Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 14 - 28 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It

தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீ

inbame vazhvagida vanthavane

மாலை நேரம் மழைத்தூரும் காலம் 

என் ஜன்னல் ஓரம் நிற்க்கிறேன் 

நீயும் நானும் ஒருப்போர்வைக்குள்ளே 

சிலு மேகம் போலே மிதக்கிறேன் 

ஓடும் காலங்கள் உடன் ஓடும் நினைவுகள் 

வழிமாறும் பயணங்கள் தொடர்கிறதே 

இதுதான் வாழ்க்கையா ஒரு துணைதான் தேவையா 

மனம் ஏனோ என்னையே கேட்கிறதே 

உன் கரம் கோர்க்கையில் 

நினைவு ஓராயிரம்

பின் இருகரம் பிரிகையில் நினைவு நூறாயிரம் 

காதலில் விழுந்த இதயம் மீட்க்க முடியாதது 

கணவில் தொலைந்த நிஜங்கள் மீண்டும் கிடைக்காதது 

ஒரு காலையில் நீயில்லை தேடவும் மனம் வரவில்லை 

பிரிந்ததும் புரிந்தது நான் என்னை இழந்தேன் என..

நாட்கள் அழகாய் நகர ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் சரோஜா தமிழுக்கு அழைத்திருந்திருந்தார்..

“தமிழ் ஜோசியரை பாத்தோம்ப்பா இந்த மாச கடைசிலேயே முகூர்த்தம் ஒண்ணு நல்லாயிருக்குநு சொல்லிருக்காரு..”

“என்னம்மா சொல்ற இன்னும் 20-25 நாள் தான இருக்கு அதுக்குள்ள எப்படி??”

“தமிழ் நீ ஏன் கவலபடுற அதெல்லாம் நாங்க பாத்துக்குறோம் நீங்க ரெண்டு பேரும் சீக்கிரமே வந்தா மட்டும் போதும்..”

“ம்ம் சரிம்மா அப்படியே பண்ணிரலாம்..நா நிர்பயாகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்குறேன்..”

“சரிப்பா அப்பறம் நாளைக்கு உங்களுக்கு லீவ் தான நீ அவள கூட்டிட்டு போய்ட்டு அவளுக்கு தேவையான நகையை வாங்கிடு..அப்பறம் நிச்சயதார்த்ததுக்கு மோதிரமும் வாங்கிடுங்க..”

“ம்ம் சரிம்மா..நாளைக்கு பேசுறேன் பை..”

நிர்பயாவிடம் விஷயத்தை கூற அவள் சற்று பயந்தாள்.

.”இவ்ளோ சீக்கிரமா ,எனக்கு என்னவோ ஒரு மாதிரி டென்ஸ்டா இருக்குங்க..”

“ம்ம் புரியுதுடா..பட் ப்ராங்க்லி ஸ்பீக்கிங் நா இதுக்கு ஒத்துகிட்டதுக்கு முக்கிய காரணம் உன்னை ரொம்ப நாளைக்கு தனியா விட இஷ்டமில்ல..ஏனோ நாளாக நாளாக உன்னை மிஸ் பண்றமாதிரி ஒரு பீல்..சீக்கிரமா நீ இங்க வந்துடு..மத்தபடி எதை நினைச்சும் கவலபடாத..”,என அவன்போக்கில் பேச மறுபுறம் அமைதியாய் இருந்தது..

“ஹலோ நிரு லைன்ல இருக்கியா??ஹலோ??”

“ம்ம் இருக்கேன் செல்வா..”

மீண்டும் நீண்ட  நாட்களுக்கு பிறகு அவன் பெயரை குறிப்பிடுவதை உணர்ந்தவன் சற்றே தன்மையான குரலில் பேசினான்..

“என்னாச்சுடா??அம்மா அப்பாவ மிஸ் பண்றியா??”

மறுபுறம் விசும்பல் சத்தம் கேட்க,”நிரு கம் டவுண்..அவங்க ரெண்டு பேரும் உன்கூடவே தான் இருக்காங்க..தைரியமா இரு நா இருக்கேன்ல..”

“ம்ம்..”

“சரி நா போனை கட் பண்றேன் டூமினிட்ஸ்ல ப்ரெஷ் ஆய்ட்டு நீயே கால் பண்ணு..அழாம பேசனும் இல்ல நானே நேர்ல வந்துருவேன்..ஓ.கே??”,என்றவன் பதிலுக்கு காத்திராமல் கட் செய்துவிட பெண்ணவள் கண் துடைத்து முகம் கழுவி தன்னை கட்டுக்குள் கொண்டு வந்து அவனுக்கு அழைத்தாள்..

“ம் குட்..சரி அப்பறம் நாளைக்கு மார்னிங் ரெடியா இரு அம்மா உனக்கு வேண்டிய நகையெல்லாம் வாங்கிக்க சொன்னாங்க..அப்படியே உனக்கு வேறென்ன வேணுமோ வாங்கிக்கோ…சரியா??”

“ம்ம் சரி..”

“அழுகை வந்தா தான் செல்வானு கூப்பிடனும்னு இல்ல சாதாரணமாவும் கூப்பிடலாம் பை..”,என்றவாறு படுக்கச் சென்றான்..

றுநாள் காலையிலேயே எழுந்து தயாரானவன் தான் வருவதை அவளுக்கு குறுஞ்செய்தியாய் அனுப்பிவிட்டு கிளம்ப இவன் அங்கு செல்லும் நேரம் இவனுக்காக வெளியில் காத்திருந்தாள்..நேராய் டீநகரின் அந்த பிரபல புடவை கடையில் பைக்கை நிறுத்தியவன்  அவளோடு உள்ளே நுழைந்தான்..அவனை கண்டுகொண்ட கடை உரிமையாளர் வணக்கம் கூற கம்பீரமான தலையசைப்போடு உள்ளே சென்றான்..பட்டுப்புடவை செக்ஷனில் சென்று அவன் அமர அவளும் அவனருகில் அமர்ந்தாள்..

“ஹே என்ன நீயும் வந்து உக்காந்துட்ட புடவை செலெக்ட் பண்ணு எனக்கு இதெல்லாம் அவ்ளோ நாலெட்ச் கிடையாது..”

எனக்கும் தான் என பாவமாய் கூறியவளை பார்த்து அடக்க மாட்டாத சிரிப்பு வர அதை கட்டுப்படுத்தியவனாய் நார்மல் ரேட்ல நல்ல பட்டுப் புடவை காட்டுங்க என்றான்..தன் முன் இருந்ததில் மனதிற்கு நிறைவாய் இருந்ததை அவன் தேர்வு செய்து அவளிடம் காட்ட சம்மதமாய் தலையசைத்தாள்..அதன்பின் அவளை கேட்காமல் தானே அவளுக்கு பொருத்தமாய் இருப்பதாய் 5-6 புடவைகளை எடுத்தான்..

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4 
 •  Next 
 •  End 

About the Author

Sri

Latest Books published in Chillzee KiMo

 • AppaAppa
 • DeivamDeivam
 • Kadhal deiveega raniKadhal deiveega rani
 • Oru kili uruguthuOru kili uruguthu
 • Puthagam Mudiya Mayil EragePuthagam Mudiya Mayil Erage
 • Putham puthu poo poothathoPutham puthu poo poothatho
 • Pottu vaitha oru vatta nila - Part - 1Pottu vaitha oru vatta nila - Part - 1
 • Yaar kutravaliYaar kutravali

Completed Stories
Add comment

Comments  
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீChillzee Team 2018-02-28 00:01
arumaiyana athiyaayam Sree (y)

Tamil Niru naduve niraiya chinna chinna azhagana katchigal vaithu avangalukkul valarum abimaanam and anbai solli irukkeenga.

for eg, saree eduka teriyathunu sollum Nirupaya shirt select seivathu, athai kavanithu Tamil ketpathu, road side romeos ai parvaiyale Tamil adaka, athai Nirbaya kavanipathu etc etc

Padikka niraivaga, ithamaga irunthathu :-) Vazhthukkal.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீAdharvJo 2018-02-27 13:48
Cute update and mild transition in Niru, Sir ma'am :clap: :clap: ACP Sir wedding eve kaga waiting Dhool Kalakunga :dance: :thnkx: sri ma'am.
Reply | Reply with quote | Quote
# Inbame vaazhvagida vanthavane by SriSahithyaraj 2018-02-27 11:17
Hi ippave kilambittome. Very eagerly waiting for AC's wedding ceremony. Cuuuute epi. :GL: :clap: :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீAnnie sharan 2018-02-27 09:12
Hiii mam..... Nice update... Story flow rmba pleasant ah irunthuchu.... Shopping scenes super.... Pls maintain this pleasant feeling over the story.... Waiting to read more.... :GL: thanx for this update... :thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீஸ்ரீ 2018-02-27 09:39
Thank you annie sis..kandipa ini full uh ve pleasant uh than irukum..nambi padinga nanga irukom .. :D :D
Reply | Reply with quote | Quote
# inbame vgalvaahida vandhavanealmaash 2018-02-27 07:58
Asathiteenga akka.. Ivvalo panniteenga.. Ticket ayum neengale potuduvidungale.. Enakum 1st class thaan venum k va akka???
Reply | Reply with quote | Quote
# RE: inbame vgalvaahida vandhavaneஸ்ரீ 2018-02-27 08:32
Aha ipdi akka akka nu soba apaporam podama iruka mudiyathe..potruvom ;) ;)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீmadhumathi9 2018-02-27 05:19
(y) ok vanthuruvom.naanga thangarathukku hotel book pannidunga. :clap: Super epi.adutha epi fulla kalyaanamaa? Or atharkku adutha vaaramaa?waiting to read more. :thnkx: 4 this epi. :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீஸ்ரீ 2018-02-27 08:32
Done Madhu ji..:D vanga vanga :) :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீAnusha Chillzee 2018-02-27 03:05
cute upd Sri :-)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீஸ்ரீ 2018-02-27 08:33
Thank you aanusha sis :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீSrivi 2018-02-27 02:47
Vidu joot enga ooruku..super cute update.. Keep rocking Sri mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - இன்பமே வாழ்வாகிட வந்தவனே - 07 - ஸ்ரீஸ்ரீ 2018-02-27 08:33
wow nama oor uh nenga..polam ji come come :) :)
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

KNY

KTKOP

PVOVN2

PMM

IOKK2

VTV

IOK

NIN

EEKS

KET

KKP

POK

EMS

NSS

NSS

KiMo

NSS

VIVA

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top