(Reading time: 18 - 36 minutes)

அந்து நொடி அவள் கண்ணிலிருந்த வெளியேறிய இரு சொட்டு நீர்....சரயூ தன்னை ஒருமுறையேனும் பார்த்து விட மாட்டாளா என்று அவளையே கவனித்திருந்தவனுக்குள் வேதனையை விதைத்தது. 

இதை பற்றி அவளிடம் பேச வேண்டும், அவளின் இன்றைய மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும், இவர்களிடையே ஏற்பட்ட இந்த நான்கு வருட பிரிவிற்கும் சேர்த்து பேச வேண்டும், அவளின் கோபம், சந்தேகம், குழப்பம், கேள்விகளென எல்லாவற்றையும் பேசி தெளிய வேண்டும், கடைசியாக அவர்களின் எதிர்கால வாழ்க்கையை குறித்து பேச வேண்டும், அவளுக்குள் இருக்கும் காதலை உணர்த்திட வேண்டும், அதன் பிறகே அவர்களின் வாழ்க்கையை தொடங்க வேண்டுமென பல வேண்டும்களை, அவளுக்காக காத்திருந்த நேரத்தில் கணக்கிட்டிருந்தான்.

பயத்தில் கைகால் நடுங்க உள்ளே வந்தவள், அங்கு யாருமில்லாததை கண்டு ஆசுவாசமாக நிற்க....அவள் பின்னாலிருந்து திடீரென்று தோன்றிய ஜெய், அவளுக்கு மிக அருகில் நடந்து அவளை கடக்கவும்...குறைந்திருந்த பயம் மீண்டும் தலைதூக்க அவசரமாக நகர்ந்தவளின் தலை, அலங்கார விளக்கு மாட்டப்பட்டிருந்த கம்பியில் இடிக்க மயங்கி சரிந்தாள்.

பாய்ந்து வந்து அவளை தாங்கியவன், அவளை படுக்கையில் கிடத்திவிட்டு முகத்தில் தண்ணீரை தெளித்து அவள் கன்னம் தட்டி எழுப்பினான்.

“சரூ! எழுந்திருடா....தப்பு என் மேலதா.  உனக்கு பயம் காட்டனும்னு எல்லா செய்யலை.  நீ இப்படி எழுந்துக்காம இருக்கறதுதா பயமாயிருக்குடா.  ப்ளீஸ் சரூ...கண்ணை திற”

உடையை மாற்றி கொண்டு ட்ரெஸ்ஸிங்க் ரூமிலிருந்து வெளிவந்தவனே அப்போது தான் சரயூவை கவனித்தான்.  அவன் என்னவோ சாதாரணமாக அவளை கடக்க... முதலே பயத்திலிருந்தவள் இவன் பின்னாலிருந்து வந்ததும் பயந்து போனாள் என்று புரிந்தாலும் தன்னை தானே திட்டிக்கொண்டவன், யாரை உதவிக்கு அழைக்கலாம் என்று யோசித்தவனுக்கு சங்கடமாக இருக்கவும், மறுபடியும் அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தான்.

சற்று நேரத்தில் கண் திறந்தவளின் பார்வையில் ஜெய் விழவும் கலங்கினாள்.  அவளின் கலக்கத்தை போக்க, என்ன நடந்ததென்று விளக்க, “உனக்கு ஒன்னுமில்லைடா! நான் ட்ரெஸ்ஸிங்க் ரூம்லிருந்து வரவும் நீ பயந்துட்ட....அங்க பாரு, கதவு கூட லேசா திறந்திருக்கு” அவன் காட்டிய திசையில் பார்த்தவளின், கண்களின் கலக்கம் சற்றும் குறையாதிருக்கவும்....

அவளுக்கு நம்பிக்கையூட்ட, “பாரு! நான் வேட்டி சட்டையை மாத்திட்டு காஷுவல்ஸ் போட்டிருக்க” என்று அவனையே குனிந்து பார்த்தான்.  அவ்வளவு தான் அவள் கண்கள் அவசரமாக படுத்திருந்த அவளின் ஆடையை ஆராய்ந்த அடுத்த நொடி, சுருட்டி கொண்டு எழுந்தவள் நகர்ந்து மெத்தையின் மறுபக்கத்தில் இருந்த சுவரோடு ஒண்டினாள். 

“ப்ளீஸ் சரூ! இப்படி என்னை கொல்லாதே! ஒவ்வொரு முறையும் நீ என்னை பார்த்து பயப்படும் போதும், என் உயிர் போய் உயிர் வருது தெரியுமா?” என்றவன் அவளிடம் எந்த மாற்றத்தையும் காணாததால், என்ன நினைத்தானோ, “நான் அடுத்த ரூமுக்கு போற.  நீ கதவை உள்பக்கமா பூட்டிக்கோ” என்றவனின் பேச்சும் உடலும் இறுகியிருக்க... நெஞ்சமோ துக்கத்தில் குமுற அங்கிருந்து வெளியேறினான்.

அடுத்த அறைக்கு வந்தவனோ எதை எதையோ யோசித்து...யோசனையின் முடிவில் எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கையோடு படுத்திருக்க....இங்கோ, நெஞ்சில் மூண்டிருந்த வஞ்சத்தோடு கணவனை பழிவாங்க காத்திருந்தாள் சரயூ.

Episode 22

Episode 24

முத்து ஒளிரும்…

{kunena_discuss:1038}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.