(Reading time: 14 - 28 minutes)

“மேடம் சுடிதாராவது செலெக்ட் பண்ண தெரியுமா இல்ல நானே??”,என அவள் காதருகில் கேட்க முகம் சிவந்தவளாய் அவளே வேண்டியதை எடுத்துக் கொண்டாள்..

தனக்கும் சட்டைகள் எடுப்பதற்காய் அந்த தளத்திற்குச் செல்லும் போதே சின்னதாய் அவளிடம் விளையாட தோன்ற தனக்கு பொருந்தாத சட்டைகளாய் எடுத்து தனியே வைத்துக் கொண்டிருந்தான்..ஒன்றும் கூறாமல் அவளும் அமைதியாகவே இருக்க கண்டும் காணதவனாய் தன் வேலையை பார்த்தான்..

ஒரு கட்டத்தில் தன் மௌனத்தை கலைத்தவள்,வந்து..என ஆரம்பிக்க காது கேக்காதவனாய் அவள்புறம் திரும்பாமல் நின்றான்..

மற்றவர்கள் தன்னை பார்ப்பதை உணர்ந்தவள் சற்று குரல் உயர்த்தி செல்வா..என்றழைக்க,

உதட்டோர சிரிப்பை மறைத்து ,”என்ன நிரு??”

“இல்ல வந்து..தப்பா எடுத்துக்காதீங்க இதெல்லாம் உங்க கலருக்கு சூட் ஆகாதோநு தோணுது”, என மெதுவாய் கூற,

அப்பாவியாய் அதைப் பார்த்தவன் ,”அப்படியா சொல்ற??ம்ம் சரிநீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணேன்..”

அவனுக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொடுக்க தனக்காக மெனக்கெடுபவளை தனக்குள் பதித்து கொண்டான்..அனைத்தையும் பில் போட்டு வெளியே வந்தவன் ,

”பரவால்லையே புடவை செலெக்ட் பண்ண தெரிலனு சொல்லிட்டு எனக்கு ஷர்ட் இவ்ளோ நல்லா சூஸ் பண்ணிருக்க..”

“இல்ல நா புடவை அவ்வளவா யூஸ் பண்ணிணது இல்ல..அம்மாவும் பட்டுபுடவையெல்லாம் வாங்கினதில்ல..சோ அதுபத்தி தெரியாது பட் அப்பாக்கு எப்பவுமே நா தான் ஷர்ட் வாங்குவேன் அதான்..”

ஓ..ஓ.கே என தன் பைக் நோக்கி செல்லும் போதே அவர்களுக்கு எதிர்புறம் நான்கைந்து ஆண்கள் அவர்களை கமெண்ட் அடித்தவாறு வர தமிழின் கை அதுவாய் நிர்பயாவின் தோள்பற்றி தன்புறம் சேர்த்தவாறு நடக்க பார்வை மட்டும் அவர்களை எச்சரிப்பதாய் இருக்க அத்தோடு வாயை மூடிக் கொண்டு உள்ளே சென்றுவிட்டனர்…

அனைத்தையும் கவனித்தவளுக்கோ மனதளவில் பெரும் நிம்மதியாய் இருந்தது..அத்தனை குழப்பங்களையும் தாண்டி என்னவன் எனக்காக எதையும் செய்பவன் இவனுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என மனதினுள் உறுதி கொண்டாள்..

பைக்கில் அமர்ந்தவள் இத்தனை மாதங்களில் முதன்முறையாய் அவன் தோள்பற்றி அமர சைட் மிரர் வழியே அவளை அவன் பார்க்க சட்டென தலையை முன்னே தள்ளிக் கொண்டாள்..அவளின் முதல் ஸ்பரிசம் ஏனோ அவனுக்கு கிளர்ச்சியை தராமல் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளித்தது..

அடுத்தது நகை கடைக்குச் சென்று தேவையானதை வாங்கசொல்ல எவ்வளவு கூறியும் சின்னதாய்  ஒரு ஆரமும் கைக்கு நான்கு வளையல்களையும் தவிர்த்து ஒன்றும் வேண்டாமென கூறிவிட்டாள்..அடுத்து இருவருக்குமாய் மோதிரங்கள் எடுத்து முடித்து வெளியே வரும் போது மதிய உணவுக்கான நேரத்தை எட்டியிருக்க அருகிலிருந்த ஹோட்டலில் சாப்பாட்டை முடித்து வீட்டிற்குச் சென்றனர்..

அனைத்தையும் ஹால் சோபாவில் வைத்துவிட்டு அவன் சோர்வாய் அமர டேபிளில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்து கொடுத்தவள் அவனுக்கு எதிர் சோபாவில் அமர்ந்தாள்..

நீரை பருகி முடித்தவன் அவள் ஏதோ கூற தயங்குவதை கண்டு என்னவென கேட்க,

“இல்ல உங்களுக்காக ஒண்ணு எடுத்துட்டு வந்தேன்..அத தரலாமானு தெரில..அதான்..”

“ என்ன அது??”

மெதுவாய் தன் ஹேண்ட் பேக்கிலிருந்து அதை வெளியிலெடுத்து காட்டினாள்.

“செயினா??இது எப்போ வாங்கின அதுவும் எனக்காக??”, என அவள் விழி நுழைந்து கேட்டான்.

“இல்ல இது என் டேடியோட ஃபேபரட் செயின்..அவருக்காக நானே வாங்கிக் கொடுத்தது..இனி இது என்கிட்ட இருக்குறத விட உங்ககிட்ட..”,எனும்போதே அவனை பார்க்க அவன் பார்வையில் வார்த்தையெழாமல் தலைகுனிந்து கொள்ள,மெதுவாய் அவள் காதோர முடிக்கற்றையை ஒதுக்கியவன் கன்னத்தை மிருதுவாய் அழுத்தி கட்டை விரலால் வருட கையில் தலைசாய்த்து கண்மூடினாள்..அவன் கையின் வெப்பம் கூட சட்டென பதறியவள் எழுந்து சென்று சுவரோரமாய் நின்று கொண்டாள்..

கனவிலிருந்து விழித்தவனாய் தன் தப்பை உணர்ந்தவன் எழுந்து அவளருகில் சென்று அவளை தன்புறம் திருப்பி,சாரி நிரு..என்னையறியாம எனும்போதே தன் விரலால் அவன் வாயை மூடினாள்..

“நீங்க ஏன் சாரி சொல்றீங்க..நா இதுக்காக தான் கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன்..”

“நிரு..நாதான் சொல்லிட்டேன்ல என்னை அறியாம நடந்துருச்சுநு இனி இப்படி நடக்காம பாத்துக்குறேன்..நீ எனக்காக அதை கொண்டு வந்தேன்னு சொன்னவுடனே ஐ வாஸ் ஹேப்பி..வேற ஒண்ணுமில்ல நீ எதையும் போட்டு குழப்பிக்காத ம்ம்..”, என அவள் உச்சந்தலையில் இதழ்பதித்து விடுவித்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.