Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 28 - 55 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்

oten

ப்பொழுதும் வீட்டிலும் அருகில் உள்ளவர்களிடமும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்த ராசாத்தி இப்பொழுது மற்றவர்களுடன் பேசுவதையே நிறுத்திவிட்டாள். தன வீட்டு முற்றத்தில் உட்கார்ந்து, விட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அம்மாவை பார்த்த குமரேசனுக்கு, எப்படி இருந்த வீடு இப்போ இப்படி கலை இழந்து போய்விட்டதே என்று எண்ணியபடி அம்மா.. என்று அழைத்தான்

என்னய்யா என்று ராசாத்தி சுரத்தே இல்லாமல் கேட்டதும் இன்னைக்கு நாத்த நடவு செய்யணும் எப்பவுமே அவதான் (அழகியைதான் அவள் என்று பேரைகூட சொல்லாமல் குறிப்பிட்டான்) முதலில் நடவை சாமி கும்பிட்டு ஆரம்பிப்ப்பாள் இப்போதான் இனி அவ இல்லைன்னு ஆகிடுச்சே நீங்க வந்து ஆரம்பிச்சுவைங்க என்றான்.

நான் எதுக்குய்யா, வாணிய கூப்பிட்டுப்போய் ஆரம்பி. அங்க வந்தா மத்தவங்க வாய் சும்மா இருக்குமா? இப்படி வெளிய தலை காட்டவிடமுடியாம ஆகிடுச்சே, ஏ.... மவளா இப்படி செஞ்சுட்டா! என்னால இன்னும் நம்ப முடியலையே! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது வெளியில் வாணி யாரையோ வாங்க பெரியய்யா என்று அழைக்கும் சத்தம் கேட்டது.

வந்தவர் அத்த வீட்டில இருக்காளா? என்று கேட்டதும் உள்ளதான் அத்தையும் அவரும் இருக்காக உட்காருங்க கூப்பிடுறேன் என்று கூறிகொண்டிருக்கும் போதே சண்முகம் அண்ணன் சத்தம் மாதிரி கேக்குதே என்று ராசாத்தியும் அவர்தான்மா என்று குமாரேசனும் சொன்னபடி இருவரும் வீட்டின் முன்கட்டுக்கு வந்தனர்.

வாங்கன்னே! என்று ராசாத்தியும் வாங்க மாமா! என்று குமரேசனும் கூறினர். வாணி வந்தவருக்கு பருக காபி கொண்டுவர உள்ளே சென்றாள்.

என்ன தங்கச்சி இப்படி வாடிபோய் இருக்குற. ஓ! மவள நெனச்சி நீ வெசனப்படவேண்டாம் தாயீ.... நான் அவளைப் பத்திதான் பேச வந்தேன் என்றார்.

அவர் கூறிய மறுநிமிசமே குமாரேசன், மாமா அவளப்பத்தி பேச என்ன இருக்கு, அதுதான் ஊருக்குள்ள எங்கள தல நிமிர்ந்து நடக்க முடியாதவாறு செஞ்சுட்டாளே என்று கூறினான்

மருமவனே அதுக்காக கூடப்பொறந்தவள அப்படியே விட்டுட முடியுமா? அழகுநிலா ஒன்னும் ஏப்ப சாப்பையான பையனை விரும்பல பெரியபெரிய கட்டடம் கட்டி கோடிக்கணக்கான வருமானம் செய்யும் ஆளைத்தான் விரும்பியிருகிறா. அந்த பையனை பெத்தவங்களே தேடிவந்து முறையா பேசனுமுன்னு நெனைக்கும் போது நாமும் கொஞ்சம் இறங்கித்தான் போகனும். முறையா கல்யாணம் ஆகாம நம்ம வீட்டு புள்ளைய அவுக வீட்டில் எப்படி விட்டு வைக்கிறது

அதுவும் அவுக பெரிய இடம். நாம நெனச்சு பார்க்க கூட முடியாத உயரத்துல இருக்கிறவுக. அவுக வந்து நம்மகிட்ட இந்தளவு இறங்கி பேசணும்னு அவசியமே இல்லை. அந்த பையனோட அம்மாவ உடலுக்கு முடியாம நேத்து ஆஸ்பத்திரியில சேர்த்திருகிறாங்களாம். அந்தம்மா உடனே மகனை கல்யாணக் கோலத்தில் நம்ம அழகுநிலாகூட பார்க்கணுமனு ஆசைபடுவதால் உடனே நம்ம வீட்டில பேசி முறையா கல்யாணம் செய்யனும்னு நினைகிறார்கள்.

இந்த நிலையிலும் நம்ம பொண்ணு அவுக வீட்டில் இருந்தும் நம்ம சம்மதத்தோட கல்யாணம் பண்ணனும் என்று நினைகிராங்கள்ள, அதுதான் பெரியமனசுத்தனம், நாமும் நம்ம புள்ள நம்ம கேட்காம தப்பு பன்னுச்சுன்னு புடிவாதம் புடிக்காம சரின்னு சொல்றதுதான் நல்லதுன்னு நெனைக்கிறேன். நீ என்ன நெனைக்கிற ராசாத்தி? என்று கேட்டார்.

ராசாத்தியின் பெரியப்பா பையன்தான் இந்த சண்முகம் என்பவர். ராசாத்தி புருசனும் சண்முகமும் சிறுவயதில் இருந்தே நல்ல நண்பர்கள் இந்த ஊருக்கு அழகுநிலாவின் அம்மா ராசாத்தி கல்யாணம் முடிந்து வந்ததுமே கணவரின் நண்பரும் தன் அண்ணனுமான சண்முகத்துடனான குடும்பத்துடன் நெருக்கமாக பழகிவந்தனர். இந்நிலையில் அழகுநிலவின் அப்பா இறந்த சமயம் தனியாக நின்ற ராசாத்திக்கு பக்க பலமாக இருந்தது சன்முகத்தின் குடும்பம் எனவே ராசாத்தி, அண்ணன் என்ற முறையில் தனக்கு ஆலோசனை தேவைபட்டால் அவரிடம் தான் கேட்பாள்.

தங்களின் நலனில் அக்கறையுள்ள சண்முகம் அண்ணனே இவ்வாறு சொன்னதும், நீங்க சொன்னா சரியாகத்தான் அண்ணே இருக்கும் என்று ராசாத்தி சொல்லிகொண்டிருக்கும் போதே அவரின் மொபைல் சத்தம் எழுப்பியது எடுத்து காதில் வைத்தவர் அப்படியாங்க ஐயா அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை தங்கச்சி ஒத்துகிடுச்சு... எப்போ... இப்பவேவா வருகிறார், நீங்களும் கூட வறீங்களா? வாங்க வாங்க நல்லவிசயத்தை தள்ளிபோட வேண்டாம் என்று மரியாதையாக எதிரில் இருப்பவரிடம் பேசிய சண்முகம் போனை அனைத்தார்

இப்ப பேசுனது யாருதெரியுமா? நம்ம எம் எல் ஏ தவசிதான் அவர் தான் நேத்து நைட்டு வீட்டுக்கு ஆள் அனுப்பி நம்ம அழகுநிலாவை பத்தி விசாரிச்சு நம்ம வீட்டை பத்தி கேட்டாங்க. எதுக்கு விசாரிக்கிறீங்க என்று கேட்ட போதுதான் எனக்கு விஷயத்தை சொன்னாங்க, நானும் நம்ம புள்ள வாழ்க்கைக்காக பேசுறாங்கலேன்னு என்ன ஏதுன்னு அவங்கட்ட விசாரிச்சப்பத்தான் உன்கிட்ட பேசச்சொல்லி என் கிட்ட கேட்டாங்க. அதுதான் விடிஞ்சதும் உன்னைப் பார்க்க வந்தேன் ராசாத்தி .

இப்ப என்னடானா எம் எல் ஏ தவசி மாப்பிள்ளை பையனோட அப்பாவை கூட்டிக்கொண்டு இப்போ இங்கே வருகிறதா சொன்னாங்க. நானும் சரி வாங்கணு சொல்லிபுட்டேன், ஏலே குமரேசா வருகிறவங்க பெரிய இடம் எனவே நல்லபடி கவனிச்சு அனுப்பனும் இன்னும் போனத நெனச்சுகிட்டு மச மசனு நிக்கக் கூடாது என்று சொன்னார். அதன் பின் வருகின்றவர்களை வரவேற்க தயாரானார்கள் அழகுநிலாவின் வீட்டார் .

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Deebas

Latest Books published in Chillzee KiMo

 • Cinema suvarasiyangalCinema suvarasiyangal
 • Kandathoru katchi kanava nanava endrariyenKandathoru katchi kanava nanava endrariyen
 • Manathil uruthi vendumManathil uruthi vendum
 • Mounam vizhungiya ragangalMounam vizhungiya ragangal
 • Nethu paricha rojaNethu paricha roja
 • ThaayumaanavanThaayumaanavan
 • Then mozhi enthan thenmozhiThen mozhi enthan thenmozhi
 • Vennilavu enakke enakkaVennilavu enakke enakka

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Saaru 2018-02-15 07:57
Super deeps
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Deebalakshmi 2018-02-16 08:29
Thank you Saaru :thnkx:
Reply | Reply with quote | Quote
# oli tharumo nelavukodiyalam 2018-02-13 22:57
nice flash back nararation
Reply | Reply with quote | Quote
# RE: oli tharumo nelavuDeebalakshmi 2018-02-14 11:04
Thank you Kodiyalam :thnkx:
Reply | Reply with quote | Quote
# OTEN by DeepasSahithyaraj 2018-02-13 20:39
Sorry for the delayed comment.
Flashback superb. Aadhith and azhagi conversations mudivulla will they feel their love 2wards each other. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: OTEN by DeepasDeebalakshmi 2018-02-14 11:03
Thank you Sahithyaraj :thnkx: .sorry எல்லாம் கேட்காதீங்க friend.உங்களின் comment எனக்கு நிச்சயம் பூஸ்ட் சாப்பிட்ட உற்சாகம் தருகிறது .அந்த comment ஐ நீங்கள் விருப்பப்பபட்ட உங்களின் ஓய்வு நேரம் தாங்க Sahithya.ஆனா comment கொடுக்க மறந்துடாதீங்க. :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Akila 2018-02-13 14:33
Hi

Nice and intereting EPI.
Nice story flow that Adhith himself telling the FB of Janaki
The flash back of Velayudham is very nice.
Janaki character is majestic.
Eagerly waiting for further updates.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Deebalakshmi 2018-02-14 10:51
Thank you Akila :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்madhumathi9 2018-02-13 13:43
facepalm intha manjula jaanaki ammaavirkku evvalavu thontharavu koduthu irukkanga! Ithaiyellam thaangikondu vaazhnthu irukkiraar. :sad: epi. But nice epi. Adutha episode kalyaanam nadakkum epiya? Egarly waiting to read more.jaanaki amma gunamaavathu miguntha magizhchiyai kodukkirathu. (y) :clap: Big thanks for kooduthalaana pages. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Deebalakshmi 2018-02-14 10:50
Thank you madhumathi :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Mathumalai 2018-02-13 12:46
Deeps nice oru vazhiya .....rendu family la green signal.....next marriage thana.....ungala maari yaralaiyum write panna mudiyathu....unga rendu story my fav.....sty......i love ur novel....by mathu malai..
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Deebalakshmi 2018-02-14 10:49
Thank you Mathumalai. :thnkx: என் கதை உங்களின் favorite ஆக இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது .தொடர்ந்து வாசித்து comment கொடுங்க friend.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Annie sharan 2018-02-13 12:42
Nice update mam.... Pavam janaki amma... She must get better soon...Azhagunila yepo aadhith love ah purinjukapornga??? :Q: Waiting to read more mam... Thank for this episode :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 18 - தீபாஸ்Deebalakshmi 2018-02-14 10:44
Thank you Annie Sharan :thnkx:
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NSS

NSS

VVU

KiMo

PMM

IOKK2

VTV

NeeNaan

KNY

KTKOP

KET

TTM

PMME

EMS

IOK

NIN

KDR

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top