(Reading time: 14 - 27 minutes)

“நா அப்படியே கிளம்புறேனே..ஆல்ரெடி லேட் ஆய்டுச்சு..”

“ம்ம் அதையே தான் நானும் சொல்றேன் ஆல்ரெடி லேட் இதுல தனியா எங்க போகபோற வந்து சாப்டு நானே கொண்டு போய் விடுறேன்..”

வீட்டிற்குள் நுழைந்தவன் டூ மினிட்ஸ் வந்துரேன் என்றவாறு சென்று உடைமாற்றி வந்தான்..அதற்குள் அவள் டைனிங் டேபிளில் இருந்த சாப்பாட்டை எடுத்து இருவருக்குமாய் தட்டில் வைத்திருக்க வந்து அமர்ந்தவன் அவளையும் சாப்பிடச் சொல்ல சாப்பிட ஆரம்பித்தாள்..

“ஆமா நீ எப்படி சமையல்லா தெரியுமா?இல்ல நாதானா??”

“அது..”

“ஓ..தெரியாதா??”

ம்கும் என இடவலமாய் தலையாட்டியவளை பார்த்து சிரித்தவனுக்கு புரையேற அவசரமாய் எழுந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தாள்..

வாங்கி பருகி முடித்தவன் தொண்டையை சரி செய்தவாறே,” சரிசரி நீ ஒண்ணும் கவலபடாத நா ரொம்ப நல்லாவே சமைப்பேன்..ஆனா ஊருக்கு போறப்போ யாராவது கேட்டா நார்த் இண்டியன் டிஷ் பேரா அடிச்சு விடு..யாரும் ஒண்ணும் விளக்கமா கேட்டுக்க மாட்டாங்க..அதவிட்டு நீ பாட்டுக்கு பாவமா ஒண்ணும் தெரியாதுநு சொல்லிராத..”,என மீண்டும் புன்னகைக்க அவளுமே மெல்லிதாய் சிரித்து விட்டிருந்தாள்..

“நிரு எப்பவுமே இந்த சிரிப்பை மட்டும் உன் முகத்துல பத்திரமா வச்சுக்கோ அது ரொம்பவே அழகாயிருக்கும்..சரியா??”

முகம் சிவக்க சரி யென தலையசைத்தாள்..

“ப்பாபா அது ஏன் நா என்ன பேசினாலுமே உன் முகம் இப்படி சிவக்குது..அக்சுவலி ஐ லவ்ட் இட்..ஐயோ போதும் போதும் விட்டா ஸ்ட்ராபெரி கலர் ஆகிடும் போலயே..

நா ஸ்கூலிங் புல்லாவே பாய்ஸ் ஸ்கூல் தான்..காலேஜ்லயும் ரொம்ப டாகெட்டிவ்லா கிடையாது பொண்ணுங்ககிட்ட ரொம்ப பேசினதுஇல்ல..சோ இம்ப்ரஸ் பண்றமாதிரிலா எனக்கு பேச தெரியாது..மனசுல பட்டத சொல்றேன்..தப்பா எடுத்துக்காத..சரி உன் ஸ்கூலிங் பத்தி சொல்லேன்..”

“ஸ்கூலிங் நா கேள்ஸ் ஸ்கூல் தான்..இரண்டு பேர்தான் க்ளோஸ் ப்ரெண்ட்ஸ்…நல்லா படிப்பேன் அதனாலேயே நிறைய பேர் சேர மாட்டாங்க என்கூட”, என மெல்லிதாய் சிரித்தாள்..

“ம்ம் அது கரெக்ட் தான் எனக்குகூட நல்லா படிக்குறவன பாத்தா நல்லா வச்சு நாலு சாத்து சாத்தனும்னு தோணும்..ம்ம் ரொம்ப நாளா சொல்லனும்னு நினைச்சுருக்கேன் உன்னோட இந்த தமிழ் அக்செண்ட் ரொம்ப நல்லாயிருக்கு லைக் கொஞ்சம் ஹிந்தி கலந்த தமிழ்..இன்னொரு விஷயம்கூடகேக்கனும்னு நினைச்சேன் கேக்கவா??”

“என்ன கேளுங்க..”

“இல்ல எதனால உனக்கு என்ன பிடிச்சுதுநு தெரிஞ்சுக்கலாமா??”

“….”

“இல்ல சொல்ல வேண்டாம்னா வேண்டாம்..”

அதெல்லாம் ஒண்ணுமில்ல..வந்து  உங்களை பத்தி தெரிஞ்சு உங்க ஆபீஸ்ல வந்து பாத்தப்போவே ஒருமாதிரியான செக்யூர்ட் பீல்..யூஷுவலா போலீஸ்நு நினைச்சாலே ஒருவித பயம் வரும் அது முதல் தடவையா மாறின இடம் அப்போதான்..அதுக்குஅப்பறம் ஹரிஷ் அண்ணா ஷாலினிக்கா பாத்தப்பறம் ரொம்பவே பயம் போயிடுச்சு..

அதுக்கப்பறமா உங்க பேமிலி..இதெல்லாம்தான் காரணமா இருக்கும்..எல்லாத்தையும் விட நீங்க சொன்னீங்களே சில பீல் சில நெருக்கம் எல்லார்கிட்டேயும் வராதுநு..அதுமாதிரி யார்கிட்டேயும் தோணாத ஒரு பீல் உங்ககிட்ட வந்தது..அதுவும் ஒரு காரணமாயிருக்கலாம் “,என என கூறிமுடித்து அவனை ஓரப்பார்வை பார்க்க,

தன்னருகில் இருந்த அவளின் இடக்கையை வாஞ்சையாய் பற்றி லேசாய் வருடினான்..உடல்சிலிர்க்க இன்னுமாய் பெண்ணவள் குனிந்து கொள்ள கையில் மென்மையாய் இதழ் பதித்தவன்,

“ இனி உன் வாழ்க்கை முழுசும் அந்த எண்ணம் மாறாம பாத்துக்க வேண்டியது என் பொறுப்பு..ம்ம்”, என கேட்க விழி மூடி திறந்து ஆமோதிப்பாய் தன் நிம்மதியை வெளிப்படுத்தினாள்..

அதற்குள் அவன் போனிற்கு அழைப்பு வர சட்டென கையை உருகிக் கொண்டு உள்ளே அவள் ஓடிவிட இதழோர சிரிப்போடு அழைப்பை ஏற்று பேச ஆரம்பித்தான்..

ஹாய் ப்ரெண்ட்ஸ்..போன எபிக்கு உங்களோட சப்போர்ட்ல ஸ்ரீ பறக்காத குறைதான்.. ;) ரொம்பா ரொம்ப நன்றி எல்லாருக்கும்..இனி வர்ற எபிஸ் எல்லாமே இதுபோல சிறு சிறு சீண்டல் தீண்டலோடான அவர்களின் காதல் தான் இருக்கும்..கருத்துக்களை நிறை குறைகளை நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள்.. smilesmile

தொடரும்

Episode 05

Episode 07

{kunena_discuss:1164}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.