(Reading time: 14 - 27 minutes)

“ரிலாக்ஸ் சும்மா தான் கேட்டேன்..போலாமா “,என சிரிக்க அவளறியாமல் சிவந்த முகத்தை திருப்பியவாறே அவனோடு கிளம்பினாள்..பாதி தூரம் சென்றிருக்க திடீரென மழை வேகமாய் பெய்ய ஆரம்பிக்க பைக்கை நிறுத்திவிட்டு அருகிலிருந்த பேரூந்து நிறுத்தத்திற்குள் சென்று ஒதுங்கினர்..கூட்டம் அதிகமாக இருந்ததில் முக்கால் வாசிப்பேர் ஆண்களாய் இருக்க நிர்பயாவின் முகம் தன்னால் மாறியது..

என்ன செய்வதென தெரியாமல் தவித்தளை கண்டுகொண்டவன் சிறிதும் யோசிக்காது தனக்கு முன் நிறத்தி இருபுறமும் தன் கைகளை அரணாய் சுற்றி அதே நேரம் அவள்மேல் படாமல் பார்த்துக் கொண்டான்..பெண்ணவளுக்கோ அப்போதுதான் ஒழுங்காய் மூச்சுவிட முடிந்தது..அதே நேரம் மற்ற ஆண்களிடம் வரும் அந்த அறுவறுப்போ தவிப்போ தமிழிடம் தனக்கு தோன்றவில்லை என்பதை எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தாள்..சில நிமிடங்களில் மழை சற்று குறைந்திருக்க தன்முன் நிற்பவளின் தோள்தட்டி போலாம் எனக்கூற கனவிலிருந்து விடுபட்டவளாய் அவனோடு சென்றாள்..

அவள் வீட்டிற்கு சற்று தொலைவிலேயே அவன் இறக்கிவிட அர்த்தம் புரிந்தவள் தலையசைப்போடு முன்னே நடக்க அவள் உள்ளே செல்லும் வரை காந்திருந்து பின் கிளம்பினான்..

“டேய் எங்கடா போன எவ்ளோ நேரமா உனக்காக காத்திருக்குறது??”

“ஏன்மா என்னாச்சு ஹரிஷ் வீட்டுக்கு தான் போய்ட்டு வரேன் சொல்லு என்ன விஷயம்..”

“அப்பாகிட்ட பேசிட்டேன்..அந்த பொண்ணுக்கும் யாரும் இல்லங்கிறதால நம்ம ஊருலயே கல்யாணத்தை வச்சுப்போம்னு சொல்றாரு..நீ என்ன சொல்ற??அத பொறுத்துதான் நா கிளம்புறதா இல்ல அப்பா இங்க வர்றதாநு பாக்கனும்..என்ன சொல்ற??”

“ம்ம் அதுவும் கரெக்ட்தான்ம்மா..அங்கேயே வச்சுப்போம்..நானும் அவளும் ஒரு வாரம் முன்னாடி வரோம்..அவளுக்கும் புது இடம் கொஞ்சம் கம்பர்டபிளா இருக்கும்..”

“ம்ம் சரிடா அப்போ ப்ளான் பண்ணபடி நாங்க நாளைக்கே கிளம்பிடுறோம்..போய்ட்டு ஜோசியர பாத்து தேதி குறிச்சுடலாம்..எனக்கு அவளோட ராசி நட்சத்திரம் கேட்டு சொல்லுடா..”

சரிம்மா என தன் அறையில் சென்று கட்டிலில் விழுந்தவனுக்கு இன்று பேரூந்து நிறுத்தத்தில் அவளோடு நின்ற கோலம் நினைவிற்கு வந்தது..முதன்முதலாய் ஒரு பெண்ணுடன் அத்தனை நெருக்கத்தில் இருந்தது மனதை ஏதோ செய்தது..அதைவிட மற்ற ஆண்களை காணும்போது வரும் ஒருவித படபடப்பு நிர்பயாவிற்கு தன்னை கண்டதும் வரவில்லை என்பது இன்னும் நிம்மதியாய் இருந்தது…

தினமும் இரவில் மெசேஜ் அனுப்புவது இருவருக்குமே வாடிக்கையாகிவிட்டது..அவன்தான் முதலில் அனுப்புவான்..பதில் வரும்..இப்படியிருக்க அன்று அவளோடு சிறு விளையாட்டு விளையாட எண்ணியவன் மெசேஜ் அனுப்பாமல் காத்திருந்தான்..வழக்கமான நேரத்திற்கு மொபைலை பார்த்தவள் எந்த மெசேஜும் வராமல் இருக்க ஏனோ ஏமாற்றமாய் உணர்ந்தாள்..அரைமணி நேரம் பொறுத்தவள் அதற்குமேல் முடியாமல் அவளே மெசேஜ் டைப் செய்து அனுப்பினாள்..

“சாப்டீங்களா??”

அதற்காகவேகாத்திருந்தவனோ உதட்டோர புன்னகை மாறாமல்  பதில் அனுப்பினான்..

“ம்ம் சாப்டாச்சு நீ சாப்டியா??”

“ம்ம்..பிஸியா இருக்கீங்களா??”

“இல்லையே இப்போதான் படுக்க வந்தேன் டீவி பாத்துட்டு இருந்தேன் என்னாச்சு??”

“இல்ல ஒண்ணுமில்ல சும்மா தான் கேட்டேன்..”

அதற்குமேல் அவளை தவிக்க விடாமல் அவளிடம் பேச எண்ணி அழைத்தான்..அதை எதிர்பாராதவளோ தவறுதலாய் முதல் ரிங்கிலேயே அட்டெண்ட் செய்துவிட என்ன பேசவென தெரியாமல் அமைதி காத்தாள்..

“ஓய்..”

“ஆங்ங் சொல்லுங்க..”

“என்ன சொல்றது நீதான் என் மெசேஜ்க்காக காத்திட்டு இருந்தமாதிரி தெரியுது அப்போ நீதான சொல்லனும்..”

“அது அப்படிலா ஒண்ணுமில்ல..”

“சரி சரி அதை விடு அம்மாவும் அண்ணியும் நாளைக்கு ஊருக்கு கிளம்புறாங்க..அப்பா ஜோசியர பாத்துட்டு டேட் பைனலைஸ் பண்றேன்னு சொல்லிருகாங்க..அண்ட் மேரேஜ் ஊர்லயே வச்சுக்கலாம்னு சொல்லிட்டேன்..”

“ம்ம்..”

“என்ன ரியாக்ஷன் இது ஊர்ல யார் கல்யாணத்தையோ பத்தி பேசுறமாதிரி ம்ம்ங்கிற??”

“இல்ல இல்ல அது..”

“அது வந்து இல்ல இதை தவிர எதாவது பேசுறியா நீ..சரி வைக்குறேன் பை..”

“ஏங்க ஒரு நிமிஷம்..”

“ம்ம் சொல்லு..”

“தேங்க் யூ சோ மச்..”

“எதுக்கு???”

“எல்லாத்துக்குமே..என் லைவ்ல வந்ததுக்கு எனக்கு ஒரு அழகான லைவ் கொடுக்குறதுக்கு..எல்லாத்துக்கும்..”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.