(Reading time: 21 - 41 minutes)

அவன் அவ்வாறு கூறியதும் ஜானகியின் கண்கலிலும் கண்ணீர் வழிந்தது. மெல்லிய குரலில் கண்டிப்பா உன்னை தனியா நான் விட்டுட்டுப் போகமாட்டேன் எனக்கடுத்து உனக்கு துணையாய் மனைவியாய், தாயாய் அழகுநிலா இருப்பா உங்க இரண்டுபேருக்கும் கல்யாணம் முடிந்தால்தான் நான் நிம்மதியாக கண் மூடுவேன் என்றார்.

நீங்கள் நல்லபடி எழுந்து வீட்டிற்கு வந்து எங்க கல்யாணத்தை நடத்துவீங்க அம்மா என்றான் ஆதித்.

ஆனால் இந்த சில வார்த்தைகளுக்கே அவளுக்கு மூச்சு வாங்க ஆரம்பித்தது. உடனே அங்கு விரைந்து வந்த நர்ஸ் பேசன்ட் ரொம்ப பேசக்கூடாது என்றவள், ஜானகியிடம் நீங்க உங்க பையன் கூட பேசணும் என்று கண் விழித்ததும் சொன்னீங்க என்பதற்காகத்தான் அவங்களை உள்ளே கூட்டிட்டு வந்தேன்

அவங்களை பார்த்துட்டீங்கள இப்போ அவங்களை அனுப்பிடலாம் என்றவர் அவளுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க்கை மாட்டி விட்டார்.

ஆதித் அங்கிருந்து அவன் அம்மா மூச்சுவிட கஸ்ட்டப்படுவதை பார்க்க முடியாமல் வெளியில் செல்ல ஜானகியின் கையில் இருந்து தன கையை உருவிக்கொள்ள நினைத்தான்.

ஆனால் ஜானகி அவனின் விரலை போகவேண்டாம் என்று இருக்க பற்றினாள் தலையை போகவேண்டாம் என்று அசைத்தாள்.

நர்ஸ், ஜானகி இன்னும் பேச நினைப்பதை கண்டு ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க மா... பாருங்க மூச்சு விட கஷ்ட்டமா இருக்குது பாருங்க என்றவர் மாஸ்க்கை எடுத்துவிட்டு ஆதித்தின் புறம் பார்த்து ரொம்ப எமோஷனாகாம பார்த்துக்குங்க என்றவர் ஜானகிக்கு ஏறிகொண்டிருந்த குளுக்கோஸ் பாட்டிலில் அவள் அப்போதைக்கு பேச தெம்பு ஊசி மருந்தை செலுத்தினார்.

இதை எல்லாம் கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்த அழகுநிலாவை பார்த்த ஜானகி அவளை வா என்று இன்னும் அவரை நெருங்கி வரச்செய்ய்து மெல்லிய குரலில் என் மகனை கல்யாணம் செய்துகொள்ள உனக்கு சம்மதம் தானே என்று கேட்டார்

அவர் கேட்டதும் அழகுநிலாவின் பார்வை டக்கென்று ஆதித்திடம் சென்றது அவளை பார்த்துக்கொண்டிருந்த ஆதித்தின் முகமோ கல்லாக இறுகியிருந்தது மேலும் இப்பொழுது ஜானகி இருக்கும் நிலையில் அவளிடம் மறுத்தோ வேறு எதுவுமே பேசமுடியாது என்பதை உணர்ந்து கொண்ட அழகுநிலா சம்மதம் ஆண்ட்டி என்று கூறினாள்.

அவள் கூறியதை கேட்ட ஜானகி அப்பாவை வரச்சொல் ஆதித் என்றதும் அழகுநிலாவை அங்கு விட்டுட்டு வேலாயுதத்தை கூட்டிவரசென்றான் ஆதித்.

அவன் சென்றதும் அழகுநிலா ஜானகியின் கைகளை ஆதரவாக பிடித்தாள். அப்பொழுது ஜானகி மெதுவாக, நிலா ஆதித் பெற்றவர்களாகிய எங்களையே நான் அவரின் இரண்டாம் தாரம் என்று பதிமூன்று வயதில் தெரிந்ததில் இருந்து ஒதுக்கி வைத்திருந்தான். அவன் படிப்பு முடித்து தொழில் தொடங்க நினைத்தபொழுது அவன் ஏற்கனவே இரண்டுவருடம் அப்ராட் போய் சம்பாதித்த பணத்துடன் லோனுக்கு ஏற்பாடு செய்திருந்தான். அவனின் பணத்தேவையை பேங்க் மேனேஜரின் மூலம் கேள்விப்பட்ட அவன் அப்பா என்னிடம் சொன்னார், நான் அவன் முதலீடுக்கு பணம் கொடுக்க முயன்றபோது அதனை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டான். அப்போது வந்த அவர் எங்கள் கல்யாணம் நடந்த சூழ்நிலையை விபரித்ததும் தான் என்மேல் தவறு இல்லை என்று தெரிந்த பின்பே அந்த பணத்தை என் திருப்திக்காக வாங்கிகொண்டான். அதில் இருந்துதான் என்னிடமும் கொஞ்சம் பேச ஆரம்பித்தான்.

எங்களை பார்த்து அவனுக்கு கல்யாணத்தின் மீது விருப்பமில்லாமல் போய்விடுமோ! என பயந்தேன். ஆனால் என்று உன்னை அவனுடன் பார்த்தேனோ! அன்றிலிருந்தே என் பயம் மறைந்துவிட்டது. மேலும் நீ வீட்டிற்கு வந்த மறுநாளே நீ அவனின் பிறந்தநாள் பரிசை எங்கள் இருவரையும் சேர்ந்து நின்று ஆசி கூறசொல்லி அவனை பெற வைத்தாயே அப்பொழுதுதே நீதான் அவனின் வாழ்க்கையில் உயிர்ப்பை கொண்டுவரமுடியும் . அவனை நல்ல குடும்ப சூழலுக்குள் உன்னால் மட்டுமே கொண்டுசெல்ல முடியும். நீதான் எனக்கு மருமகளாக வரவேண்டும் என ஆசை பட்டேன் என கூறினாள்

அழகுநிலவிற்கு ஜானகியின் வார்த்தையை கேட்டதும் கேள்விகள் பல நெஞ்சில் எழுந்தது ஆனாலும் அவளாலும் ஜானகியை தவறானவளாக நினைக்க முடியவில்லை. தனக்கு அவரும் அவரின் மகனும் செய்திருக்கும் உதவிக்கு அவர்களுக்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்று முடிவெடுத்தாள்.

அவள் யோசனையுடன் இருப்பதை பார்த்து இன்னும் என்னயோசனைமா? என்று கேட்டார் ஜானகி .என் வீட்டை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது ஆண்ட்டி என்றால் அழகுநிலா

உனக்கு ஆதித்தின் அப்பாவை பற்றி தெரியாது அவர் கண்டிப்பா உன் வீட்டில் பேசி சம்மதிக்க வைப்பார் என்று மெல்லியகுரலில் சொன்னாள் ஜானகி. அவர் கூறியதற்கு அவளும் அவளை பார்த்து இயல்பாகும் முயற்சியில் அப்போ இனிமேல் நான் உங்களை அத்தைனுதான் கூப்பிடனும் உங்க வீட்டில் நான் வாழனும்னா என் கூட மாமியார் மருமக சண்டை பிடிக்க நீங்களும் அங்க இருக்கணும் அதனால சமத்தா உடம்ப தேத்திட்டு வீட்டுக்கு வருகிற வழியப்பாருங்க மாமியாரே... என்று கூறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.