(Reading time: 14 - 28 minutes)

“ம்ம் சரியா கேக்கல என்ன சொன்ன???”

தான் கூறியதை உணர்ந்தவள் நாக்கை கடித்து தன்னை தானே திட்டிக் கொண்டாள்..இல்ல அது..

“சரி சரி சமாளிக்க வேணாம்..கண்டிப்பா நா உன்கூடவே இருக்கேன்..அப்படி நா வெளில போனாலும் அம்மாவோ அண்ணியோ உன்கூடவே தான் இருப்பாங்க..சோ நெக்ஸ்ட் சனிக்கிழமை நாம கிளம்புறோம் அநேகமா அப்போதான் நேர்ல பாக்க முடியும்னு நினைக்குறேன்..வீக் புல்லாவே கொஞ்சம் டைட் வொர்க் இருக்கு ஒன் மந்த் லீவ்ல சோ ஹண்ட் ஓவர் பண்ணிட்டு வரனும்..”

“ஒன் மந்த்தா?????”

“ம்ம் ஆமா பின்னே.ஹே சொல்ல மறந்துட்டேனே ஊர்ல யார் கேட்டாலும் ரெண்டு வாரம்னு சொல்லு நாம அப்போதான் இங்க கிளம்ப முடியும்..ஓ.கே வா?”

அவன் பேச்சின் அர்த்தம் புரிந்தவளுக்கு முகம் அதுவாய் சிவக்க,”டியர் பொண்டாட்டிபோதும் அங்க சிவக்குறது இங்க தெரியது..கொஞ்சம் மிச்சம் வச்சுக்கோ..இங்க வந்தப்பறம் தேவைப்படும்..சரி நிரு பை சட்டர் டே பாக்கலாம்..டேக் கேர் டா..”

போனை வைத்தவள் தன் பெட்டியிலிருந்த பெற்றோரின் புகைப்படத்தை எடுத்து கையில் வைத்தவாறு சுவரில் சாய்ந்தமர்ந்தாள்..இப்படி ஒரு வாழ்க்கை தனக்கு அமைவதை பார்ப்பதற்கு அவர்கள் இல்லையே என்ற எண்ணம் ஏனோ மனதினுள் உழன்று கொண்டேயிருந்தது..தமிழுக்கு தன் மீதான அன்பும் அக்கறையும் அவளுக்கு நிறைவாய் இருந்தது..

தன்னை போன்ற பெண்ணுக்கு கல்யாணம் என்பதே எட்டா கனி எனும் உலகத்தில் இத்தனை காதலோடு ஒரு கணவன் தாயின் அன்போடு மாமியார் அழகான ஒரு குடும்பம் இதெல்லாம் கிடைத்திருப்பது இன்னமும் கனவா நினைவா என்ற குழப்பத்திலேயே பாதி இரவு கழிந்தது..

ஊருக்கு கிளம்புவதற்குள் ஓரளவு அனைவரையும் எதிர்கொள்ள தயார் படுத்திக் கொண்டாள்..தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அவர்களுக்கு எந்தவித கெட்ட பெயரும் அளித்துவிட கூடாது என்பதை மனதில் கொண்டாள்…சனிக்கிழமை இரவு இரயில் என்பதால் மாலை 7 மணிளவில் கிளம்பி தமிழோடு எக்மோர் ஸ்டேஷனிற்கு வந்தாள்..முதல் வகுப்பில் டிக்கெட் புக் செய்திருக்க தங்கள் கூபேவை பார்த்து லக்கேஜை வைத்து செட்டில் ஆகவே நேரமெடுத்தது..

“ஷப்பாபா..இதுக்குதான் ஊருக்கு அவ்வளவா போறதேயில்ல கால் டேக்ஸில 1 மணி நேரம் அடுத்து ட்ரெயின்ல 12 மணிநேரம்னு வாழ்க்கைய வெறுத்துடுவேன்..ஆமா உனக்கெப்படி??”

“எனக்கு ட்ராவல்னா ரொம்ப பிடிக்கும்…அதுவும் ட்ரெய்னா ரொம்ப இஷ்டம்..”

“அதானே எல்லாமே எனக்கு ஆப்போசிஸ்ட் தான்..”,என்று பேசிக் கொண்டிருக்கும் போதே வயதான தம்பதிகள் அவர்கள் கூபே விற்கு வர அத்தோடு பேச்சை நிறுத்தி நிமிர்ந்து அமர்ந்தான்..நிர்பயாவும் எழுந்து அவனருகில் அமர்ந்தாள்..

அவர்களைப் பார்த்து பெரியவர்கள் சிநேகமாய் சிரிக்க பதிலுக்கு புன்னகைத்தனர்..

“நீங்களும் திருநெல்வேலிக்கு தான் வாரீங்களா???”

“ஆமா அங்கிள்..நீங்க??”

“நாங்களும் அங்கதான்ப்பா..வண்ணார்பேட்டை..பையன் இங்க இருக்கான் பேரபசங்க இருக்காங்க பாக்கனும்னு தோணிணா வந்துருவோம்..இங்கேயே இருக்க சொல்றான் நமக்கு தான் நம்ம சனத்தையெல்லாம் விட்டு இங்க கூண்டுக்குள்ள வந்து அடைய முடில ..”

“அது கரெக்ட் தான் அங்கிள்..எங்க அப்பா அம்மாவும் இதே கதை தான் “,எனக்கூற..

“தம்பி விரைப்ப பாத்தா பட்டாளத்துகாரர் மாதிரி இருக்கீகளே??”

“போலீஸ்ல இருக்கேன்..அஸிஸ்ட்டெண்ட் கமிஷனர்..”

“ஓ..நல்லது நல்லது..”

“இது யாரு உங்க வீட்டுகாரம்மாவா??”,என அவரின் மனைவி ஆர்வமாய் கேட்க,

சிரித்தவாறே,” ஆமா ஆன்ட்டி அடுத்த வாரம் கல்யாணம் அதுக்காக தான் ஊருக்கு போய்டு இருக்கோம்..”

“அப்படியா ரொம்ப சந்தோஷம்..ஜோடிபொருத்தம் அம்சமா இருக்கு”, என கூறி இருவரும் புன்னகைத்தனர்..

“ஏன்ம்மா நீ ஒண்ணும் பேச மாட்ற??”

“ஆன்ட்டி அவளுக்கு தமிழ் கொஞ்சம்தான் தெரியும் நீங்க நம்ம ஊரு பாஷை பேசுறீங்கல அதான் அமைதியா இருக்கா..”

ஓ..சரிதான்..இப்படியாய் இரவு உணவு முடித்து அவர்கள் படுக்கச் செல்ல கண்ணசைத்து அவளை வெளியே வரச் சொன்னான்..

“என்னாச்சு முகமே சரியில்ல..”

“ஒண்ணுமில்லங்க எவ்ளோ பேசுறாங்க நிஜமாவே எனக்கு பாதிக்கு மேல அர்த்தம் புரில..இரண்டு பேரே இப்படினா நாளைக்கு உங்க வீட்ல??நினைச்சாலே பயமா இருக்கு..”

அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்தவன்,” நாதான் சொல்லிருக்கேன்ல நா உன்கூடவே இருக்கேன்னு..அதைமீறியும் யாரையாவது சமாளிக்க முடிலனா நீங்க பேசுறது புரிலநு சொல்லிடு சிம்பிள்..ம்ம்..போய் தூங்கு மார்னிங் ஸ்டேஷன்கே எவ்ளோ பேர் வருவாங்களோ தெரியாது “,எனக் கூறி கண்ணடிக்க இன்னுமாய் மிரண்டு போனவளை லேசாய் தோள்தட்டி ரிலாக்ஸ் போ போய் தூங்கு என அனுப்பி வைத்தான்..

மக்களே எல்லாரும் சொந்த செலவுல டிக்கெட் போட்டு திருநெல்வேலிக்கு வந்துருங்க..அடுத்த வாரம் அங்க மீட் பண்ணலாம்.. smilesmile

தொடரும்

Episode 06

Episode 08

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.