(Reading time: 33 - 65 minutes)

தொடர்கதை - ஒளிதருமோ என் நிலவு...? - 20 - தீபாஸ்

oten

ஜானகி விழித்திருக்கும் போது எல்லாம் அவளின் அருகில் அழகுநிலா இருந்து, நேற்றுபோல ஜானகியுடன் பேசினாலும் அவளின் மனது இன்று கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. காலையில் ஆதித் தன்னிடம் கூறியதையே அவள் மனம் திரும்பத்திரும்ப நினைத்துப் பார்த்தது.

அவள் ப்ரெஸ் ஆகி ரெஸ்ட் ரூமை விட்டு வெளிவந்ததும் அவளை பார்த்த ஆதித் ஏய் அழகி நாளைக்கு நீ மிசஸ் ஆதித்தராஜ் ஆகிவிடுவாய். உன் வீட்டில் அப்பா பேசி கல்யாணத்திற்கு சம்மதம் வாங்கிட்டாங்க, டுடே நைட் உன் வீட்டில் உள்ளவர்கள் பிளைட்டில் கிளம்பி இங்க வந்துடுவாங்க, சோ! நிறைய வேலை இருக்கு. நீ தான் இன்னைக்கு முழுவதும் அம்மாகிட்ட இருந்து பார்த்துக்க போற, நான் அம்மாட்ட ஏற்கனவே இதப்பத்தி பேசிட்டேன் என்று கூறியவன், ஓகே பேபி என்று இயல்புபோல இரு கைகளையும் விரித்தபடி அவளிடம் ஹக் பண்ணி விடை பெரும் எண்ணத்துடன் அருகினில் வந்தான் .

அவன் தன்னிடம் நாளை இருவருக்கும் கல்யாணம் என்று கூறியதுமே அவளுக்கு இன்பமா? துன்பமா? பயமா? அல்லது அதுக்குள்ளேயா என்ற படப்படப்பா? என்று புரியாத ஒரு நிலைக்கு ஆளானவள், அவன் தன்னை இயல்புபோல அணைக்க வருவதை கண்டதும் அன்னிச்சை செயல் போல் அவன் கையில் அகப்படாதவாறு ஆ என்ற சாவுண்டே இல்லாமல் வாயைதிறந்து கூறி கண்ணை விரித்து ஒரு எட்டு பின்னால் நகர்ந்தாள்.

அவள் தன்னுடைய அணைப்புக்குள் அடங்க மறுத்து பின்னால் நகர்ந்த விதத்தையும் அவளின் முகத்தையும் பார்த்தவன், தனக்குள்ளேயே அவசரப்படாதடா ஆதித்.... என்று கூறியவன். அழகியிடம், சரி, உன்கிட்ட வரல ரிலாக்ஸ்..... என்று சொல்லியவன் நான் கிளம்புறேன். நைட் வந்து நம்ம ப்ரோகிராம்ஸ் பற்றி உன்னிடம் சொல்கிறேன், வா அம்மாகிட்ட சொல்லிட்டு நான் கிளம்புகிறேன் என்று ஜானகி இருந்த வார்டிற்கு அவளுடன் வந்தான்.

வந்தவன் அவன் அன்னையிடம் சொல்லி விடை பெற்றவன், நீ அம்மாகிட்ட இரு அவங்க தூங்கும் போது ரூமிற்கு போய் ரெஸ்ட் எடு என்று கூறியவன் பை என்று சொல்லிவிட்டு விரைந்து வெளியேறிவிட்டான்.

ஆதித் இருவருக்கும் திருமண உடை முதல் தாலிவரை சகலத்தையும் தானே வாங்கியவன், அவள் அன்று போட்டுக்கொள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை அவனே வாங்கினான். பின் ஊரில் இருந்து வரும் அழகுநிலாவின் வீட்டாருக்கு தன வீட்டின் கெஸ்ட் ஹவுஸில் வந்து தங்குவதற்கு தோதாக சுத்தம் செய்துவைக்கச் சொன்னவன், திருமணம் முடிந்துடன் அவனது திருமண அறிவிப்பை இருவருடைய புகைப்படத்தோடு பத்திரிக்கையில் வெளிவருவதற்கு தேவையான ஏற்பாடுகள் அனைத்தும் செய்து கொண்டிருந்தான் .

நேற்றைவிட இன்று ஜானகி பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது அழகுநிலாவிற்கு மகிழ்ச்சியை தந்தது. நேற்று முழுவதுவும் அழகுநிலா ஜானகியுடன் பேசியதற்கு மாறாக இன்று ஜானகி அதிகம் அவளுடன் பேச முயன்றாள். நாளை நடக்கும் கல்யாணத்தை பற்றியே அவளின் பேச்சு இருந்தது. அழகுநிலாதான் அவரை அதிகம் ஸ்ட்ரெயின் பண்ணிகொல்லாமல் பார்த்துக்கொள்ள அதிகம் மெனக்கெட வேண்டியிருந்தது.

அப்பொழுது ஜானகி கூறினாள், இந்த கல்யாணத்தை என் உடல்நிலையை காரணம் காட்டினால்தான் உன் வீட்டில் காரியம் சாதிக்கமுடியும் என்பதை உன் மாமா புரிந்துகொண்டுதான் உன் வீட்டில் பேசியிருப்பார் என்று கூறியதை கேட்ட அழகுநிலாவும் தன வீட்டில் இவ்வளவு சீக்கிரம் சம்மதிப்பார்கள் என்று நினைக்கவில்லை. இப்பொழுது ஜானகி கூறியபிறகு அவர் சொல்வதுவும் சரிதான் என்று நினைத்துக்கொண்டாள்

அழகுநிலா யோசனையுடன் இருப்பதை பார்த்த ஜானகி என்ன அழகி....! உன் கல்யாணம் எப்படியெல்லாம் பார்த்துபார்த்து பன்னுனும் என்ற ஆசை உனக்கு இருந்திருக்கும் இப்படி அவசரமாக பண்ணுவது உனக்கு வருத்தமாக இருக்கிறதா? என்று கேட்டார்

அதற்கு அழகி அப்படியெல்லாம் இல்லை அத்தை இரண்டு வீட்டு பெரியவர்கள் முன்னிலையில் என் கல்யாணம் நடப்பதே எனக்கு சந்தோசத்தை தருகிறது என்று கூறினாள்.

அதன் பின், தான் அங்கிருந்தால் அதிகம் பேசி அவரின் உடல்நிலையை மோசமாக்கிக் கொள்வார்களோ! என்ற எண்ணத்தில் கொஞ்சம் சோர்வுடன் இருப்பவளை பார்த்த ஜானகி, இப்படி ஹாஸ்பிடலில் என்னை கவணிக வைத்து சேர்வாகிவிட்டேனே கல்யாணப் பெண்ணை? போய் ஓய்வு எடு. நாளைக்கு பிரெஸ் ஆக இருக்கனும் என்று கூறி அவளே அழகியை ரூமிற்கு போகச்சொன்னாள்.

கதவைத் திறந்தவள் ரூமிற்கு செல்வதற்கு இரண்டு அடி எடுத்துவைத்ததும் அவளிடம் வேகமாக வந்தான் கருப்பு நிற உடையணிந்து உரம் பருமன் மிகுந்த ஒருவன் அதேபோல் மேலும் ஒருவன் அங்கு நிற்பதையும் பார்த்தவள் பயத்துடன் அவனை பார்த்தாள்.

மேடம் ஆதித் சார் உங்களை தனியாக எங்கும் செல்ல விடக்கூடாது என்று சொல்லியிருகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருகும் போது அவளின் மொபைல் ஒலி எழுப்பியது எதிரில் நின்றவன் சொல்வதை நம்புவதா? வேண்டாமா? என்று யோசனையுடன் தன மொபைலை எடுத்ததும் ஆதில் ஆதித் அழைப்பதை அறிந்ததும் நிம்மதியான மனதுடன் அதனை அட்டன் செய்தாள்.

எடுத்த உடனேயே பேபி! உனக்கு பாதுகாபிற்காக ரூம் வாசலில் இரண்டு பேர் இருப்பார்கள் நீ எங்கு போனாலும் உன்னுடன் பாதுகாப்புக்கு வருவார்கள் அவர்களை பார்த்து பயந்துவிட்டதே! தனியா எங்கும் போகாதே! என்று கூறியவன் அம்மா எப்படி இருக்கிறார்கள் அழகி? என்று கேட்டான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.