(Reading time: 33 - 65 minutes)

குமரேசனுக்கு, அதித்தின் வீட்டில் இருந்து சமாதானம் பேசவந்ததுமே கொஞ்சம் தங்கைமேல் உள்ள கோபத்தை மட்டுப்படுத்தியிருந்தான். நம்ம தங்கை இந்த காலத்துப்பொண்ணு .நான், என் தங்கை என் பேச்சை மீற மாட்டாள் என்று கண் மூடித்தனமாக இருக்காமல் அவளுக்கு மாப்பிள்ளை பார்த்து பேசுவதற்குமுன் அவளிடம் தனியாக பேசி அவள் மனதில் உள்ளதை அறிந்து அதன் பின் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்திருக்கணும். திடீர்னு அவளிடம் கலந்து பேசாமல் நானே ஏற்பாடு செய்யப் போய்தான் அந்த மாப்பிள்ளை இவளை நோட்டம் பார்த்து என்னிடம் சொல்லி அதன் பின் எனக்கு தெரியவந்து. நிச்சயம் பேசிய வீட்டாருக்கு பதில் சொல்லி அவமானப்படும் படி ஆகிவிட்டது. எப்படியோ! காதலித்து ஏமாறாமல் அவள் மேல் உண்மையான அன்புள்ளவனை காதலித்திருகிறாளே. எப்படியோ! என் தங்கை நல்லா இருந்தா போதும் என்று நினைத்துக்கொண்டான்.

ஆதித்தின் வீட்டு வாசலில் கார் நின்றதும் காரை விட்டு இறங்கிய அனைவரையும் வேகமாக வந்து ஆதித் வரவேற்றான். வாங்க வாங்க நானே ஏர்போர்ட் வந்து உங்களை கூப்பிட வருவதாகத்தான் இருந்தது கடைசி நேரத்தில் என் கிளையண்டை பார்க்கவேண்டிய அவசர வேலை வந்துவிட்டது. அப்பா உங்களுக்கு அடுத்த ப்ளைட்டில் வந்துடுவார் என்றவன் வேலம்மாளிடம் எல்லோரையும் வீட்டின் பின்புறம் அமைந்திருந்த கெஸ்ட் ஹவுஸிற்கு கூப்பிட்டுக்கொண்டு போகச்சொன்னான்.

பின் ஆதித் அவர்களிடம் , எல்லோரும் பிரெஸ் ஆகிவிட்டு வாங்க சாப்பிடலாம் என்றான். இரவு மணி11:45 ஆகியிருந்தது அவன் அவ்வாறு கூறியதும் இது என்ன...! மாப்பிள்ளை பையன் எல்லோரையும் பிரிசு ஆகிட்டு வந்து சாப்பிட சொல்றாரே. ஒருவேளை கல்யாணத்துக்கு பரிசு வாங்கிட்டு வந்திருக்கச் சொல்கிராரோ! என்ற யோசயானாள், எனவே இல்லை தம்பி.... பரிசெல்லாம் வாங்க நேரம் இல்லை. ஆனா அவளுக்கு சேர்த்துவச்ச நகை நட்டெல்லாம் சீரா கொடுக்க கொண்டுவந்திருக்கிறோம். சபையில் தாம்பாளத்தில் வச்சு கொடுத்துடுறோம் இப்போ சாப்பிடமுடியாது காலையில் எப்போ கல்யாணம் எங்க வச்சுனு சொன்னீங்கன்னா.... புறப்பட தோதா இருக்கும் என்றார் ராசாத்தி .

ராட்சாத்தி திடீர் என்று சீர் பரிசு நகை நட்டு என்று பேசவும் இப்போ நான் இவன்கட்ட எப்போ சீர் கேட்டேன் என்று எண்ணியபடி நீங்க அழகியை எனக்கு கல்யாணம் செய்து கொடுப்பதே பெரிய சீர்தான் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறியவன், காலையில் 9:30 முகூர்த்தம் சிவன் கோவிலில் வைத்து, நாம இங்கிருந்து ஒரு எட்டுமணிக்கு கிளம்பி போனா சரியாக இருக்கும் என்றவன் வேலம்மாள் இவங்க சாப்பாட்டு வேண்டாம் என்றதால் குடிக்க என்னவேண்டும் என்று கேட்டு செய்து கொடுங்க என்று கூறியவன், உங்களுக்கு எது வேண்டுமென்றாலும் இவங்ககிட்ட கேளுங்க நான் போய் அழகியை ஹாஸ்பிடலில் இருந்து கூப்பிட்டுக்கொண்டு வருகிறேன் என்று பொதுவாக சொன்னான்

அப்பொழுது குமரேசன் இப்போ உங்க அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டான் அவன் அவ்வாறு கேட்டதும் ம்..இப்போ கொஞ்சம் பெட்டர் ஆக இருக்காங்க. நாளைக்கு கல்யாணத்துக்கு அவங்களால மண்டபத்துக்கு வரமுடியாதுன்னு நினைகிறேன். கல்யாணம் முடிந்ததும் நேரா ஹாஸ்பிடல் போய் அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கணும் என்று கூறினான் பின் நான் இப்போ போய் அழகிய கூப்பிடுகொண்டு வருகிறேன் என்று கூறி வெளியேறிவிட்டான்.

அவன் சென்றதும் வேலம்மாள் வாங்க என்று பொதுவாக கூறியவள், அவர்களின் லக்கேஜை அங்கிருந்த மற்ற வேலைகார்களை தூக்கிவரச்சொல்லி அந்த வீட்டின் பின்னால் உள்ள கெஸ்ட் ஹவுஸ்க்கு கூடிக்கொண்டு போய் தங்க வைத்தார்.

அப்பொழுது வாணி வீட்டின் செழுமையும் ஆதித்தின் உருவத்தையும் அவனின் செல்வந்த நிலையும் புரிந்துகொண்டவள் ஓடிவந்தவளுக்கு இவ்வளவு பெரியவீடில் வாழ்வா என்று நினைத்துக்கொண்டாள்.

ஹாஸ்பிட்டலில் டுயூட்டிகு இருந்த இரவு மருத்துவரை நேரில் சென்று பார்த்த ஆதித், நாளை நடக்கவிருக்கும் கல்யாணத்திற்கு ஜானகியை கூப்பிட்டுப்போக முடியுமா? அவர்களின் உடல் அதை தங்குமா? என்று ஆலோசனை அழகுநிலாவையும் கூட வைத்துக்கொண்டு கேட்டான்.

அவர் முடியாது ஆதித்! அவங்க எங்க கண்காணிப்பில் இருந்துகொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்பொழுது பேசுவதை வைத்து நலமாகிவிட்டது என்று நீங்கள் நினைப்பது தவறு என்று கூறிவிட்டார்.

எனவே ஆதித் ஓகே டாக்டர் நாங்க கல்யாணம் முடிந்ததும் அம்மாவிடம் இங்கு வந்து ஆசிர்வாதம் வாங்கிகொல்கிறோம் என்று கூறியவன் அழகுநிலாவை தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச்செல்ல முயன்றான்.

அப்பொழுது அழகி கூறினாள், வீட்டு ஆட்கள் யாரும் அத்தையின் அருகில் இல்லாமல் எப்படி போவது ? என்று கேட்டாள்.

அவளின் வீட்டு ஆட்கள் வந்திருக்கும் இந்த நிலையிலும் அவர்களை சந்திக்க வேகம் காட்டாமல் தன அம்மாவை பற்றி அவள் அக்கறை கொள்வதைக் கண்ட ஆதித் அவளை சொந்தத்துடன் பார்த்தான் பின் கூறினான் இன்னும் ஒருமணிநேரத்தில் அப்பாவும், உடன் முருகன் மாமாவும் வந்துவிடுவார்கள் அதுவரை எதுவும் அவசரதேவை என்றால் அதை கவனிக்க ஆட்களை நியமித்துவிட்டேன். நீ வா..., நிறைய வேலை இருக்கு. மேலும் இது இரவானதால் அம்மா தூங்கத்தனே செய்வார்கள் என்று கூறியபடி அவளை கூட்டிக்கொண்டு காரில் ஏறினான் ஆதித்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.