(Reading time: 28 - 55 minutes)

தனது மகனிடமும் அவர்களை பற்றி கூறி வைத்திருந்தார்.இந்நிலையில் அவர் இறந்ததபின் வீட்டில் அவரது அம்மாவிற்கு துணையாக அவரது அம்மம்மாவை வீட்டில் இருக்க வைத்ததினால் அவரது தாய்மாமா வேலாயுதம் வீட்டிற்கு அடிக்கடி வர ஆரம்பித்தார் மேலும் அவரின் அம்மாவிடம் தனது மகள் மஞ்சுளாவை வேலாயுதத்திற்கு மனம்முடிப்பதற்கு தனது அம்மா மூலம் தனது தங்கையை பேசியே கரைய வைத்திருந்தார்

வேலாயுதத்தின் அப்பா காலத்தில் இருந்து அவர்களது கம்பெனியின் வருமானத்தில் ஒரு பகுதியில் வருடா வருடம் கணவனை இழந்த ஆண் வாரிசு இல்லாத பெண்களுக்கு மருத்துவத்திற்கு உதவித்தொகை வழங்குவது வழக்கமாக இருந்தது .

அவ்வுதவித்தொகையை பெறுவதற்காக ஜானகியை, வேலாயுதத்தின் மில்லின் கணக்காளராக வேலைபார்த்த ஜானகியின் மாமா சுப்பையா தனது முதலாளியிடம் அழைத்து வந்திருந்தார்

ஜானகியை பார்த்ததுமே அவரின் அழகு வேலாயுயதத்தை ஈர்த்தது மேலும் ஜானகி பற்றி விசாரித்ததில் அவரின் அம்மாவுக்கு ஹர்ட் பிரச்சனை இருப்பது தெரியவந்தது ஜானகியின் அப்பா சிறு வயதிலேயே இறந்து விட்டதால் ஜானகியின் அம்மா அவரது அண்ணன் வீட்டிற்கு ஜானகியுடன் வந்துவிட்டார் தையல் செய்து தனது அண்ணனிடம் தனக்கான செலவிற்கு ஈட்டும் சிறு வருமானத்தை கொடுத்து வந்தார் இந்நிலையில் ஜானகிக்கு சிறு வயதில் இருந்தே டீச்சர் ஆக ஆசை இருந்தது அவரும் முயன்று படித்து ஆசிரியர் பயிர்ச்சில் சேர்வதற்கு இடமும் கிடைத்து விட்டது

இந்நிலையில் அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவச்செலவு அதிகரித்தது எனவே ஜானகி தனது படிப்பை நிறுத்தி தனது அம்மா செய்த தையல் வேலையை கையில் எடுக்க நினைத்தாள்.

அப்பொழுது ஜானகியின் மாமா தனது முதலாளி அளிக்கும் மருத்துவ உதவியை தனது தங்கைக்கு வாங்கிகொடுப்பதாக கூறி ஜானகியை வேலாயுதத்திடம் அழைத்துவந்திருப்பதை விசாரித்து அறிந்துகொண்டார் .

ஜானகியிடம் ஏழ்மையிலும் ஓர் நிமிர்வு இருந்ததையும் பணிவிலும் நேர்கொண்ட பார்வை இருந்தது. அவள் கூறிய விபரங்களில் தெளிவும் அவளது அறிவும் அவரது நளினமும் அழகும் வேலாயுதத்திற்கு ஜானகியின் மேல் ஆர்வத்தை ஏற்படுத்தியது

எனவே அவளின் அம்மாவிற்கு மருத்துவ உதவிக்கு உதவுகின்ற சாக்கில் அடிக்கடி ஜானகியை சந்திக்கும் சந்தர்பத்தை ஏர்படுத்திக்கொண்டார் வேலாயுதம்.

ஆனால் ஜானகி வேலாயுதத்திடம் தேவையில்லாமல் ஓர் வார்த்தைகூட நின்று பேசியதில்லை அவரின் ஆர்வமான பார்வையையும் வார்த்தையையும் கண்டு மேலும் அவரைவிட்டு விலகித்தான் நிற்க முயன்றால் ஜானகி

ஜானகி விலக விலக வேலாயுதத்திற்கு அவளின் மேல் விருப்பம் கூடிக்கொண்டே சென்றது.

முதலாளியே நேரில் சென்று ஜானகிக்கு வேண்டிய உதவியை செய்வதை பார்த்த மற்றவர்கள் கிசுகிசுக்க ஆரம்பித்தனர் எனவே ஜானகி மன உளைசளுக்கு ஆளானார்.

இந்நிலையில் வேலாயுதத்தின் தாய்மாமாவிற்கு ஜானகிக்கும் வேலாயுதத்திற்கும் இடையில் உள்ள கிசுகிசுப்பு காதிற்குச் சென்றதால் தனது தங்கையிடம் ஜானகியை பற்றி தவறாக கூறி ஜானகி மோசமானவள் வேலாயுதத்தை வளைக்கப் பார்கிறாள் என்று கூறி வேலாயுதத்தை ஜானகியிடம் இருந்து மீட்க வேண்டுமானால் அவருக்கு உடனே கல்யாணம் முடிக்கவேண்டும் என கூறி வேலாயுதத்தின் அம்மாவை உரமேற்றிவைத்தார்.

எனவே வேலாயுதத்தின் அம்மா தனது மகனை தனது அண்ணன் மகள் மஞ்சுளாவை கல்யாணம் செய்யச் சொல்லி வற்புறுத்த ஆரம்பித்தார். ஆனால் வேலாயுதம் தனது அம்மாவிடம் தனக்கு மஞ்சுளாவை கல்யாணம் செய்வதில் இஷ்ட்டம் இல்லை என கூறிவிட்டார்.

மஞ்சுளா அழகானவளாக இருந்தாலும், அவள் அழகானவள் என்ற செருக்கு இருந்தது. வேலாயுதம் கண்டிப்பாக தனது அழகுக்கு மயங்கி தன்னை திருமணம் செய்துகொல்வார் என்ற நம்பிக்கை இருந்தது. இந்நிலையில் அவர் தன்னை திருமணம் செயமாட்டேன் என்று மறுத்தது அவருக்கு பெரும் அவமானமாக பட்டது. என்னை வேண்டாம் என்று எப்படி ஒருவன் சொல்லலாம் என்ற கோபம் ஏற்பட்டது அதற்கு காரணமான ஜானகியின் மீது வண்மம் பிறந்தது.

எனவே ஜானகியை நேரில் சந்தித்த மஞ்சுளா எனக்கும் என் மாமா வேலாயுதத்திற்கு கல்யாணம் பெரியவர்களால் சிறுவயதிலேயே முடிவு செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் நீ எதை காண்பித்து அவரை மயக்கி இப்போ என்னை கல்யாணம் செய்யமாட்டேன் என்று கூறவைத்தாய் என நாக்கில் நரம்பில்லாமல் பேசி அவரை ரணப்படுத்தினாள்.

எனவே அடுத்து ஜானகியின் அம்மாவிற்கு மருத்துவ உதவிக்கு வந்த வேலாயுதத்தின் உதவியை ஜானகி மறுத்துவிட்டார் ஜானகியை தான் கல்யாணம் செய்ய ஆசைபடுவதாக கூறிய வேலாயுதத்தின் காதலையும் ஏர்க்கமாட்டேன் என்று கூறி அவரை தன்னை பார்க்க இனி வரக்கூடாது என்று விரட்டினார்

வேலாயுதம் ஜானகி தன்னை மறுப்பாள் என்று நினைத்தே பார்கவில்லை அவளின் மறுப்பு அவரை நிலைகுலைய வைத்தது. இந்நிலையில் மகன் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் இருப்பதை பார்த்த அவரது அம்மா, மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தால் அவர் சரியாகிவிடுவார் என்று நினைத்து அவரை மிரட்டி உருட்டி மஞ்சுளாவுடன் கல்யாண பந்தத்தில் இணைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.