(Reading time: 21 - 41 minutes)

ஆமாம்மா என்று பேச்சுவாகிலேயே பொன்னி பதில் அழித்ததும். எந்த ஹாஸ்பிடல் நான் அங்க போகனுமே! அச்சோ.. எதுவும் ஆகக்கூடாது என்றவள் வேகமாக ஓடிப்போய் அவளின் போனை எடுத்து ஆதித்துக்கு போன் செய்து விசாரிக்க நினைத்தாள் அப்பொழுதுதான் அவனின் மொபைல் நம்பரே அவளுக்கு தெரியாது என்பது உரைத்தது.

பொன்னி உங்க ,முதலாளி நம்பர் சொல்ளுங்களேன் அவர்ட்ட நான் பேசணும் என்று பரபரத்தாள்,

அப்பொழுதான் பொன்னி உணர்ந்தால் அழகுநிலவிற்கு ஜானகி அம்மா உடலுக்கு முடியாத விசயமே தெரியாது என்பதை மேலும் என்னம்மா... ஐயா போன் நம்பர் உங்களுக்குத் தெரியாதா? என்று சந்தேகத்துடன் அவளிடம் கேள்விகேட்டாள் பொன்னி. மேலும் விஷயம்தெரியாம இந்த அம்மா எதுக்கு அழுது முகத்தை வீங்க வச்சுருக்கு என்று யோசனையுடன் அவளை பார்த்தாள்.

தான் கேட்டும் பொன்னி கொடுக்காமல் குழப்பப்த்துடன் இருப்பதை பார்த்த அழகி அவளிடம் இப்போ உங்களால் அவர் நம்பர் சொல்லமுடியுமா முடியாதா என்று அழுத்திகேட்டாள்

இதோ என் மாமாட்ட கேட்டு சொல்றேன்மா என்றபடி மாரியப்பனை மாமோவ் என்று வாசலில் நின்று கூப்பிட்டாள் பொன்னி. அவளின் குரலில் குழந்தையை வைத்திருந்தவன் அவனோடு அங்கு வரவும் நம்ம அய்யா போன் நம்பர் கேக்குறாங்க என்று சொன்னதும் அவனும் என்ன அவங்களுக்கு தெரியாதா? என்ற பாவனையுடன் பொன்னி முகத்தை பார்த்தாலும் ஆதித்தின் மொபைல் நம்பரைசொல்லத் தவறவில்லை

அவன் சொல்லச்சொல்ல தனது போனில் நம்பரை டயல் செய்து ஆதித்துக்கு அழைத்தாள் அழகுநிலா

இரண்டு மூன்று ரிங் போனபின்பே ஆதித் மொபைலை அட்டன் செய்தான் அழகுநிலாவிற்குத்தான் அவனின் நம்பர் தெரியாது ஆனால் ஆதித் அவளின் நம்பரை அன்று கோவில் விட்டு வந்ததுமே தன அம்மாவின் மொபைலில் இருந்து சுட்டு தன மொபைலில் பதிந்து வைத்திருந்தான்

அதுவரை தன அம்மாவை பற்றிய கவலையிலேயே இருந்த ஆதித் அழகுநிலாவின் நம்பர் பார்த்ததும் இப்பொழுது அவளிடம் தன அம்மாவின் நிலமையை சொல்வோமா வேண்டாமா? என்ற யோசனையுடனே அதனை எடுத்து காதில் வைத்தான்

ஹலோ நீங்க நீஙகதனே என்று பதட்டத்துடன் அவள் பேசியதுமே, ஆதித் அவளுக்கும் அங்கே எதுவோ பிரச்சனையோ என்று கலவரமானான்

எனவே, ஏய் அழகி நான் ஆதித் தான் என்ன... என்ன சொல்லு என்று கேட்டான்

தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாத இந்த நிலைமையிலும் தன்னை விசாரிக்கும் அவனின் அக்கறையை பார்த்து நேற்று தனது மதினி பேசிய வார்த்தைகளுக்கு இவனின் அக்கறையான வார்த்தை ஆறுதலாய் இருந்தாலும் அவனின் அம்மா ஜானகியின் நினைவில் நெஞ்சம் கனக்க ஆன்ட்டிக்கு என்ன? ஹாஸ்பிடலில் இருகிரார்கலாமே!, சீரியஸாக எதுவும் இல்லையே என்று கேள்விகளை அடுக்கினாள்.

அவ்வளவுநேரம் திடமாக இருப்பதுபோல் வெளியே காட்டிக்கொண்டு அங்கிருந்த ஆதித்துக்கு, அழகுநிலா அவனின் அம்மாவை பற்றி விசாரித்ததும் துக்கத்தில் தோள் சாய கிடைத்த துணை போல் அவளின் குரல், இதுவரை தனக்குள் அடக்கி வைத்திருந்த துக்கம் தொன்டையை அடைக்க, அழகி......என் அம்மா....எனக்கு பயமா இருக்கு, டாக்டர் சீரியஸ்னு சொல்றாரு.என்று உடைந்த குரலில் கூறினான்

அவனின் குரலில் இருந்த துக்கம் அவளை கொன்று தின்றது. அவளுக்கு அவனின் துக்கத்தை உடனே போக்கிவிடவேண்டும் அவனின் துயர் தாங்க அவனுக்கு தோள்கொடுக்க உடனே அவனிடம் செல்லவேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது ஜானகியின் நிலைமை அவளை பெரிதும் பாதித்ததுதான் அதில் ஆதித்தனின் கலக்கம் அவளின் உயிரையே உலுக்கியது .

ஆன்ட்டிக்கு ஓண்ணும் ஆகாது நீங்க எந்த ஹாஸ்பிடலில் அட்மிட் செய்திருகிறீங்க நான் இபோ அங்க வரேன். நீங்க தைரியமா இருக்கனும் நீங்க இப்படி இருந்தா அங்கிளை யார் தேற்றுவார்கள் என கூறினாள்.

அவள் ஹாஸ்பிடல் வருகிறேன் என்றதும் வேண்டாம் அழகி! நீ இப்போ இருக்கிற சூழ்நிலையில் தனியா வருவது பாதுகாப்பு கிடையாது என்று அப்பொழுதும் மினிஸ்டரை நினைத்து அவளின் பாதுகாப்பிர்க்காக அவன் கூறினான் . ஆனால் அவள்,

இல்லை ஆதித்! நான் வந்துருவேன் பத்திரமா வந்துருவேன் என்னால் ஆன்ட்டிக்கு என்னாச்சோ என்று தெரியாமல் நிம்மதியா இங்க இருக்க முடியாது. ப்ளீஸ்... ஹாஸ்பிடல் நேம் சொல்லுங்க என்று பிடிவாதமாக அவள் கூறவும்

சரி நீயா வரவேண்டாம் நான் கார் அனுப்புறேன் அதில் வா என்றவன் குரல் பழைய தோரணைக்கு வந்துவிட்டது .

அங்கு நின்றிருந்த ட்ரைவர் முருகனை அழைப்பதற்காக அவன் புறம் திரும்பியதும் முருகனே அவனின் அருகில் வந்து சொல்லுங்க சின்னையா என்றார் பரிவுடன். தன்னுடைய கார் கீயை அவரிடம் கொடுத்த ஆதித் என்னோட ஓ எம் ஆர் வீடு தெரியும்ல என்று கேட்டான். அதற்கு ம..தெரியுமே என்றான் முருகன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.