(Reading time: 20 - 39 minutes)

"நீங்களா? நீங்க வேலைக்கு போகணுமே?"

"எனக்கு பத்து மணிக்கு போனா போதும். இங்க கிட்ட தான்"

"ஓ சரி", என்ற படியே வெளியே போக திரும்பினாள் கலைமதி.

மறுபடியும் "கலை", என்று அழைத்தான் சூர்யா.

இப்பவும் "ம்ம்", என்ற படியே தான் திரும்பினாள்.

அவள் தயக்கத்தை பார்த்து சிரிப்பு வந்தாலும், அதை அடக்கி கொண்டு "உன் அத்தானை, போர்வை மூடி விட்டதுக்கு பாராட்டணும்னு நினைச்சா என்கிட்டயே நேரடியா பாராட்டிரு என்ன? அம்மா கிட்ட சொல்லி தான் பாராட்டணும்னு இல்லை", என்று சொல்லி கொண்டே எழுந்து குளியல் அறைக்குள் சென்று விட்டான்.

ஆ என்று வாயை பிளந்து கொண்டு நின்றாள் மதி. "அத்தை கிட்ட பேசினதை, இவன் எப்ப கேட்டான்? நான் ஒரு லூசு. சே என்ன நினைச்சிருப்பான்? அழுமூஞ்சின்னு முடிவு பண்ணிருப்பான். அவன் இருக்கான்னு தெரியாமலே அவனை பத்தி பேசியிருக்கேன்", என்று நினைத்து கொண்டு தலையில் அடித்து கொண்டு வெளியே போனாள்.

அடுத்து நேரம் வேகமாக சுழன்றது. ஏற்கனவே குளித்து முடித்து சுடிதார் அணிந்திருந்ததால், தலை மட்டும் வாரி முடித்து விட்டு, முகத்தில் பவுடரை பூசி விட்டு தன்னுடைய காலேஜ் பேகை எடுத்து வைத்து கொண்டிருந்தாள் மதி. 

அப்போது தலையில் ஈரம் சொட்ட சொட்ட, உடம்பிலும் ஈரம் வழியே, இடுப்பில் துண்டோடு உள்ளே வந்தான் சூர்யா.

அந்த தோற்றத்தில் அவனை எதிர்பார்க்காததால், அதிர்ச்சியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள். அவனும் அவள் இருப்பாள் என்று மறந்து போய் வந்து விட்டான்.

அவள் அதிர்ச்சியை பார்த்தவன், "குண்டு போட்டா கூட இப்படி முழிக்க மாட்டா போல", என்று நினைத்து கொண்டு அங்கு இருந்த பீரோவை திறந்து அவனுடைய உடையை எடுத்தான்.

விட்டால் போதும், என்று நினைத்து வெளியே ஓடியே போனாள் மதி.

"திடிர்னு உள்ள வந்தாலும் வந்துருவா. அப்புறம் இன்னும் பேய் முழிப்பா", என்று நினைத்து கொண்டு கதவை பூட்டி விட்டு ஒரு டீ ஷர்ட்டையும், லுங்கியையும் மாத்தி விட்டு வெளியே வந்தான். 

"எங்க போய்ட்டா? எங்கயாவது பதுங்கி இருக்காளா?", என்ற படியே அவன் கண்கள் அவளை தேடியது.

சமையல் அறையில் "உன் மாமாவும், அப்பாவும் சாப்பிட்டுட்டு வெளிய போய்ட்டாங்க. உனக்கு மதிய சாப்பாடு அடைச்சிட்டேன். இந்தா மதி, ரெண்டு தோசையை சாப்பிடு", என்று தட்டை கலை மதி கையில் கொடுத்தாள் மங்களம். 

"அத்தானும் குளிச்சிட்டாங்க அத்தை. அவங்க சாப்பிடலையா?" 

"அவன் அப்பறமா தான் சாப்பிடுவான். நீ டேபிள்ள உக்காந்து சாப்பிடு. அடுத்த தோசை சுட்டு எடுத்துட்டு வரேன்"

"எனக்கு இதே போதும் அத்தை"

"என்ன போதும்? இது மெல்லிசா தான் இருக்கு. இன்னும் ஒண்ணாவது சாப்டுட்டு போ"

சிரித்து கொண்டே வெளியே வந்தவள் எதிரே வந்த, சூர்யாவை பார்த்து தலையை குனிந்து  கொண்டாள்.

"என்னை பாத்ததும்  தலை உள்ள போயிருச்சு? இவளை மாத்துறது கொஞ்சம் கஷ்டம் தான்", என்று நினைத்து கொண்டு டிவி ஆன் பண்ணி நியூஸ் சேனலை வைத்தான். 

சாப்பிட்டு முடித்தவள், மங்களம் சொல்ல சொல்ல கேக்காமல், அவள் தட்டையும் கிடந்த கொஞ்ச பாத்திரத்தையும், விளக்கி வைத்தாள்.

அவன் டிவி பார்ப்பதை உறுதி செய்து விட்டு அறைக்குள் போய், தன்னுடைய பேகை எடுத்து கொண்டு வந்தாள். 

"இப்ப எப்படி அவன் கிட்ட போகலாமான்னு கேக்க", என்று முழித்தவள் அப்படியே அங்கே இங்கே அலைந்து கொண்டிருந்தாள்.

அவள் செய்கையை உணர்ந்தவன், "எப்படி சுத்திட்டு இருக்கா பாரு. கிளம்பலாமான்னு கேக்க இவ்வளவு தயக்கமா?", என்று நினைத்து கொண்டு அவனே "கலை கிளம்பலாமா?", என்று அழைத்தான்.

"ஆன் போலாம் அத்தான். வரேன் அத்தை. மாமா, அப்பா கிட்ட சொல்லிருங்க", என்று சொல்லி விட்டு அவன் அருகே சென்றாள். 

தன்னுடைய காரை வெளியே எடுத்தவன் "உக்காரு", என்றான்.

நேற்றே மாதிரி பின்னே அமர போனவளை, "முன்னாடி ஏறு கலை", என்றான்.

"முன்னடியா?", என்று திரு திருத்துவிட்டு ஏறி அமர்ந்தாள்.

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு காரை எடுத்தான். அமைதியாக வெளியே பராக்கு பார்த்து கொண்டு வந்தாள் மதி.

சிறிது தூரம் சென்றதும் "இது தான் பஸ் ஸ்டாண்ட்", என்றான் சூர்யா.

அவனை பார்த்து திரும்பியவள், உடனேயே பஸ் ஸ்டாண்டை பார்வை இட ஆரம்பித்தாள்.

"இங்க இறங்கி, உங்க காலேஜ் பேர் சொன்னாலே, போதும். காலேஜ்  முன்னாடியே நிப்பாட்டிருவாங்க. எல்லா பஸ்சும் அந்த வழி தான் போகும்"

"ஹ்ம்ம் சரி. இறங்கிக்கவா?"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.