(Reading time: 28 - 55 minutes)

அவன் அவ்வாறு கூறியதும் நான் பெருசா எதுவும் பன்னலை. ஆனா அவங்களுக்கு வாழனும் என்ற ஆசையை டாக்டர் கொடுக்கச் சொன்னதைத் தான் நான் செஞ்சேன். கண்டிப்பா அத்தை நல்லபடி வீட்டிற்கு வருவாங்க நீங்க கவலை படாதீங்க என்ற அழகுநிலா, எப்படி அத்தைக்கு இப்படி ஆச்சு. மாமா வேறு மாதேஷ் மேல் கோபமாகவும் அவரால்தான் அத்தையை அட்மிட் செய்றபடி ஆகிடுச்சுனு சொல்றாங்க அப்படி என்னதான் ஆச்சு மாதேசுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டாள்.

அவள் கேட்டதும் அவள் அமர்ந்திருந்த சோபாவில் அவளின் அருகில் அமர்ந்தவன் எனக்கும் மாதேசுகும் என்ன சம்மந்தனு நான் சொல்றேன் அவன் தான் என் அப்பாவின் முதல் மனைவியோட மகன். என் அம்மா அவனை அதனால் என் அண்ணனு சொல்வாங்க. எனக்கு இப்படி ஒரு அண்ணன் இருந்தது எனக்கு எப்ப தெரிஞ்சது தெரியுமா? அது தெரிஞ்ச சூழ்நிலை பற்றி உனக்கு தெரியுமா? அதனால என் வாழ்க்கையே மாறிப்போனது உனக்கு தெரியுமா? அழகி...

எப்பொழுதும் ஒரு மகனுக்கு தன அப்பத்தான் ஹீரோ ரோல் மாடல் அதுவும் எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பையனிடம் தீடீர்னு உன் அப்பாவிற்கு உன் அம்மா வைப்பாட்டி. நீ வைப்பட்டியின் மகன் என்று கூறினால் அதுவும் ஸ்கூலில் மத்த பசங்க முன்னாடி சொன்னா அந்த பையனுக்கு எப்படி இருக்கும் யோசித்துப்பார் என்றவன், அந்தமாதிரி நின்ற பையன் நான்தான் என்றவன், சிறுவயதில் அவனுக்கு ஸ்கூலில் மாதேஷ் மற்றும் அவனது பாட்டியின் மூலம் ஏற்பட்ட அவமானம் அதனால் அவன் தன அம்மாவை அப்பாவை விட்டு வரச்சொல்லி கூறியது அவர்கள் வர மறுத்ததால் தனது அம்மாவுடனும் அப்பாவுடனும் சென்னை வந்தது. அன்றிலிருந்து தன் அம்மா அப்பாவோடு தான் பேசுவதையே நிறுத்தியது அனைத்தையும் கூறினான்.

அழகுநிலாவிற்கு ஆதித்தின் அன்றைய அவமானம் இன்றும் அவனை பாதிப்பதை உணர்ந்தவள், அவனின் கவலையை கண்டு பொறுக்க முடியாமல் அவனின் கையை தனது கைகளுக்குள் தானே எடுத்து சிறை படுத்திகொண்டவள், இதில் உங்களின் தப்பு எதுவும் இல்லை. பெத்தவங்க செஞ்ச தவறுக்கு பிள்ளைகளை சிலுவை சுமக்க வைப்பதே இந்த சமுதாயத்தின் பழக்கம் ஆகிடுச்சு. அந்த வயசுலேயே நீங்க உங்க பெற்றோர்களின் தப்பை ஏத்துக்காம, அவங்க கூட பேசாம, வருசக்கணக்கா தண்டனையை கொடுத்திருக்கிறீங்க ஆதித். நீங்க நியாயவாதி அதித் என்றால் அழகுநிலா.

அவள் அவ்வாறு கூறியதும், இல்லை அழகுநிலா! ஒரு குற்றம் நடந்திருக்குன்னா அதற்கு தண்டனை கொடுப்பதுக்கு முன் குற்றவாளியா நிற்பவர்களுக்கு தாங்கள் ஏன அந்த குற்றத்தை செய்தார்கள் என்று விளக்கம் சொல்ல சந்தர்பம் தரனும். ஆனா! அந்த சந்தர்பத்தை நான் என் அம்மாவிற்கு தரல அழகி. நான் தப்பே செய்யாமல் என்னை ஸ்கூலில் வைத்து கேவலப்படுத்தினார்கனு கோபத்தில் என் அம்மாவிடம் பதிநான்கு வருடம் பேசாமல் இருந்து தன்டனை கொடுத்தேனே! ஆனா அவங்கமேல தப்பில்லைனு எனக்கு தெரியவந்தப்போ நானும் அவுங்களின் மற்ற உறவுகள் மாதிரி அவங்களை காயம் செய்திருக்கிறேன் என்று எனக்கு எப்போ தெரியவந்துச்சுனா.. என்றவன் எந்த சூழ்நிலையில் தனக்கு அந்த விளக்கம் கிடைத்தது என சொல்ல ஆரம்பித்தான் ஆதித் .

ஆதித்துக்கு தனது கல்லூரியின் காம்பஸ் இண்டர்வியூவில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தது. ஆனால் அவனுக்கு சொந்தமாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அதற்கு முதலீடு தேவைப் பட்டது எனவே அவன் அவனின் திறமைக்கு அதிக சம்பளத்தில் கிடைத்த லண்டன் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தான்.

இரண்டு வருடம் தான் பெற்ற சம்பளத்தின் கணிசமான தொகை கைசேர்ந்ததும் தொழில் தொடங்க இந்தியா வந்தான். ஆனால் அவனின் கையிருப்பு அவனுக்கு ஆரம்பகட்ட தேவைக்கு கூட பத்தவில்லை. இந்நிலையில் லோனுக்கு அப்ளை செய்தான். அவனின் பணத்தேவையை தனது அப்பாவிடம் கூறினால் உடனே அவர் உதவுவதற்கு தயாராகத்தான் இருந்தார்

ஆனால், தனது மேல்படிப்பிற்கு கூட மெரிட்டில் வந்து லோனுக்கு அப்ளை செய்து அதன் மூலமே அவன் தனது படிப்பை முடித்தான் “அவன் லோன் அப்ளை செய்த அடுத்தநாளே அவனுக்கு லோன் சேங்சன் ஆகிவிடும் அதன் பின்னணியில் அவனது அம்மாவும் அப்பாவும் இருப்பதை அவன் அறிந்து தான் வைத்திருந்தான்” எனினும் படிபிற்குக் கூட அவர்களிடம் போய் நிற்காமல் தள்ளிநின்றவ்ன் எப்படி தொழிலுக்கு அவர்களிடம் போய் உதவி என்று நிற்பான்.

ஆனால், அவன் தொழில் தொடங்க பண நெருக்கடியில் இருப்பதையும் அதற்கு லோன் அப்ளை செய்திருக்கும் விசயமும் தனது கணவன் மூலம் அறிந்த ஜானகி அன்று காலையில் ஆதித் சாப்பிடுவதற்கு வந்து மேஜையின் முன் அமர்ந்தபின்னும் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனின் முகத்தை பார்த்தவாறே அவனிடம் அன்று எப்படியாவது பேசிவிடவேண்டும் என்று நின்றுகொண்டிருந்தார்.

ஆம் கடந்த பதிமூன்று ஆண்டுகாலமாக ஜானகி ஆதித்துக்கு தேவயான உணவை மேஜையில் எடுத்து வைத்துவிட்டு அவன் பார்வையைவிட்டு மறைந்து நின்று அவன் சாப்பிடுவதை கண்ணீர்மல்க பார்த்தபடி இருப்பாள். அருகில் நின்று பரிமாற முயன்றாலோ பேசமுயன்றாலோ சாப்பிடாமலேயே எழுந்து போய் விடுவான் .தன்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை தன மகன் வயிரார சாப்பிட்டு தனது கண் முன்னே நடமாடினாலே போதும் என ஜானகி அவனின் எதிரில் செல்லாமல் அவனின் உணவு தேவைமுதல் அவனின் உடை மற்ற அனைத்து தேவைகளையும் அவனின் முன்செல்லாமல் அவனின் பின்னின்று நிறைவேற்றி வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.