(Reading time: 33 - 65 minutes)

தயக்கத்துடன் அம்மா அண்ணன் எல்லோரும் வந்துட்டாங்களா? உங்களுடன் நல்லபடி பேசினார்களா ? என்னை என் அம்மா கேட்டார்களா? என்று தொடர்ந்து கேள்விஎழுபினாள் அழகி.

அவளில் தொடர்ச்சியான கேள்வியில் ஒருநிமிடம் அவளை ஆழ்ந்து பார்த்த ஆதிதுக்கு, அவள் வீட்டில் இருந்து வந்தவர்கள் தன்னை பார்த்து உடன் அழகியை கேட்பார்கள் தேடுவார்கள் என்று தான் நினைத்துக்கொண்டிருந்தான் ஆனால் வந்ததும் அவளை பற்றி எதையும் அவர்கள் விசாரிக்கவில்லை. அதை கூறினால் வருத்தப்படுவாள் என்று நினைத்துக்கொண்டான்.

எனவே அதனை கூறாமல் இல்லை அழகி நான் ஏர்போர்ட் போய் அவங்களை கூப்பிட்டுக்கொண்டு வர முடியல. வேலை வந்துருச்சு ஆனா அவங்க வருவதற்கு கார் அரேஞ் பண்ணியிருந்தேன் அதில்தான் வந்தாங்க.

ஆனால் வீட்டிற்கு அவங்க வருவதற்கு ஒருநிமிடம் முன்னால் வந்து அவங்களை வரவேற்று தங்கவைத்து, உடனே உன்னை கூப்பிடுக்கொண்டு போக வந்ததால் வேறு எதுவும் அவங்ககூட பேச நேரம் இல்லை என்று கூறியவன், காரை அங்கிருந்த ஒரு பெரிய லேடீஸ் பியூட்டி பார்லரின் முன் நிறுத்தினான் இங்க எதுக்கு நிறுத்துறீங்க நேராக வீட்டிற்குபோகலாமே, என் வீட்டில் இருந்து வந்தவங்க காத்துகொண்டு இருப்பார்கள் என்று கூறினாள்.

உடனே ஆதித் போலாம் பேபி , நாளைக்கு உனக்கு பிரைடல் மேக்கப்போட புக் செய்திருக்கிறேன் அவங்களை இப்போ நம்ம கூட கூப்பிட்டுக்கொண்டு போகத்தான் வந்திருக்கிறோம் என்றான்.

அவன் அவ்வாறு கூறியதும் என் பேர் அழகுநிலா அதென்ன பேபி [மனதிற்குள் இப்படித்தானே அந்த வர்ஷாவை கூப்பிடுருப்பான் என்னாலெல்லாம் அவள்மாதிரி இருக்கமுடியாது. என்று தேவையில்லாமல் அவள்மேல் பொறாமை எழுந்தது ] என்னை பார்த்தா பாப்பா மாதிரியா இருக்கு என் பேர் சொல்லி கூப்பிடுங்கள் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் முகத்தில் புன்னகையுடன் தன் ஒற்றை புருவத்தை தூக்கியபடி உன் முகத்தை பார்த்தால் பப்பா... போலத்தான் இருக்கு! ஆனால் என்றவன் பார்வை அவளின் உச்சியில் இருந்து உள்ளம் கால்வரை பயணித்து ரசனையுடன் கூறினான் உன் முகத்தின் கீழ்பார்த்தால் பெண் அதுவும் வளைவு சுழிவுள்ள அழகான பெண் என்று என்று ஒத்துக்கொள்கிறேன்.

நீ சொல்லு இப்போ! உன் முகத்தை பார்த்து பேபி என்று கூப்பிடவா அல்லது உன் என்று மேலே அவனை கூறவருவதை கேட்டு விபரீதமாக எதையோ அவன் சொல்லப்போவதை உணர்ந்து, எட்டி அவன் வாயினில் தன கையால் பொத்தி அச்சோ நீங்க என்னை பேபி என்றே கூபிடுங்கப்பா...! வேற ஒன்றும் நீங்க சொல்லவேண்டாம் என்று படபடப்புடன் கூறினாள்.

அவள் தன வாய் மேல் வைத்த கரத்தை அதை அசைய விடாமல் தன கையால் பிடித்தபடி அதில் அழுத்தமாக முத்தமிட்டான் ஆதித்! அதனை எதிர்பார்க்காத அழகுநிலா வெடுகென்று தன கையை உருவியவளின் கன்னங்கள் இரண்டும் சிவந்து போய்விட்டது. எட்டி அவள் கன்னத்தை தொட ஆதித் போனபோது மேக்கப் கிட் அடங்கிய பேக்குடன் ஒருபெண் காரின் கதவை தட்டவும் அதில் இருக்கும் நிலை உணர்ந்து தன்னகுள்ளே சிரித்தபடி பின்னால் இருந்த காரின் கதவை திறந்து அந்த பெண்ணிடம் ஏறும்படி கூறினான் ஆதித். அவள் ஏறியதும் இவங்கதான் பொண்ணா சார் என்று கேட்டதும், ஆதித் ஆமாம் நாளைக்கு இவங்களுக்கும் எனக்கும்தான் கல்யாணம் என்று ரசனையுடன் அவளைப் பார்த்துகொண்டே கூறியவன் காரை லாவகமாக ரோட்டில் விரட்டினான்.

கார்வீட்டில் நின்ற உடனே அழகி ஆதித்திடம் அம்மா எங்க தங்கியிருக்காங்க? பின்னல் உள்ள கெஸ்ட் ஹவுஸ்லயா? என்று கேட்டதும், யா... பேபி என்று ஆதித் கூறினான்.

அவர்களை பார்க்கும் அவசரத்துடன் இறங்கிய அழகுநிலவை பார்த்த பியூடிசன் மேடம் கொஞ்சம் உங்களுக்கு மசாஜ் பண்ணனும் அப்பத்தான் நாளைக்கு பிரெஸ் ஆக தெரிவீங்க, மேலும் மெகந்திவேறு போடனும் என்று அவள் போவதை தடுக்கப் பார்த்தாள்.

ஆதித்..! அம்மாவை பார்த்துட்டு வந்துருவேன் அவங்களை கொஞ்சம் வெய்ட் பன்னச்சொல்லுங்களேன்! என்று கூறினாள். உடனே ஆதித், நோ பேபி..! கல்யாணம் முடிச்சதும் பேசலாம். நீ ரொம்ப டயர்டா இருக்க என்று கூறினான் ஏனெனில் ஆதித்துக்கு அவளின் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்தவுடனே அவர்கள் அழகுநிலவை பற்றி எதுவும் தன்னிடம் விசாரிக்கவில்லை என்று நோட் செய்துகொண்டவன் அவர்கள் இன்னும் அவளின் மேல் கோபமாக இருப்பதை உணர்ந்துகொண்டான்.

எனவே, இப்பொழுது அவள் அவர்களை பார்த்தால் கண்டிப்பாக சுமூகமாக பேசமாட்டார்கள் அதனால் அவளின் மனம் கஷ்ட்டப்படும் என்பதற்க்காகவே அவ்வாறு கூறியவன் மேலே தன்னுடைய அறையிலேயே அவளை தங்க வைக்கவும் அவன் கீழே உள்ள ஒரு அறையில் தங்கிக்கொள்ளலாம் என முடிவெடுத்திருந்தான்.

அவன் அவ்வாறு கூறியதும் ஓகே ஆதித் நான் வாங்க என்று கேட்டுவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் என்றவள், கெஸ்ட் ஹவுஸ்சை நோக்கி சென்றேவிட்டாள்.

அங்கிருந்த வேலைகாரரிடம் இவங்களை ஹாலில் உட்காரவையுங்க நான் வந்துவிடுகிறேன் என்று அவளின் பின்னாலையே ஆதித்தும் சென்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.