(Reading time: 2 - 4 minutes)

கவிதைத் தொடர்கதை - பேசுவாயா தனியாக? - தொலைதூர தொடுவானமானவன் – 02 - புவனேஸ்வரி கலைச்செல்வி

distantRelation 

விரல்கள் போதவில்லை,

நட்பெனும் பூக்கள் எண்ணிட!

அந்த குழு அரட்டையில் நட்பெனும்

பூக்களுக்கு மத்தியில் என் கண்களோ வண்டின்மீது!

 

சிரிக்கிறான், சிரிக்க வைக்கிறான்!

பேசினால் பேசுகிறான்!

ஷங்கர் கவனிக்க தவறிய

வாழும் எந்திரன் இவனோ?

 

சபை நாகரீகமோ?

ஆர்வம் இல்லையோ?

முதல் வார்த்தை எனதானால்

தொடர்கதையை தொடர்வானோ?

 

ஆதிசிவனின் காலமாயினும் சரி,

சிவகார்த்திகேயனின் காலமாயினும் சரி,

 

அழகாய் தோற்றம் தரித்து,

ஆக்ககர வசனம் பேசி,

 

இனிய குரலில் பாடி,

ஈரமிகு குணத்தை காட்டி,

 

உண்மையின் பிம்பமாகி,

ஊக்கம்தரும் அன்னையாகி மங்கையே,

எடுத்துவைக்க வேண்டுமாம் முதல் அடியை!

 

குட் நைட்

எதற்கும் உதவாத இரு வார்த்தைகளாய் உதித்தவையை

எனக்காவது உதவிடும்படி ஏவி வைத்தேன்!

 

முகத்தை விட்டு ஓட முடியாமல்

கால்களின்றி தவித்தன விழிகள்!

 

கீழ் உதட்டின்மேல் கொண்ட கோபங்களை எல்லாம்

வெளிகாட்டத் தொடங்கின பற்கள்!

 

 

“READ” !

அவன் படித்துவிட்டதாய் ஒரு சமிக்ஞை!

அலையும் கடலும்,

மரமும் பட்சிகளும்,

பூமியும் சூரியனும்,

ஸ்தம்பிக்க விரும்பினேன்!

 

ஏன்?

ஏன் நானே அனுப்பியிருக்க வேண்டும்?

ஏன் நானே எதிர்ப்பார்த்திருக்க வேண்டும்?

ஏன் நானே காத்திருக்கவும் வேண்டும்?

 

சிரித்திருப்பானோ? கேலி செய்திருப்பானோ?

தவறென எண்ணிவிட்டால்?

மறுவார்த்தை சொல்லேன்டா!

 

குட் நைட் :)”

 

என்னிதழே ஏன் சிரிக்கிறாய்?

ரோமங்களே ஏன் சிலிர்க்கிறாய்?

காற்றே என் கூந்தலில் என்ன நாட்டியமோ?

விழிகளே அப்படி என்ன மலர்ச்சியோ?

போதும் என்ற மனம் கொள்!

வேதம் பேசிசிலிர்க்க உள்ளன பலநாட்கள்!

 

இனி எங்கே உறங்குவது?

இப்படியா இரு வார்த்தையில் கிறங்குவது?

 

என் இன்னிசையை கலைத்தது

“பீப்” என கைப்பேசி ஒலித்தது.

“மீண்டும் அவன் தான்!”

 

என்ன சொன்னான்னு அடுத்த முறை சொல்லுறேன்

தொடரும்...

Episode # 01

Episode # 03

{kunena_discuss:1171}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.