(Reading time: 33 - 65 minutes)

அவர் கூறியுடன் முன்னாள் நடந்துகொண்டிருந்த அவர்களின் வீட்டாரோடு வேகமாக எட்டுவைத்து இணைந்து, அம்மா...! உங்க கூட நானும் ஹாஸ்பிடல் வருகிறேன் என்று கூறி வந்ததும் ராசாத்தி அப்படியே நின்றுவிட்டாள்.

ஏலே குமரேசா.. இனி ஒருதடவ இவ வாயால என்னை அம்மானு கூப்பிடக்கூடாது. ஊருக்குள்ள என்னை பார்த்து உன் மக எவனோடயோ காதலிச்சுகிட்டு சுத்துராளாமே என்று நாக்குமேல பல்லப்போட்டு என் முன்னே பேசாதவ கூட பேசவச்ச அன்னிக்கே என் மவ செத்துட்டா, இப்போ நான் இங்க வந்து இவளுக்கு கல்யாணம் முடிச்சுவச்சதுக்கு காரணம் இவளோட ஞாபாகப்படுத்துற எதுவும் என் வீட்டில் இருக்கக் கூடாது. அதெல்லாம் இவகிட்ட சேர்த்துட்டு இவள தல முழுகிட்டுப் போவத்தான் வந்தேன். இவ நம்ம கூட காருல ஏறினா நான் ஆஸ்பத்திரிக்கே வர மாட்டேன். இனி அவளுக்கும் நமக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. நம்மளால வசதியான இடத்தில் மாப்பிள்ளை பார்க்கமுடியாதுன்னு அவளுக்கு அவளே மாப்பிள்ளை தேடினாளோ அப்போவே அவ செத்துட்டததா நினச்சுட்டேன் என்றாள்.

அவள் அவ்வாறு கூறியதும் விக்கித்து போய் அப்படியே நின்றுவிட்டாள் அழகுநிலா. அவர்களின் பின் வந்த ஆதித் அவளின் கை பிடித்து நான் இருக்கிறேன் உனக்கு அழகி. அவங்களை கண்டிப்பா உன்னுடம் சமாதனப்படுத்தி பேசவைப்பது என்பொறுப்பு என்று தொய்ந்து போய் அமரப்போனவளை தன்னுடன் சேர்த்து பிடித்தபடி கூட்டிவந்தவன், புது மனதம்பதிகளுக்காக அலங்காரம் செய்த புத்தம்புது சிகப்புநிற இன்னோவாவில் அவளுடன் ஏறி ஹாஸ்பிடலில் இறங்கினான்.

வழிநெடுக்க தன்னை மறந்து தன்னை தாங்கி கொண்ட ஆதித்தின் தோளில் முகம் புதைத்து தன துக்கம் தீர அழுதபடி வந்தாள். அவள் அம்மா பேசிய பேச்சு அவள் மனதை ரணமாக்கி இருந்ததால் அவளின் துக்கம் குறையவே இல்லை. இறங்கும் இடம் வரை கண்ணீரும் நிற்கவே இல்லை .

ஹாஸ்பிடலில், இறங்கு அழகி என்று ஆதித் சொன்னவுடனே நேரா என்னை ரூமிற்கு கூப்பிட்டுக்கொண்டு போங்க ஆதித். அத்தை என்னை இப்படி அழுத முகத்துடன் பார்த்தால் கவலைப் படுவார்கள் அது அவர்களின் உடல்நிலையை பாதிக்கும். நான் கொஞ்சம் முகத்தை கழுவியபின் அத்தையிடம் போகலாம் என்றாள்.

அவளின் மனம் புண்பட்டிருக்கும் இந்த நிலையிலும் தன அம்மாவிற்காக யோசிக்கும் அவளின் தன்மையில் வெகுவாக அவளின் பால் ஈர்க்கப்பட்டன் ஆதித். எனவே நெகிழ்ச்சியுடன் ஓகே பேபி! வா போகலாம் என்று கூறியவன், மனதினுள் அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற எண்ணம் பிறந்தது. மேலும் அவளின் வீட்டில் உள்ளவர்களுக்கு அழகியின் மீதுள்ள கோபத்தை போக்கி அவளுடன் அவர்களை பேசவைக்கவேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டான்.

அதன்பின் முகம் கழுவி அழுததுதெரியாமல் மேக்கப் செய்து வேகமாக ஜானகி இருந்த ரூமிற்கு வந்தார்கள் ஆதித்தும் அழகுநிலாவும், வெளியில் அவர்களுக்காக காத்திருந்தனர், வேலாயுதமும் அழ்குநிலாவின் அம்மா வீட்டாரும்.

அவர்கள் வந்ததும் உள்ளே சென்ற ஆதித்தையும் அழகுநிலாவையும் பார்த்த ஜானகிக்கு ஆனந்தத்தில் கண்களில் கண்ணீர் வடிந்தது. அழகுநிலாவும் சிரிப்புடன் எங்களை ஆசீர்வாதம் செய்ங்க அத்தை என்று ஆதித்துடன் படுத்திருந்த அவளின் பாதம் தொட்டு வணங்கினர்

இருவரின் கைகளையும் ஒன்றாக தன் கைகளுக்குள் சேர்த்து பிடித்தபடி என் மகனை ஒரு தேவதை பெண்ணிடம் ஒப்டைத்துவிட்டேன். இனி எனக்கு எந்த கவலையும் இல்லை என்றாள்.

அம்மா என்னம்மா உங்க மருமக வந்ததும் என்னை டம்மி பீசாக மாத்திடீங்களே! இது உங்களுக்கே நியாயமா? என்று கண்களில் திரண்ட நீருடன் உதட்டில் புன்னகையுடன் பதில் கொடுத்தான் ஆதித். அவரின் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த வேலாயுதத்தை பார்த்து என்னங்க சம்பந்தி வீட்டாரை கூப்பிட்டுக்கொண்டு வரவில்லையா? என்று கேட்டதும், சற்று தள்ளிநின்ற ராசாத்தி மற்றும் குமரேசன் வாணியை பார்த்து ஏன அங்கேயே நின்னுட்டீங்க வாங்க என்று வேலாயுதம் கூப்பிட்டார்

ராசாத்தியை பார்த்ததும் சம்பந்தி என்று மலர்ச்சியுடன் கூப்பிட்டதும், தன்னை அறியாமலேயே ராசாத்தி வேகமாக அவளின் அருகில் வந்து கை பிடித்து எல்லாம் சரியாபோயிடும். அந்த மீனாச்சி ஆத்தா உங்களை நீண்ட ஆயுளோடு பார்த்துப்பா என்று கூறினாள்.

உடனே புன்னகையுடன் உங்க மகளை எனக்கு மருமகளா அனுப்பியதே அந்த மீனாட்சி கடவுள் தான். இதுயாரு...... அழகுநிலாவின் அண்ணனா என்று பக்கத்தில் நின்ற குமரேசனை பார்த்து கேட்டதும், ஆமா இது என் மவன் குமரேசன், மருமகள் வாணி, இது என் பேரன் என்று குமரேசன் கையில் இருந்த குட்டிப் பையனை அறிமுகப்படுத்தினாள் ராசாத்தி.

கல்யாணக்கோலத்தில் தன பிள்ளையை பார்த்ததும் கொஞ்சம் உணர்ச்சிவசப்படதால் அவளுக்கு பல்ஸ் கொஞ்சம் எகுற ஆரம்பித்ததை அங்கிருந்த நர்ஸ் கவனித்தாள். எனவே, போதும்.... போதும்.... அவங்க ரொம்ப ஸ்ட்ரைன் பண்ண வேண்டாம். பல்ஸ் நார்மலாயில்லை. எல்லோரும் கொஞ்சம் வெளியில் போகிறீர்களா? அவங்களுக்கு மருந்து கொடுக்கணும் என்று சொல்லவும் எல்லோரும் வெளியில் வந்து விட்டனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.