என்று கேட்டாள் மங்களம்.
"அத்தை", என்று அழைத்து அவள் தோளில் சாய்ந்த மதி கூட கொஞ்சம் அழுதாள்.
"சூர்யா எதுவும் சொல்லிட்டானா மா?"
"இல்லை"
"அடிச்சிட்டானா?"
"இல்லை அத்தை"
"அப்புறம் என்ன ஆச்சு டா?"
"அது வந்து... ", என்று சொல்ல வந்தவளுக்கு மேலும் அழுகை வந்தது.
காபி வேணும்னு கேக்க வந்த சூர்யாவின் கண்ணில் மதி அழும் காட்சி கண்ணில் பட்டது. அதிர்ந்து போய் அதே இடத்தில் நின்றான்.
தித்திப்பு தொடரும்......
{kunena_discuss:1169}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.