அழகுநிலாவிடம் பொன்னி, முதலாளி நாளைக்குதான் வருவாங்களாம் நீங்க கதவை தாழ் போட்டுட்டு தூங்குங்க அம்மா, என்று நேற்று இரவு வந்து சொன்னதை கேட்ட அழகுநிலாவிற்கு ஏனோ ஏமாற்றமாக இருந்தது. ஏன் என்று யோசிக்கையில் அவனிடம் நான் ஜானகி ஆன்ட்டிகிட்ட கூட்டிபோக சொல்லனும் என்று நினைத்தேன். ஆதித் இரவு வராததால் அவனிடம் கேட்பது தள்ளிபோவதால்தான் இந்த ஏமாற்றம் என தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். மேலும் இவ்வளவு பெரிய வீட்டில் சுற்றி கொஞ்சதூரம் வீடே இல்லாமல், பின்னால் கத்திகூப்பிட்டால் மட்டும் கேக்கும் தூரத்தில் பொன்னிவீடு.. வீட்டை சுற்றி இருந்த மரத்தின் அசைவு ஆகியவை அவளை பயமுறுத்தியது.
அவளுக்கு அவளின் அம்மா ராசாத்தியின் நினைப்பில் அழுகை அழுகையாக வந்தது.எம்மாவுக்கு நான் இப்படி வனத்துக்குள் இருப்பதுபோல் தனியாக ஒருவீட்டில் இருப்பது தெரியுமா? என்னை கோபத்தில் அப்படியே விட்டுப்போன என் அண்ணன் நான் இப்போ எப்படி இருக்கிறேன் என்று நினைத்து கவலை படுமோ? என் மதினி என்னை ஒருவார்த்தை குறைவாக பேசவிடாத என் அம்மா இப்பொழுது அதை பேசவிட்டு வேடிக்கை பார்க்குமோ? என்று அவளின் நினைவு முழுவதுவும் அவள் அம்மா வீட்டிலேயே சுற்றிவந்தது.
அவளுக்கு அவள் அம்மாவிடம் போய் நான் தப்பு செய்யலம்மா... என்னை நம்புமா... என்று சொல்லனும் போல் இருந்தது. அண்ணா நான் பேசுறத கேளுன்னா உன் தங்கச்சி தப்பு செய்யமாட்டாள்னு எப்பவும் எனக்கு சபோர்ட் பண்ணுவியே, இப்போ மட்டும் எப்படி அண்ணே என் மேல் உனக்கு நம்பிக்கையில்லாமல் போச்சு, என கேட்கனும்போல் இருந்தது, அவள் கை அன்னிச்சை செயல்போல் கை நடுங்க தன மொபைலை எடுத்து அவளது வீட்டிற்கு டயல் செய்தாள்.
அதனை எடுத்தது அவளது மதினி வாணிதான். எடுத்து ஹலோ என்றவளிடம் தயக்கத்துடன் மதினி... என்றால் அழகுநிலா. எதிர் முனையில் இருந்த அவளின் மதினி வாணி பதில் பேசவில்லை. அப்பொழுது புள்ள அழுவுரான்ல எங்க போற என்ற தன அண்ணனின் குரல் மெல்லிதாக அழகிக்கு கேட்டது. கொஞ்சம் பாத்துக்கங்க மாட்டுக்கு புல்லு போட்டுட்டு வந்துடுறேன் மாடு கத்திக்கிட்டே இருக்கு என்றவள் பேசவில்லை எதிரிலும் அமைதி.
அப்பொழுது ம்....மா... என்ற மாட்டின் ஓசையும் கன்றுகுட்டியில் கழுத்தில் கட்டியிருந்த சலங்கையில் சத்தத்திலும் அவள் அண்ணி பின் கட்டில் உள்ள மாட்டுத்தொழுவத்திற்கு வந்துவிட்டதை உணர்ந்து கொண்டால் அழகி
எனவே மறுபடி மதினி என்று அழகி கூப்பிட்டதும் யாருடி உனக்கு மதினி. கல்யாணத்துக்கு முன்னாடி ஆம்பளகூட சுத்துனவ இனி என்னை மதினினு கூப்பிடக்கூடாது, அதுதான் என் புருஷன் சொல்லிப்புட்டாருல அவருக்கு தங்கச்சின்னு ஒருத்தி இனி இல்லைனு, பிறகு எப்படி டீ நான் உனக்கு மதினி ஆவேன், ஓடுகாலி அப்படியே இருக்க வேண்டியதுதானே இனி போன் பண்ணின மருவாதை கெட்டுடும் என்றவள் தொடர்பை துண்டித்துவிட்டாள்.
அழகிக்கு வாணியின் வார்த்தைகள் நெருப்பை அள்ளி தன் மேல் போட்டதை போல் மனது எரிந்தது. அடுத்து போன் செய்து இதேபோல் அவள் அண்ணனோ அவள் அம்மாவோ பதில் கூறினால் அவளால் உயிருடன் இருக்கமுடியும் என்று தோன்றவில்லை. யாருமில்லாத அறையில் அவள் ஓவென்று வாய்விட்டு கதறி அழுதாள். நான் தப்பு செய்யலம்மா, என்ன நம்புஅண்ணே உன் தங்கச்சி தப்பு செய்யமட்டாள், என்று வாய்விட்டு புலம்பி அழுதவள். வெகுநேரம் அழுது தேற்ற ஆளில்லாமல் தேம்பியபடி எந்நேரம் உறங்கினாள் என்றே தெரியாமல் ஹாலின் சோபாவிலேயே உறங்கிவிட்டாள்
மறுநாள் காலிங் பெல் சத்தத்தில் அடித்து பிடித்து எழுந்தவள் கதவை திறகப்போகையில் அங்கிருந்த அழுயர கண்ணாடியில் அவளின் அழுது வடிந்த முகமும் கண்ணும் வீங்கி இருப்பதை பார்த்தவள் வேகமாக வாஸ் பேசனுக்கு ஓடி முகத்தை கழுவியவள் துப்பட்டாவில் துடைத்துவிட்டே கதவை திறந்தாள்
அந்த பங்களாவில் வேலைசெய்யும் மாரியப்பனின் பெரியப்பா மகன்தான் ஜானகியின் வீட்டில் வாட்ச்மேனாக வேலைபார்பவன், அவன் மாரியப்பனிடம் போனில் காலையில் ஜானகி வீட்டில் நடந்த கலவரத்தையும் அதனால் அந்த வீட்டின் முதலாளியம்மா ஜானகி மூர்ச்சையாகி ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகியிருக்கும் விஷயத்தை கூறியிருந்தான் .அதை அவனும் தன மனைவி பொன்னியிடம் கூறியிருந்தான்
எனவே கதவை திறந்த அழகுநிலாவின் அழுது வீங்கிய கண் இமை முகத்தை பார்த்து பொன்னி வருத்தப்படாதீங்க அம்மா, பெரியஅம்மாவுக்கு எதுவும் ஆகாது அவங்க நல்லபடி பிழைத்து எழுந்துகொள்வார்கள் ரொம்ப நல்லமனுசி வீடு பால்காச்சும்போது இங்க வந்திருக்காங்க ஒவ்வொரு வருசமும் பொங்கல் தீபாவளிக்கு நம்ம ஐயா கைநிறைய காசுகொடுத்தாலும் அங்க பெரிய வீட்டுக்குபோனா புதுசு குடுத்து பலகாரம் பணமெல்லாம் கொடுத்து பெத்த தாய் மாதிரி அன்பா பேசுவாங்க.
அப்படிப்பட்ட மகராசிக்கு எதுவும் ஆகாது நீங்க அழுவாதீங்க என்று ஜானகி ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கும் விஷயம் தெரிந்துதான் அவள் அழுததாக நினைத்து கூறினாள்.
முதலில் யாருக்கு ஒன்றும் ஆகாது என்று கூறுகிறாள் என்று புரியாமல் அவள் பேசுவதை கேட்ட அழகுநிலா பின்பு பெரியம்மானு ஜானகி ஆன்ட்டியைதான் கூறுகிறார்களோ! என்று சந்தேகம் வந்தது எனவே பதற்றத்துடன் ஜானகி ஆன்ட்டியையா ஹாஸ்பிடலில் சேர்த்திருகிறார்கள் என்று கேட்டாள் அழகி
Adhith nila Marriage super
JANAKIMAAA YELUNTHU VATHURUNNGAAAA
Nice and interesting EPI but little sad update.
With all medical advancement, will Janaki back home.
Or you plan to keep full stop for that character.
All of the above, emotional epi. Thank you.
evlo periya manusannalum manaivikku onnuna evlo feel panaranga .... so love....
tanaku kastam varum podu nama namma masukku pedichsavangala tan teduthu adhu evlo uruthiyana manusana irundalum oru thunai kandippa venum......
Ipo adith appave nila veetla pooi pesararu..
Avanga othukuvangala??
Adith dhan pavam sis
Avanga amma ku seekiram seri aaganum.
But sad as well.