(Reading time: 14 - 28 minutes)

“திஸ் இஸ் வாட் ஐ நீட்..பீ வித் மீ ஆல்வேஸ் அதுபோதும்..சரி செயினை போடுறியா இல்ல அப்படியே எடுத்துட்டு போலாம்நு பாக்குறியா “,என அவளுக்கு எட்டுமளவு குனிந்து நின்று அவளை பார்க்க புன்னகையோடு சிவந்த முகத்தை மறைத்தவாறு அவனுக்கு அணிவித்தாள்..

“தேங்க் யூ சோ மச் டியர்”, என கண்சிமிட்டி அவன் நகர எத்தனிக்க”,உங்ககிட்ட ஒண்ணு சொல்லவா??”

“ஹே நா என்னவோ ஸ்கூல் டீச்சர் மாதிரியும் நீ ஸ்டுடண்ட் மாதிரியும் குடுக்கவா சொல்லவானு பெர்மிஷன் கேட்டுட்டே இருக்க எதுவாயிருந்தாலும் சொல்லு..”

“கல்யாணத்துக்கு அப்பறம் நா வேலையை விட்டுரவா??கொஞ்ச நாளுக்கப்பறம் வேணா திரும்ப போறேன்..”

“ஏன் என்னாச்சு??”

“இல்ல சும்மா தான்..வீட்டை கவனிச்சுகிட்டு இங்கேயே இருந்துரேனே..”

மீண்டுமாய் அவளை நெருங்கியவன் ,”அப்போ நானும் அடிக்கடி லீவ் போடுவேன் பரவால்லையா”, என குறும்பாய் கேட்க சிரித்து விட்டிருந்தாள்..

“உனக்கு எது இஷ்டமோ செய்..எனக்கு ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல..சரி அப்போ இந்த வீக்லயே ரிசிக்நேஷன் குடுத்துரு..ப்ராஸஸ்லா முடிஞ்சு செட்ல் பண்றதுக்கு சரியா இருக்கும்…ஆல்ரெடி லேட் ஆச்சு வா போலாம் “,என்றவாறு முன்னே சென்றான்..

அடுத்து வந்த பத்து நாட்களில் பத்திரிக்கை மண்டபம் சாப்பாடு என அனைத்து வேலைகளையும் பெரியவர்கள் மின்னல் வேகத்தில் முடிக்க தமிழுக்கு அந்த வாரம் முழுவதுமே சற்று வேலைப்பழுவோடு சென்றது..

நிர்பயா வேலையை விட்டு விலகுவதாய் அலுவலகத்தில் அறிவிப்பு கொடுத்திருக்க அவளுக்கு ஒரளவு ஃப்ரீயாகவே இருந்தது..தமிழை தொந்தரவு பண்ண வேண்டாமென அன்றைய நாள் அவளே கிளம்பி ஹரிஷ் வீட்டிற்குச் சென்றாள்..

“வாங்க புதுப்பொண்ணு எப்படியிருக்கீங்க??”

“நல்லாயிருக்கேன் அக்கா..நீங்க எப்படியிருக்கீங்க??செக்கப் போனீங்களா??”

“ம்ம் போய்ட்டு வந்தோம்டா..பட் மாசம் ஆகுதுல ரொம்ப டயர்டா இருக்கு..ஆமா இன்னைக்கு உனக்கு ஆபீஸ் இல்லையா??”

“சீக்கிரம் கிளம்பிட்டேன்க்கா..நா வேலைய ரிசைன் பண்ணலாம்நு இருக்கேன்..”

“ஏன்டா என்ன உங்க அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரா??”

“ச்சச்ச அவரு ஒண்ணும் சொல்லல நாதான் விட்ரவாநு கேட்டேன் ஓ.கே சொல்லிட்டாரு..”

“இப்போவே சப்போர்ட்டா..ம்ம்..நடத்து நடத்து..அண்ணா எப்போயிருந்து லீவ் போட்றாரு??”

“ஒன் வீக் முன்னாடியிருந்து தான்..நீங்களும் அண்ணாவும் கண்டிப்பா வரீங்க தான??”

“இல்லடா..பாப்பாவோட பக்கத்து ரூம்க்கு போறதுக்குள்ளேயே ஒரு வழி ஆய்ட்றேன் இதுல ட்ரெயின்ல 14 அவர்ஸ் ட்ரவலா நோ வே..உங்க அண்ணா கண்டிப்பா வருவாரு..சரியா??இங்க ரிசெப்ஷன் வைக்குறீங்கலா இல்லையா??”

“இல்லக்கா வீட்லயே அவர் ப்ரெண்ட்ஸ்காக சின்னதா கெட் டூ கெதர் அரேண்ஞ்ச் பண்ண போறேன்னு சொன்னாரு..”

“அதுவும் கரெக்ட் தான் அப்போ நா முதல் ஆளா அங்க வந்துட்றேன்..”

“சரிக்கா நா கிளம்பறேன்..உங்கள இன்வைட் பண்ணிட்டு போலாம்நு தான் வந்தேன்..நா ஊருக்கு கிளம்பறதுக்கு முன்னாடி கால் பண்றேன்..”

“ஓ.கேடா பாத்துப் போ..பை..”

அன்றிரவு தமிழிடம் அனைத்தையும் கூற,”பார்ரா போலீஸ்காரன் பொண்டாட்டிக்கு தைரியம் வந்துருச்சு போல தனியாவே போய்ட்டு வந்தது மட்டுமில்லாம அதிசயமா இவ்ளோ பேசிருக்காங்க..”,என்றான் அவன்..

“ஆபீஸ்ல ரிசெக்னேஷனுக்கு ஒண்ணும் சொல்லல??”

“இல்லங்க..பர்ஸ்ட் யோசிச்சாரு அப்பறம் காரணத்தை சொன்னவுடனேஅக்செப்ட் பண்ணிட்டாங்க..”

“ம்ம் ஆங்ங் சொல்ல மறந்துட்டேனே ட்ரெயின் டிக்கெட் புக் பண்ணியாச்சு..வரும்போது ஊர்ல இருந்து காரை எடுத்துட்டு வந்துரலாம்நு இருக்கேன்..”

“அங்க அப்பாக்கு அண்ணாக்கு தேவைபடுமே??”

“அது ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல சின்ன காரை நாம எடுத்துக்கலாம் இன்னொன்னு அங்க தான் இருக்கும்…”

“ஓ..சரிங்க டக்குநு தோணிச்சுஅதான் கேட்டேன்..”

“நோ ப்ராப்ளம்..எப்போதான் நீ பார்மலா பேசுறத விடுவியோ தெரில..ஊருக்குபோறதுகுள்ள மாத்திக்கோ ஊர்காரங்க கண்ல எண்ணெய் விட்டுபாத்துட்டு இருப்பாங்க அப்பறம் நா ஏதோ உன்னை கட்டாய கல்யாணம் பண்றேன்னு நினைச்சு உள்ளே தூக்கி வச்சுறப் போறாங்க..”

“அய்யோ ஏன் அப்படி சொல்றீங்க??நிறைய பேர் இருப்பாங்களா??எனக்கு பயமா இருக்கு??”

“அப்படிலா இல்ல ரொம்ப க்ளோஸ் சொந்தகாரங்க தான் வீட்ல இருப்பாங்க..மத்தவங்க கல்யாணத்தன்னைக்கு வந்துட்டு கிளம்பிடுவாங்க டோன்ட் வொரி..”

“ம்ம் நீங்க என் கூடவே இருப்பீங்கல??”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.