(Reading time: 20 - 39 minutes)

நீ அவனை பாராட்டிட்டே இரு. அவன் உனக்கு அடிமை ஆகிருவான். சரி அம்மா இல்லாம ரொம்ப கஷ்ட பட்டுருப்பல்ல? வள்ளி தான் உனக்கு சித்தி. அவ குணம் எங்க எல்லாருக்குமே தெரியும். ஆனா சண்முகம் அண்ணன் நல்லவர் தான? அவர் கூட உன்னை பாத்துக்காம விட்டுட்டாரா?"

"அப்பாவை எதுவும் சொல்லாதீங்க அத்தை. அப்பா என்னை கண்டுக்காம இருந்ததுக்கு எதாவது காரணம் இருக்கும். ஒரு வேளை அவர் என் மேல அன்பு காட்டினா, சித்தி என்னை எதாவது சொல்லுவாங்களோன்னு அப்பா நினைச்சிருக்கலாம்"

"எல்லாருக்கும் சப்போர்ட் பண்ற. எங்க வீட்டுக்கு, அழகான தேவதையே மருமகளா வந்திருக்கா. ரொம்ப சந்தோசமா இருக்கு", என்ற படியே அவளை அணைத்து கொண்டாள் மங்களம்.

வந்த கண்ணீரை அடக்கி கொண்டு, தன்னுடைய அறைக்கு போக திரும்பினான் சூர்யா. அவனுக்கு பின்னாடி, அப்பாவும், மாமாவும் கண்ணில் நீர் பெருகி நின்றிருப்பதை பார்த்தவன் திகைத்து விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டான்.

"அழாத மாப்பிள்ளை. மதி உனக்கு மகளா பிறந்ததும் நீ ரொம்ப குடுத்து வச்சிருக்க", என்ற படியே சண்முகத்தை அழைத்து கொண்டு போனார் சுப்ரமணியம்.

அறைக்கு வந்த சூர்யாவுக்கு அவள் முகமே கண்ணில் வந்தது.  "ஒரு நிமிசத்துல கதி கலங்க வச்சிட்டா", என்று நினைத்தவனுக்கு இரவு நடந்தது நினைவு வந்தது.

"தண்ணீர் குடிக்கலாம்", என்று எழுத்து விடி விளக்கை போட்டவன், அங்கு இருந்த செம்பில் இருந்த நீரை எடுத்து பருகினான்.

அப்போது தான் அவன் கண்ணில் கலைமதி விழுந்தாள்.

எத்தனை வருஷம் தனியா தூங்கிருக்கேன்? ஆனா இன்னைக்கு மதி என் கூட படுத்திருக்கா. இனி காலம் புல்லா, இவ என் பக்கத்தில் தான் படுத்திருப்பா. ஒரு தாலி கட்டினதுனால உருவான சொந்தம் எவ்வளவு பெருசு? முன்னோர்களோட பாரம்பரியம் உயர்ந்தது தான். கடைசி வரைக்கும் கூட வரதுனால தான் பொண்டாட்டியை துனைவின்னு சொல்றாங்களோ", என்று நினைத்து கொண்டே அவளை பார்த்தான்.

அவள் குளிரில் கால்களை குறுக்குவது புரிந்தது.

"குளிருது போல", என்று நினைத்து, ஏ. சி யை சிறிது குறைந்தவன், தன்னுடை போர்வையை எடுத்து அவளுக்கு மூடி விட்டான்.

ஏனோ மனது  அமைதியாக இருந்தது அவனுக்கு. சிறு குழந்தை போல் தூங்கும் அவளை சிறிது நேரம் பார்த்து கொண்டே படுத்தவன், விடி விளக்கை அணைக்க கூட மறந்து அப்படியே தூங்கி விட்டான்.

இப்போது அதை யோசித்து பார்த்தவன் "நான் செஞ்ச ஒரு சின்ன விஷயத்துக்கு இப்படி அழுறான்னா, அவ மனசு எந்த நிலைமைல இருக்கும்? தெரியாம கூட அவளை கஷ்ட படுற மாதிரி பேசிற கூடாது", என்று நினைத்து கொண்டு அமர்ந்திருந்தான்.

"காபி குடிக்கிறியா மதி?", என்று கேட்டாள் மங்களம்.

"அப்புறம் குடிக்கிறேன் அத்தை", என்று சிரித்தாள் மதி.

"அப்ப, இந்தா. உன் புருஷன் எந்திச்சிருப்பான். அவன் கிட்ட போய் கொடுத்துட்டு வா", என்று அவள் கையில் டம்ளரை திணித்தாள் மங்களம்.

"நான் எப்படி காபி கொடுக்க?", என்று நினைத்து கொண்டே மறுக்க முடியாமல் "கடவுளே! அவன் எந்திரிச்சுருக்க கூடாது. அப்படி தூங்கிட்டு இருந்தா, அத்தை கிட்ட தூங்குறாங்கன்னு சொல்லிறலாம். எனக்கு அத்தான் கிட்ட பேசவே திக்கு திக்குன்னு இருக்கு", என்று நினைத்து கொண்டே உள்ளே சென்றாள்.

அங்கே உள்ளே வரும் அவளையே பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான் சூர்யா.

"ஐயோ முழிச்சு தான் இருக்கான்", என்று நினைத்து கொண்டு அவன் அருகில் சென்றாள்.

தைரியத்தை வரவழைத்து கொண்டு, "அத்தை கொடுத்து விட்டாங்க", என்று சொல்லி அவன் முகம் பார்க்காமல் கொடுத்தாள் கலை மதி.

அவள் முகத்தையே பார்த்து கொண்டிருந்தவன், ஒரு சிரிப்புடன் அதை வாங்கி கொண்டான்.

உடனே வெளியே போக திரும்பியவளை "கலை", என்று அழைத்தான் சூர்யா.

"ம்ம்", என்ற படியே திரும்பினாள் மதி.

"காலேஜ் நேரம் ஆகலையா?"

"ஏழு தான ஆகுது? எட்டு மணிக்கு வீட்ல இருந்து கிளம்பினா சரியா இருக்கும்", என்று சொன்னவள் அடுத்து "எப்படி கேக்க?", என்று அவனை பார்த்தாள்.

அவள் பார்வையை உணர்ந்து "எதாவது கேட்கணுமா?", என்று அவளிடம் கேட்டவன் "இவ மனசுல நினைக்கிற பாஷையை முதலில் படிக்கணும்", என்று நினைத்து கொண்டான்.

"ஹ்ம்ம். அது.. அது வந்து, இங்க இருந்து எப்படி பஸ் ஸ்டாண்ட் போக? அங்க போனா தான் காலேஜ்க்கு போக முடியும்?", என்று திக்கி திணறி கேட்டாள்.

"இங்க இருந்து உங்க காலேஜ்க்கே அடிக்கடி பஸ் இருக்கு. ஆனா பஸ் ஸ்டாண்ட் தான் கொஞ்சம் தூரம்"

"நடந்தா, எவ்வளவு தூரம் ஆகும்?"

"கால் மணி நேரம் ஆகும். அப்புறம் அது கவலை படாத. நான் கொண்டு போய் விடுறேன்"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.