(Reading time: 33 - 65 minutes)

வெளியில் வந்ததும் ராசாத்தி, அப்ப நாங்க வரோம் தம்பி என்று ஆதித்திடம் சொல்லியவள் வேலாயுதத்திடமும் நாங்க வாரோம் அய்யா! என்று சொல்லிவிட்டு விடைபெற்று அழகுநிலாவை திரும்பி கூட பார்க்காமல் விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்ததும், குமரேசன், இருமா நாங்களும் வரோம் என்று பொதுவாக எல்லோரிடம் நாங்க கிளபுறோம் என்று கூறியவன், வா... வாணி என்று தன மகனை கையில் ஏந்தியவன் அவர்களின் பதிலை கூட கேட்காமல் வேகமாக எட்டுவைத்து வெளியேறிவிட்டான்

அதற்குள் ஆதித்தின் பிஏ, பாஸ்.... ஆப்டர்நூன் ஆகிடுச்சு லஞ்ச டயத்திற்குள் இங்க வந்துடுவீங்களா? என்று கேட்டதும் அங்கு போகவேண்டிய கட்டாயம் உணர்ந்து அப்பா ஓ எம் ஆர் பங்களாவில் என் வொர்கர்ஸ் எல்லோருக்கும் லஞ்ச ஏற்பாடு செய்திருக்கிறேன் போகணும் என்று ஆதித் கூறியதும், நீ போய் அங்க கவனிப்பா அழகுநிலாவிற்கு கொஞ்சம் மாற்றம் தேவை. நான் இங்கே பார்த்துகொள்வேன். நாளைக்கு நீங்க ஹாஸ்பிடல் வந்தா போதும் என்று அனுப்பிவைத்தார் வேலாயுதம்.

அழகுநிலா உணர்ச்சி துடைத்த முகத்துடன் அமைதியாக அவனுடன் பயணமானாள் அங்கு சென்றதும் அவனின் வொர்கர்ஸ் அவர்களுக்கு வாழ்த்து கூறி பரிசுகள் கொடுத்தனர். அப்போது அழகுநிலா தனது துக்கத்தை காண்பிக்காமல் மறைத்தபடி ஆதித்துக்காக கொஞ்சம் சிரித்தபடி அதில் பங்கு கொண்டாள். எல்லோரும் சாப்பிட உட்கார்ந்ததும் அவளை தன அறைக்குள் கூப்பிட்டுகொண்டு வந்தான் ஆதித். அவ்வளவு நேரமும் அழுகக்கூட முடியாமல் இருந்த சூழலில் இருந்தவள் தனியாக வந்ததும் அழுகை வெடித்துக்கொண்டு வர தேம்பிதேம்பி அழுக ஆரம்பித்தாள்.

ஆதித்துக்கு எவ்வாறு அவளை தேற்றுவது என்றே தெரியவில்லை. கொஞ்சநேரம் நான் இருக்கிறேன் அழகி! அவங்களுக்கு நடந்தது தெரியாது. நீ அழுத்தால் என்னால் தாங்க முடியவில்லை. ப்ளீஸ்..... பேபி அழுகாதே என்று கூறினான்.

என் அம்மா என்னுடன் பேசாமல் போய்விட்டார்கள் ஆதித். இனி என் வீட்டார் என்னை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்களா? என்னிடம் விளக்கம் கூட கேட்பதற்கு அவர்கள் தயாராக இல்லையே! என்று கூறியவள் கண்ணில் கண்ணீர் வழிந்தது.

கொஞ்சம் கொஞ்சமாக அழுவதை குறைத்து, தேப்ம்பியபடி அவள் இருக்கவும், ஆதித் அவன் பெட் ரூமிலிருந்த சோபாவில் அவளை அமரவைத்தவன் அவளின் கலைந்திருந்த தலையை ஒதுக்கிவிட்டபடி கூறினான், எல்லாமும் மாறும் அழகி. சீக்கிரமா அவங்க உன்னை புரிந்துகொள்வார்கள். இப்போ உன் வாழ்கை என்னோடு. என் பேபி எப்பொழுதும் அழுகக் கூடாது என்று கூறியவன், அங்கு பிளாஸ்கில் இருந்த பாலை அவளுக்கு டம்ளரில் ஊற்றி நீ சரியா சாபிடல. இதையாவது குடி என்று நீட்டினான். அதை கையில் வாங்கி கொண்டவள் குடிக்காமல் அதனை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருப்பதை பார்த்த ஆதித் பிளாஸ்க்கை மூடி வைத்தவன் அங்கிருந்த பெரிய கீபோர்டின் முன் போட்டிருந்த ஸ்டூலில் அமர்ந்தவன் அதன் மேல் மூடியிருந்த துணியை விலகினான்.

அவளின் கவலையை போக்கி உனக்காக நான் இருக்கிறேன் என்று உணர வைப்பதற்காக அந்த கீபோர்டை மீட்டி இசை எழுப்பினான்

அந்த இனிமையான சத்தத்தில் அவனை நிமிர்ந்து அழகி பார்த்ததும், அவளை காதலுடன் பார்த்தபடி உனக்கு நானிருக்கிறேன் என்று கண்களால் கூறிவிட்டு இசையுடன் அவளை அமைதிபடுத்த பாட ஆரம்பித்தான்.

 

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒருகதை என்றும் முடியலாம்

முடிவினில் ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே...... .

அவன் பட ஆரம்பித்ததுமே அவளும் தன வாழ்கை தொடரின் அடுத்த அதியாயத்துல் ஆதித்துடன் பயணிக்க ஆரம்பித்துவிட்டதை உணர்த்துகிறான் என்பதை புரிந்துகொண்டாள்.

உன் நெஞ்சிலே பாரம்

உனக்காகவே நானும்

சுமைதாங்கியாய் தாங்குவேன்....

அவனின் அந்த வரிகளில் ஏற்கனவே என்னை தாங்கிக் கொண்டவன்தானடா நீ என்று நினைத்தவளின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

உன் கண்களின் ஓரம்

எதற்காகவோ ஈரம்?

கண்ணீரை... நான் மாற்றுவேன் .

அவனின் அந்த வரிகள் தன கண்ணீரை துடைப்பதுபோல் இருந்ததும், அவளும் அமர்ந்த இடத்தை விட்டு எழுந்து அவனின் அருகில் போய் நின்று தன கண்ணீரை துடைத்தபடி இனி அழமாட்டேன் என்று கூறினாள். அதில் சிரித்தவன்

வேதனை தீரலாம்

வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே.... புதுஅழகிலே...

நானும் இணையலாம்.

என்று கூறியவன், மனது அவளுடன் வாழும் வாழ்கையை மனதினுள் அசை போட்டுப்பார்த்தது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.