(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 06 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

என்ன இதுவோ என்னைச் சுற்றியே

புதிதாய் ஒளி வட்டம்

கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்

கனவில் ஒரு சத்தம்

நேற்று பார்த்தேன் நிலா முகம்

தோற்று போனேன் ஏதோ சுகம்

தென்றல் பெண்ணே

இது காதல் தானடி

உன் கண்களோடு

இனி மோதல் தானடி

 

காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே

கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது

பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது

இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது

ஓஹோ காதலி

என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்

அடி நான் தூங்கினால்

அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்

கோடைக் கால பூங்காற்றாய்

எந்தன் வாழ்வில் வீசினாய்

ந்தவார இறுதியில் இருவருமாய் ஹரிஷ் வீட்டிற்கு சென்று காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருக்க கதவை திறந்த ஹரிஷோ வாயடைத்து நின்றான்..

“என்னடா உன் தங்கச்சிய முதல் தடவை உரிமையோட கூட்டிட்டு வந்துருக்கேன் உள்ளே விடமாட்டியா??அவ என்ன நினைப்பா நம்ம நட்பை பத்தி..”

“ம்ம்  எதாவது சொல்லிற போறேன் போய்டு ஒழுங்கா..நீ வாம்மா உள்ள..”

ஷாலினியை எதிர்கொள்ள தயங்கியவளாய் உள் செல்ல ஷாலினி சோர்வாய் சோபாவில் அமர்ந்திருந்தாள்..

“ஷாலு மேடம் எப்படியிருக்கீங்க??”,என்ற குரல் கேட்டு திரும்பியவள் இருவரையும் பார்த்து நமட்டு சிரிப்பு சிரித்தவாறே,

“ம்ம் நாங்க நல்லாதான் இருக்கோம்..இப்போவாவது பாக்க வரணும்னு தோணிச்சே..அதுசரி ஏசிபிக்கு இனி எங்களலாம் கண்ணு தெரியுமா..”,என்று நிர்பயாவை பார்க்க அவளருகில் அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டாள்..

“அக்கா ரியலி சாரி..அன்னைக்கு இருந்த நிலைமைல ஏதோ வாய்க்கு வந்தபடி பேசிட்டேன்..தயவுசெஞ்சு எதையும் மனசுல வச்சுகாதீங்க..ப்ளீஸ்..”

“ஹே என்ன நீ எப்போ பாத்தாலும் இப்படி அழுது வடிஞ்சுட்டு எப்படிதான் இந்த சிடுமூஞ்சிக்கு உன்னை பிடிச்சுதோ..ம்ம் ஆல்வேஸ் ஆப்போசிட் போல்ஸ் அட்ராக்ட் ஈச் அதர் இல்ல..”

சமாதானமாய் எழுந்து அவளருகில் அமர அதற்குள் ஹரிஷ் அனைவருக்குமாய் காபி எடுத்து வந்தான்..

“என்னடா என் ஆருயிர் நண்பா வெறும் ப்ரபோசல் தான் முடிஞ்சுருக்கா இல்ல கல்யாணமே முடிஞ்சுதா??”

“டேய் நீயில்லாம என் கல்யாணமா இப்படி நினைச்சுட்ட பாத்தியா..அம்மா அப்பாகிட்ட பேசுறேன்னு சொல்லிருக்காங்க..அப்பறம்தான் டேட்  பைனலைஸ் ஆகும்..”

“அடப்பாவி அம்மாக்கிட்ட சொல்லிட்டியா..ம்ம் உன் காட்டுல மழைநு சொல்லு..பட் நிர்பயா ஜோக்ஸ் அப்பார்ட் இனி உனக்கு பிறந்த வீடு இதுதான் அண்ணணா உனக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் தயங்காம கூப்டு..இவன் என் ப்ரெண்ட்ங்கிறதால சொல்லல உண்மையாவே இவனை கல்யாணம் பண்ணிக்க நீ குடுத்து வச்சுருக்கனும்..வாழ்க்கையோட கசப்பான அனுபவங்களையெல்லாம் மறந்துட்டு இனி சந்தோஷமாயிரு..”,

என சிநேகமாய் சிரிக்க நிர்பயாவிற்கு மனம் நிறைந்து போனது..நன்றியாய் ஒரு பார்வையை அவனிடம் செலுத்தியவள் தனதருகில் இருந்த தன்னவனை கண்களுக்குள் நிரப்பினாள்..இத்தனை அழகான உறவுகள் அனைத்திற்கும் காரணமான ஒரே ஜீவன்..சத்தியமாய் நான் கொடுத்து வைத்தவள்தான் என மனதில் எண்ணிணாள்..அதன் பிறகு சிறிது நேரம் பேசிவிட்டு இருவரும் கிளம்பி வெளியே வர,

“ஏன் நிரு தேறுவேனா மாட்டேனா??என்ன நினைக்குற??”

“என்ன..என்ன சொல்றீங்க எனக்கு புரில..”

“இல்ல கண்கொட்டாம பாத்துட்டு இருந்தியே அதான் என்ன முடிவுக்கு வந்த சுமாராவாவது இருக்கேனானு கேட்டேன் “,என கூலாய் கேட்க

ஒரு நிமிடம் பயந்தே போனவள்..,”இல்ல..அப்படிலாம்..ஏதோ யோசனையில..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.