(Reading time: 28 - 55 minutes)

நீண்ட வருடத்திற்குப் பின் தனது அம்மா பிடிவாதமாக தன்னுடன் பேசியே ஆகவேண்டும் என்ற தோரணையில் தன் முன் நின்று கொண்டிருந்தவளை ஏறிட்டுப் பார்த்தான் ஆதித். ஆனால் வாய் திறந்து என்ன என்று அவன் கேட்கவில்லை.

தன மகன் தன்னை பார்த்ததும், அம்மான்னு என்னை நான் சாவதற்குள் ஓர் முறை கூட நீ கூப்பிடமாட்டாயா ஆதித் என்று கண்ணீருடன் அவள் கூறியதும் தனது கலங்கும் கண்களை அவளிடம் இருந்து மறைப்பதர்காக கோபத்தோடு சேரை விட்டு எழுந்து வேகமாக் திரும்புவது போன்ற பாவனையில் முகம் திருப்பியபடி எழுந்த தன மகனின் கையை ஒரே எட்டில் நெருங்கி பிடித்தவள், ஒரு ஐந்து நிமிஷம் நான் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு சாப்பிட்டுப் போப்ப்பா என்று ஜானகி கூறினாள்.

ஆதித் அவளிடம் பதில் ஏதும் கூறாமல் நின்ற இடத்திலேயே நின்றதும் அவன் கையை இழுத்து சேரில் உட்கார வைத்த ஜானகி நீ பிசினெஸ் ஆரம்பிப்பதற்கு லோனுக்கு அப்ளை செய்திருப்பதாக் கேள்விபட்டேன் ஆதித். அவ்வளவு பெரும் தொகை லோனில் வாங்கினால் உனக்கு உடனே வருமானம் வரவில்லையெனில் மாதம் டியூ கட்டுவதில் உனக்கு சிரமம் ஏற்படும் ஆதித் என்றாள்.

நிமிர்ந்து புருவச்சுளிப்புடன் தன முகம் பார்த்த ஆதித்திடம் நீ ஒன்றும் உன் அப்பாவிடம் பணம் வாங்கு என்று சொல்லவில்லை. ஆனால் என்னிடம் உள்ளதை கூடவா நீ வாங்கமாட்டாய் ஆதித், என் அம்மா எனக்காக வைத்திருந்த வீட்டை விற்று அதை டெபாசிட் செய்த பணம் இப்போ மெச்சூர்ட் ஆகி 50லட்ச்சமாக இருக்கிறது. மேலும் எனது நகை அடமானமாக வைத்து ஓர் 65 லட்சம் கிடைக்கும் அதை வைத்து உன் தொழிலை ஆரம்பிக்கலாமே லோன் இன்னும் தேவை என்றால் மட்டும் லோன் போட்டுகோ ஆதித். நீ என்னிடம் இந்த தொகையை வாங்கவில்லை எனில் இனி நான் வாழ்ந்து அர்த்தமே இல்லாமல் போய்விடும் என்று அவள் கண்ணீருடன் சொல்லிக்கொண்டு இருந்தாள்.

ஏற்கனவே வேலாயுதத்திடம் தான் இன்று காலை ஆதித்துடன் பேசப்போவதாக ஜானகி கூறியிருந்தாள். எனவே வேலாயுதம் ஜானகி ஆதித்துடன் பேசினாலும் அவன் மனம் இனிமேலும் இளகி அவளை ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. மேலும் ஏற்கனவே கட்ந்த பதிமூன்று வருடமாக் தன முன்னால் மட்டும் மலர்ந்தது போல் முகத்தை வைத்திருந்தாலும் தினம் இரவு அவள் தன மகனின் அன்புக்காக் ஏங்கி கண்ணீர்வடிப்பதை உணர்ந்தே இருந்தார்.மேலும் இன்று நேரிடையாக பாசத்துக்காக தன மகனிடம் அவள் மோதும் இந்த போராட்டத்தில் கட்டாயம் அவளை தாங்கி பிடிக்க அவள் அருகில் தான் இருக்க வேண்டு என்று அங்கு வந்தார். அவர் உள்ளே வரும் போது ஆதித் குரல் தான் அவருக்கு கேட்டது நீங்க அடமானம் வைக்கச் சொன்னது எல்லாம் எப்படி உங்களுக்கு வந்தது உங்கள் புருஷன் உங்களுக்கு வாங்கி கொடுத்தது தானே. அதெல்லாம். அதனை நான் வாங்கினால் அன்று அந்த கிழவி சொன்னது போல் மிஸ்டர் வேலாயுதத்தின் காசுபணத்துக்கு அவருடன் இருப்பதுபோல் ஆகிவிடும் எனக்கு. அது தேவை இல்லை என்று அவன் கூறினான்.

அப்பொழுது ஆதித்...! என்ற வேலாயுதத்தின் கத்தலில் அவரைத் திரும்பிப் பார்த்தான் ஆதித், ஆதித்தின் வார்த்தையில் தன நெஞ்சில் கை வைத்தபடி நின்ற இடத்திலேயே சரிந்தவளை வேகமாக வந்து எட்டி பிடித்த வேலாயுதம் என்னை மன்னிச்சிடு ஜானகி இனிமேலும் நீ எப்படி என் வாழ்கையில் வந்தாய் என்பதை அவனிடம் இருந்து நான் மறைத்தால் என்னை அந்த பாவம் ஏழேழு ஜென்மத்திற்கும் துரத்தும் என்றார் .

வேண்டாங்க என்று கெஞ்சலுடன் கூறியவளை பார்த்த வேலாயுதம், நான் சொல்வதால் இனியும் என்ன நடந்திரப்போகுது. ஜானகி இப்போ மட்டும் என்ன அவன் என்னை அப்பா என்று பாசமாகவா... கூப்பிடுவிட்டான்..., இனிமேல் தான் என் உண்மை முகம் தெரிந்து என்னை புதுசாகவா வெறுத்துவிடப்போகிறான் என்றார்.

பின் ஆதித்திடம் ` திரும்பி நீ கோபப்படுவதா இருந்தாலோ தண்டனை கொடுப்பதாக இருந்தாலோ எனக்கு மட்டும் கொடு. ஏனெனில் என் ஜானகி பவித்திரமானவள் அவளை நிர்பந்தத்தில் நிற்க வைத்து கட்டாயப்படுத்தி என் வாழ்க்கைக்குள் இழுத்து வந்தவன் நான் தான்.

எனக்கு அப்போ இருபத்திஏழு வயது, என் அப்பா இறந்து இருவருடம் ஆகியிருந்தது.

வேலாயுதம் தனது அப்பா ஹர்ட் அட்டாக்கில் இறந்த பிறகு தனது படிப்பை விட்டுவிட்டு தொழிலை கையில் எடுக்கவேண்டிய நிலைக்கு ஆளானார் அந்நேரம் அவரது தொழில் பெரும் சரிவை நோக்கி செல்வதாக இருந்தது எனவே அதனை நிமிர்த்தி நடத்துவதில் அவர் முழு கவனத்தையும் கொடுக்கவேண்டி இருந்ததால் வீட்டில் அவரின் அப்பா இறந்த துக்கத்தில் இருந்து அவரது அம்மாவை வெளியே கொண்டுவர அவரது தாய்மாமாவுடன் இருந்த அம்மம்மாவை தனது வீட்டினில் இருக்க ஒத்துக்கொண்டார்

வேலாயுதத்தின் தந்தை உயிருடன் இருக்கும் வரை அவரது மனைவியின் அண்ணன், முன்பு தன்னுடைய மில்களிலும் ஜவுளிகடையிலும் நிர்வாகத்தில் அனாவசியமாக மூக்கை நுளைப்பதையும் தான் இல்லாதபோது தனது தொழில் நடக்கும் இடத்திற்கு சென்று பணத்தில் கைவைப்பதையும் அறிந்ததில் இருந்து தனது குடும்பத்துடன் நெருங்காதவாறு தனது மனைவியின் குடும்பத்தை தள்ளியே வைத்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.