(Reading time: 14 - 27 minutes)

“ம்ம் அப்பறம்??”

“அப்பறம்…”

“சரி நா சொல்றத சொல்லு உன் தேங்க்ஸ் அக்செப்ட் பண்ணிக்குறேன்..”

“சொல்லுங்க..”

“லவ் யூ சொல்லு தேங்க்ஸ ஏத்துக்குறேன்..”

“……”

மறுபுறம் அமைதியாய் இருக்க சத்தமாய் சிரித்தவன்,” நீ மாறவே மாட்ட சரி சரி சும்மா தான் சொன்னேன் நீ சொல்ல வேண்டாம் நிம்மதியா போய் தூங்கு லவ் யூ..பை..”,என முடிப்பதற்குள்,

 லவ் யூ டூ..பை “,என்றவள் அழைப்பை துண்டித்திருந்தாள்.

தமிழ் நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை..கண்டிப்பாக அவள் தான் கேட்டதற்காக கூறினாள் எனினும் அவள் மனதளவில் மாற்றமடைந்ததால் மட்டுமே இது சாத்தியம் என உணர்ந்தான்..இன்னுமாய் அவள் மீதான அவனின் அன்பு அதிகரித்தது..வருங்காலம் அவளின் காயங்களை மறக்கச் செய்யும் என நம்பிக்கை கொண்டான்..அதே நேரம் தன்னோடு அவள் இருக்கும்போது தன் அருகாமையால் சிறு சிறு ஸ்பரிசத்தால் அவளை பாதுகாப்பாக உணர வைக்க வேண்டும் என தனக்குள் எண்ணிக் கொண்டான்..

றுநாள் சரோஜா கிளம்பும் முன் அவளை அழைத்திருக்க வழக்கமான தயக்கத்தோடே வேலை முடித்து உள்ளே நுழைந்தவளை பார்த்து காவியா ஓடி வந்தாள்..

“நிபி சித்தி..நீயும் என்னோடா ஊருக்கு வரியா??”,என கேட்க குழந்தை தன்னை அழைத்த விதத்திலேயே மொத்தமும் மறந்து போயிருந்தாள்..

“யாருடா அப்படி கூப்பிட சொன்னது???”

“நீங்க தான் சித்தப்பாவ கல்யாணம் பண்ணிக்க போறீங்களாமே அதான் உங்கள சித்திநு கூப்ட சொல்லி அம்மாவும் பாட்டியும் சொன்னாங்க..”

தன்னோடு குழந்தையை சேர்த்து அணைத்துக் கொண்டவள் கன்னத்தில் இதழ்பதித்து உள்ளே அழைத்துச் சென்றாள்..சரோஜாவும் ராஜியும் தங்கள் பெட்டியை எடுத்து வைத்துக் கொண்டிருக்க அவளை பார்த்ததும்,

“வா வா நிர்பயா..சாரிம்மா உன்னை வேற அலைய வச்சுட்டோம்..ரொம்ப டயர்டா இருக்கியே..உக்காரு காபி எடுத்துட்டு வரேன்”, என ராஜி உள்ளே செல்ல,

“ எதாவது ஹெல்ப் பண்ணணுமா அம்மா??பேக்கிங் முடிஞ்சுதா”, எனக் கேட்டவளை வாஞ்சையாய் கன்னத்தை வருடி அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் நா கூப்டதுக்கான காரணமே வேற,

“தமிழ் கல்யாண விஷயமா பேசினானா உங்கிட்ட தமிழோட அப்பா ஊர்லயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு சொல்றாரு..உனக்கு ஒண்ணும் ப்ரச்சனையில்லையே??”

“உங்களுக்கெல்லாம் எது ஒத்துவருதோ அப்படியே பண்ணுங்கம்மா..”

“ம்ம் சரிடா உனக்கும் எங்க ஊர்ல பாக்குறதுக்கு நிறைய இடம் இருக்கு..ஜாம் ஜாம்னு பண்ணிடலாம்..ஒருவாரத்துக்கு முன்னாடி வரோம்னு சொல்லிருக்கான்..வேலை வெட்டிநு அவன் இங்கேயே உக்காந்துருவான்..டேட் பிக்ஸ் ஆனவுடனேயே அவனை லீவ்க்கு சொல்ல சொல்லு..நீயும் ஆபீஸ்ல சொல்லிடு..

உனக்கு ட்ரெஸ் எல்லாமே நா அங்கேயே எடுத்துரேன்..நகை மட்டும் உனக்கு பிடிச்சமாதிரி நீ இங்க எடுத்துக்கோ..அப்பப்போ போன் பண்றேன் எதுவாயிருந்தாலும் சொல்லு..என் நம்பர் நோட் பண்ணிக்கோ நீயும் எப்போ வேணா கால் பண்ணு..ஊருக்கு வரும்போது அழகா சிரிச்ச முகமா சந்தோஷமான நிர்பயாவ தான் நா பாக்கனும் சரியா??”,என அன்பு கட்டளையிட ராஜியோ,

“ஷப்பா போதும் என்னால முடில..இதெல்லாம் பாக்குறதுக்கு  தம்பி வீட்ல இல்லையே..ம்ம் நிர்பயா எல்லாம் ஒழுங்கா செய்றேன்னு சொல்லு இல்ல அத்தை இப்போவே உன்னை கையோட கூட்டிட்டு போனாலும் போய்டுவாங்க “,எனும்போதே குழை)ந்தை ஏதோ விஷமம் செய்ய அவள் பின்னே ஓடினாள் ராஜி..

சிறிது நேரத்தில் தமிழ் வந்துவிட சோர்வாய் வந்தமர்ந்தவன் அவளை கண்டதும்,”ஹாய் அப்போவே வந்துட்டியா கிளம்புற நேரத்துல வேலை வந்துடுச்சு அதான் லேட்..செம தலைவலி கொஞ்சம் காபி எடுத்துட்டு வரியா “,என்றவாறு கழுத்தை சுழற்றி சோம்பல் முறிக்க,

கிச்சனிற்கு சென்று சரோஜாவிடம் அவள் கூற அவர் காபி கலந்து அவளிடம் கொடுத்தனுப்பினார்..அவளிடமிருந்து வாங்கிப் பருகியவன்,கண்ணடித்து தேங்க்ஸ் எனக் கூறியவாறு உள்ளே செல்ல பெண்ணவளோ ஒரு நொடி முகம் சிவந்து மலர்ந்தாள்..

இருவருமாய் சென்று அவர்களை ரயில்வே ஸ்டேஷனில் விட்டு இரயில் கிளம்பும் வரை அவர்களோடு இருந்தனர்..

“டேய் ரெண்டு பேருக்குமா டின்னர் செஞ்சு வச்சுருக்கேன்..சாப்டுருங்க..அப்பறம் அவளை பத்திரமா கொண்டு போய் வீட்ல விட்டுரா..”என சரோஜா கூற,

“ம்மா வர வர நீ என்னபத்தி கவல படுற மாதிரி தெரில..இதெல்லாம் நல்லதுக்கே இல்ல”, என தமிழ் இடவலமாய் தலையசைக்க,

“அதான் இத்தனை வருஷமா உன்னைபத்தி கவலப்பட்டாச்சே இனி உன்னபத்தி கவல பட வேண்டியது இவ தான்..”,என அவர் கூறிச் சிரித்தார்..ரயில் கிளம்பியவுடன் இருவருமாய் கிளம்ப,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.