(Reading time: 28 - 55 minutes)

சரியாக அரை மணி நேரத்திலேயே அழகுநிலாவின் வீட்டு வாசலில் வரிசை கட்டிக்கொண்டு ஐந்து கார்கள் வந்து நின்றன

முதலில் வந்து நின்ற வெள்ளை பி எம் டபிள்யூ காரில் இருந்து வேலாயுதமும், எம் எல் ஏ தவசியும் இறங்கினர். அடுத்த காரில் எம் எல் ஏ வின் மனைவி மற்றும் மகன் மருமகன் எல்லோரும் குடும்பமாக இறங்கினர். அடுத்த காரில் வேலையாட்களும் சில எம் எல் ஏ தொண்டர்களும் இரங்கி தாம்பாலங்களை எடுத்துகொண்டு வந்தனர்

ஊரே வந்திருந்த கார்களையும் ஆட்களையும் வேடிக்கைப் பார்த்தார்கள். கார் வந்த சத்தத்திலேயே வெளியில் வந்து அவர்களை வாங்க என்று ராசாத்தியும், குமரேசனும், வாணியும் அழைக்க சண்முகம் அங்கிருந்த ஊர் பெரியோர்களை முறை சொல்லி அழைத்து சபையில் பேசுவதற்காக உள்ளே கூப்பிட்டுக்கொண்டு வந்தார். .

குமரேசனுக்கு வேலாயுதத்தை பார்த்தவுடனே யார் என்று தெரிந்துவிட்டது. இவரின் மகனுக்கா நம் வீட்டில் சம்பந்தம் பேச வந்திருகிறார்கள்! என்று நினைத்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேலும் இருவருக்குள்ளும் இருந்த பணம் ஜாதி மற்றும் பழக்கவழக்கங்களின் ஏற்றத்தாழ்வு அவனை மிரட்டியது. மேலும் தாங்கள் இருப்பதோ கிராமம் எனவே ஊர் பெரியவர்களை வைத்து பேசும் போது சாதி வேறுபாடு பிரச்சனையாகும். தன அம்மாவாலையே அதை ஏற்றுக்கொள்ள முடியுமோ? என்னவோ.... என்று கவலையும் பிரச்சனை ஆகாமல் பேச்சுவார்த்தை முடிக்கவேண்டும் என் முடிவெடுத்தான்

ஆனால் ராசாத்தியோ எதுவோ தீர்மானம் எடுத்துவிட்ட தொனியில் இருந்தாள்.

முதலில் எம் எல் ஏ தவசிதான் ராசாத்தியிடம் அம்மா இவர் தான் மாப்பிள்ளையோட அப்பா வேலாயுதம் இவருடைய மகன் ஆதித்தராஜ் சென்னையில கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி வைத்து நடத்திட்டு இருக்காரு மாப்பிள்ளை பையனோட அம்மாவுக்கு உடலுக்கு முடியாம ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள் அவங்க தனது மகனை கல்யாணக்கோலத்தில் பார்க்கணும் என்று ஆசைபடுகிறார்கள். அதனால உங்க பொண்ணுகூட உங்க சம்மத்தத்தோட நாளைக்கு கல்யாணம் சென்னையில் சிம்பிளா செய்ய நினைக்றோம் நீங்க சம்மதிச்சா சந்தோசப்படுவோம் என்றார்.

அவர் கூறியதும் ராசாத்தி பதில் கூறுவதற்குள் அந்த ஊரின் பெரியவர் இவரு வேலாயுதம் தானே கோயம்புத்தூரில் பெரிய ஆளுன்னு கேள்விபட்டிருக்கிறோம். ஆனா அவங்க வேறு இனம். நாம வேறு இனம் எப்படிங்க கல்யாணத்துக்கு இங்க பேசவந்தீங்க என்று அவர் கூறிய மறுநிமிடம்,

ராசாத்தி, சித்தப்பு இதுல அவுக தப்பு மட்டும் இல்லை. நான் பெத்த மவள் மேலயும் தப்பு இருக்கு. அதனால அவுகள கோவிச்சு அர்த்தமில்லை என் புருஷன் கடைசி நிமிசத்துல என் கிட்ட சொன்னது, நான் இல்லாட்டியும் புள்ளைகளை நல்லபடி வளர்த்து நீ தைரியமா நின்னு கரைஏத்திரனும். மூலையில் உட்கார்ந்து புள்ளைகளை தவிக்கவிட்டுவிட கூடாதுனு கேட்டுகிட்டாரு.

இத்தனை நாள் என் புள்ளக இரண்டுபேரையும் நான் நல்லபடி வளர்த்திருகேன்னு நினைத்தேன். ஆனா என் மவள் இப்படி செய்யுவானு நன் நினைத்துப்பார்க்கவில்லை. அவ அப்படி செஞ்சுட்டா என்பதுக்காக என் புருசனுக்கு நான் செஞ்சுகொடுத்த வாக்குறுதியை மறந்து என்னை மீறி போனவ எப்படியும் போகட்டுமென்று விட முடியாது .

முன்னால என் மவளுக்கு ஆசையா பார்த்து பார்த்து கல்யாணம் செய்யனும்னு நெனச்சேன் நான். இப்போ அவ செஞ்ச காரியத்தினால கடமைக்காக அவளை தாரைவாத்துக்கொடுத்துட்டு வந்துடுறேன். அத்தோட அவ பிரச்சனையை முடிச்சுக்கலாம் மேற்கொண்டு நடக்கவேண்டியதை பாப்போம் என்ற ராசாத்தி,

வேலாயுதத்தை பார்த்து ராசாத்தி நீங்க எப்போ எங்க கல்யாணம் என்று சொல்லுங்க நான் வந்து செய்கிற முறை செய்துட்டு வந்துடுறேன் என்றார்.

அவர் அவ்வாறு கூறியதும் வேலாயுதமும் அவரிடம் நீங்க இந்த அளவு சம்மதிச்சதே எனக்கு சந்தோசம். ஒன்றை மட்டும் நான் சொல்லிக்கொல்கிறேன், உங்க பொண்ணு உங்களை மீறி என் பையன்மேல் விருப்பப்பட்டாள் என்று நீங்க கோபமாக இருப்பது எனக்குத் புரியுது, ஆனா ஒன்றை நீங்க புரிஞ்சுக்கிடனும் சம்மந்தியம்மா உங்க பொண்ணு அழகுநிலா உங்களை மீறி இந்த கல்யாணத்திற்கு சரி சொல்லும் சூழ்நிலை காலத்தின் கட்டாயத்தில் அவளுக்கு ஏற்பட்டது. இதில் அவளின் மேல் நீங்க கோபம் கொள்ளவேண்டாம் என்றவர் கண் அசைவில் தாம்பாலத்தட்டை கொண்டுவரரச் செய்தவர் அப்போ கல்யாணத்திற்கு சபையின் முன்னால் சம்மதம் கொடுப்பதற்காக இந்த தாம்பலத்தை வாங்கிக்கோங்க என்றார்.

உடனே ராசாத்தி, குமரேசா உன் பொண்ணாட்டி கூட சேர்ந்து தட்டை வாங்கிக்கோ என்றார்

அத்தாம்பாலத்தில் அன்று இரவு மதுரையில் இருந்து சென்னை செல்வதற்கான மூன்று ஏர் டிக்கட் இருந்த கவர் இருந்தது அதை குமரேசன் வாணியுடன் வாங்கியதும் அதன் ,மேல் இருந்த கவரை யோசனையுடன் பார்த்த குமரேசனிடம் தம்பி அதில் மூன்று பிளைட் டிக்கட் இருக்கு உடனே கல்யாணம் முடிக்கவேண்டியிருப்பதால வரும்போது உங்க வீட்டில் உள்ள மூன்று பேருக்கும் டிக்கட் எடுத்து வந்துட்டேன். என் ஜானகி மகனை கல்யாணக் கோலத்தில் பார்த்த சந்தோசத்தில் நல்லபடி எழுந்து வந்தால் இந்த மாதத்தின் கடைசியில் ஊர் அடைக்க எல்லோரையும் கூபிட்டு ரிசப்சன் வச்சுடலாம். இப்போ மறுக்கம டிக்கட்டை வாங்கிகொண்டு நைட் சென்னைக்கு வந்துருங்க என்று கோரிக்கை வைத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.