Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகா

Aathibanin kaadhali

ந்த 5 மாமன்களும் தங்கள் வண்டிகளில் வந்து இறங்கி வீராவேசமாக வருவதை பார்த்தால் எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்தி விட்டுதான் செல்வதாக இருந்தது கல்யாணத்திற்கு வந்தவர்களுக்கு.

கல்யாண மண்டப வாசலில் நின்றிருந்த திலீபன் தன் மாமன்கள் கோபாவேசமாக வருவதை பார்த்தவுடன் தன் தந்தையிடமும் தாயிடமும் கூற உள்புறமாக ஓடினான்.

பரதனோ மண்படத்திற்குள் நுழைய வந்தவர்களை தடுப்பதற்காக அவர்கள் எதிரில் சென்றான்.

”அன்பு மாமா நில்லுங்க மாமா“ என தடுக்கவும் பெரிய மாமனான அன்பரசுவிடம் கன்னத்தில் ஒரு அறை வாங்கினான் பரதன்

”டேய் என்னடா நில்லுங்கன்னு நிக்க முடியாதுடா வழியை விடு”

”நம்பி மாமா நீங்களாவது சொல்லுங்க இப்பதான் என் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கப்போகுது இப்ப போய் இப்படி தடுக்க வந்தா எப்படி”

உடனே செந்தமிழ் நம்பியும் பதிலுக்கு

”டேய் பரதா உங்கண்ணனுக்கு என்னிக்குமே கல்யாணம் ஆகக்கூடாதுடா எங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டு அவன் எப்படி கல்யாணம் செஞ்சிக்கலாம் இன்னிக்கு இந்த கல்யாணம் நடக்காதுடா” என கூச்சலிட்டார்.

”ஆளவந்தான் மாமா நீங்களாவது சொல்லுங்க போதும் எத்தனை வருஷம்தான் இப்படி அண்ணன் கல்யாணத்தை நிறுத்துவீங்க” அதற்கு ஆளவந்தான் கோபமாக

”டேய் பரதா அன்னிக்கு உன் அண்ணன் என் பொண்ணை கல்யாணம் கட்டிக்க முடியாதுன்னு சொன்னான்ல அப்ப இருந்திருக்கனும் இந்த பயம் இப்பப்போய் என்னை தடுத்தா முடியுமா எலே வக்கீலு வாலே என்ன பார்த்திட்டு நிக்கற”

பரதன் உடனே புகழேந்தியிடம் சென்று முறையிட்டான்.

”வக்கீல் மாமா நீங்களாவது கொஞ்சம் புரிஞ்சிக்குங்க நீங்க வக்கீலுக்கு படிச்சிருக்கீங்க சட்டமெல்லாம் உங்களுக்கு நல்லாவே தெரியும்

நீங்களும் இவங்களோட சேர்ந்து கல்யாணத்தை நிறுத்தினா ஊர்க்காரங்க என்ன நினைப்பாங்க” என்ற பரதனை பார்த்தவர்

”ஏண்டா டேய் இதே ஊர்க்காரங்க முன்னாடிதானே அன்னிக்கு என் பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு உன் அண்ணன் சொன்னான்.

அப்ப எனக்கு எப்படி இருந்திருக்கும் அப்ப என்ன பண்ணிச்சி இந்த ஊரு வழியை விடுடா” என பதிலளித்தார் புகழேந்தி.

அடுத்த மாமனான செந்தில்வேலனிடம் ஓடிச்சென்று அவரை தடுத்து நிறுத்தி

”செந்தில் மாமா நீங்களாவது இவங்களை தடுத்து நிறுத்துங்க என்னதான் இருந்தாலும் அண்ணனும் நீங்களும் ஒண்ணுமண்ணா பழகினீங்க அப்படியிருக்கும் போது நீங்களும் இப்படி செய்றது நல்லாயில்லை மாமா”

”டேய் பரதா என்னடா உளர்ற நாங்க அப்படிதான் பழகினோம் ஆனா உன் அண்ணன் என் பொண்ணை கல்யாணம் செஞ்சிக்க மாட்டேன்னு முதுகுல குத்திப்புட்டானே இதான் உறவாடா இன்னிக்கு உங்கண்ணன் கல்யாணம் நடக்காதுடா போடா அந்தப்பக்கம்”

அவ்வளவு தான் பரதனால் தடுக்க முடிந்தது. எவ்வளவு தூரம் சொல்லியும் அவர்கள் கேட்காமல் மண்டபத்திற்குள் நுழைந்து கல்யாண மேடையருகே வந்து நின்றனர்.

மண்டபத்திலிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

சிலர் தங்களுக்குள் என்னாகப் போகுதோ என பேசிக்கொண்டனர்.

ஐயரும் மந்திரங்கள் சொல்வதை நிறுத்திவிட்டு அமைதியானார்.

ஆதிபனும் ஆதிராவும் அவர்களை பார்த்தனர். அவர்கள் இருவரின் கண்களிலும் கவலையில்லை

அதை கவனித்துக்கொண்டே அந்த 5 மாமன்களும் நேராக மணமேடைக்கு அருகில் அமர்ந்திருந்த பூபதி பாண்டியனிடமும் மீனாட்சியிடமும்

”என்ன மாமா அத்த உங்க பேரனுக்கு எங்களுக்கு தெரியாம ரகசியமா கல்யாணத்தை செய்றீங்களோ நான் ஆளவந்தான் அத்த இந்த ஊரை மட்டுமில்ல பக்கத்தில இருக்குற ஊர்களையும் ஆளறவன் எனக்கு தெரியாம எதுவும் நடக்காது என் கண்ணல மண்ணை தூவ பார்த்தீங்களா முடியாது” என ஆளவந்தான் பேச அதற்கு பாட்டி அவரிடம்

”மாப்பிள்ளை என்ன இது இப்ப போய் அதான் இத்தனை வருஷமும் நீங்க 5 பேரும் நினைச்சபடி என் பேரன் கல்யாணத்தை ஒவ்வொரு முறை நிறுத்திக்கிட்டே இருந்தீங்க இப்பதான் இந்த பொண்ணால திரும்பவும் அவனுக்கு கல்யாணம் நடக்கப்போகுது இப்பவும் நீங்க இப்படி பண்றது நல்லாயில்ல மாப்பிள்ளை”

”எதை அத்த நல்லாயில்லன்னு சொல்றீங்க அன்னிக்கு நான் உங்ககிட்ட கேட்டேனே என் பொண்ணை உங்க பேரனுக்கு கல்யாணம் செஞ்சி வைங்கன்னு நான் சொன்னதை நீங்க கேட்க அவனும் முடியாதுன்னு சொல்லிட்டான். அப்ப எங்கப்போச்சி இந்த மாப்பிள்ளை உறவு இப்பதான் உங்க கண்ணுக்கு தெரியுதோ”

என அன்பரசு கோபமாக கேட்க அதற்கு பூபதி பாண்டியனே பதிலளித்தார்.

”அன்பரசு நிறுத்துப்பா இது என்ன பேச்சு 15 வருஷம் முன்னாடி நடந்த கதையை இப்ப கொண்டாந்து சேர்க்காதப்பா இப்ப என் பேரனுக்கு கல்யாணம் அமைதியா இரு இல்லாட்டி வெளியே போ”

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகாSaaru 2018-02-19 11:48
Nice ud
Reply | Reply with quote | Quote
# saarusasi 2018-03-02 11:21
நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகாAdharvJo 2018-02-15 22:03
Ada pavingala 38 varsham :eek: ana piragu kuda uncle-k kalyanam pana vidam ippadi panurangala indha mama engira thathas facepalm Anyway finally he got married :dance: :dance: Adhira-k indha punishment konjam kashtam ana onu thaan ninaikiren facepalm what a pity.. Ooru rendu patta kuthadiki sandhosham adhu mathiri irundhadhu ma'am indha fight and argument sema sema :hatsoff: oru lively feel and ivanga dialogues mattum sema hilarious and thatha kodutha answer besh besh pramadham appadi podunga :clap: Life partners-a ippadi adimaigala treat pana two tracks can never meet a point it was good lesson indha 5 thathas-k.. Adhira and Adhiban oda runway eppadi irukka pogudhun therindhu kola waiting... Thanks for this fun filled & interesting update ma'am :clap: Keep rocking.
Reply | Reply with quote | Quote
# aadhravjosasi 2018-03-02 11:23
நன்றி
சில வாரங்களாக வயது பற்றி கேட்டுக்கொண்டு இருந்தீர்கள். இப்போது நீங்கள் அறிந்துக்கொண்டீர்கள். தங்கள் சந்தேகம் தீர்ந்துவிட்டது. இனிமேல் தான் கதையே சூடுபிடிக்கும். படித்து பார்த்து கமெண்ட் தாருங்கள்
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகாSAJU 2018-02-15 20:20
WOWWWWWWW SUPERRRRRRRR UD SIS
Reply | Reply with quote | Quote
# sajusasi 2018-03-02 11:21
நன்றி
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 15 - சசிரேகாmadhumathi9 2018-02-15 19:49
facepalm vilaiyaattu vinai aagum enbathu idhu thank. Aanaal intha vinai nanmaiyai thank kodukkum endru thonuthu. Super epi :clap: (y) :thnkx: 4 this epi.
Reply | Reply with quote | Quote
# மதுமதிsasi 2018-03-02 11:21
நன்றி தொடர்ந்து படியுங்கள்
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top