(Reading time: 14 - 27 minutes)

தொடர்கதை - விழிகளிலே காதல் விழா - 40 - தேவி

vizhikalile kadhal vizha

சிவராத்திரி அன்று கோவிலில் இருந்து வீட்டிற்கு கூட்டி வந்த செழியன் மீதும், அவன் அம்மா மீதும் மதிப்பு ஏற்பட்டு இருந்தது வடிவு ஆச்சிக்கு.

கோவிலுக்கு அழைத்து சென்ற மலரின் அப்பாவிற்கு அன்று மதியம் வரை வேலை இருந்ததால், மாலையில் தான் வீடு திரும்பினார்.

வந்தவுடன் சற்று நேரம் எல்லோரிடமும் பேசிக் கொண்டு இருந்தவர், பின்

“ஏம்மா மலர், காலையில் பஸ் சரியா கிடைச்சுதா? இன்னைக்கு கூட்டம் அதிகம்ன்னு பேசிக்கிட்டாங்களே ?” என்று வினவ,

மலர் பதில் சொல் முன்,

“நாங்க பஸ்ஸிலே எங்கலே வந்தோம்.. காரில் தானே வந்தோம்..” என்று வடிவு ஆச்சியே பதில் சொன்னார்.

யோசனையோடு “யார் கூட வந்தீங்கமா? நமக்கு தெரிஞ்சவங்க யாரும் கோவிலுக்கு வந்து இருந்தப்புலே பாக்கலியே நானு ?”

“நம்ம மலர் கூட வேலை செய்யுதே அந்த செழியன் தம்பி தான் எங்கள கூட்டிகிட்டி வந்தது.. “

இப்போது ஆச்சரியத்தோடு மலரை பார்த்த அவள் தந்தை வேலன்,

“ஒஹ் .. அப்படியா? ஆனா அந்த தம்பியும் ராத்திரி பூஜைக்கு வந்துதா என்ன?”

“இல்லேலெய்.. அவுக அம்மா கோவிலுக்கு வந்தாகளாம்.. தம்பி தான் துணைக்கு வந்துச்சு போலே “

“சரி.. நீங்க ஏன் அவுங்கள சிரமபடுத்தி காரில் வந்தீங்க.. உங்களுக்கு பஸ்ஸிலே வார சடைவா இருந்தா அங்கனேயே ஒரு கால் டாக்ஸி பிடிச்சு வந்துருக்கலாமே.. ஏம்மா மலர் உனக்குத்தான் விவரம் தெரியுமே.. ? பொறவு ஏன் அவுகள சங்கடபடுத்தி விட்டீங்க..?”

“எலேய்.. அங்கன அவுங்க நினைப்பு இருக்கிற மாதிரி இருந்தா வயசு புள்ளைய அவுக கூட கூட்டிகிட்டு வருவேனாலே.. ? அவுங்க ரொம்ப நல்ல மாதிரி.. அந்த தம்பி அம்மா பார்வதி வெள்ளந்தியான மனசு உள்ளவுக.. அவுங்க ரொம்ப கேட்டுகிடவும் தான் நாங்க வந்ததே.. “

“சரி. சரி. .விடுங்க.. அன்னைக்கு காலேஜ் விழாலே அவங்க வீட்டுக்காரர் பார்த்ததும் கொஞ்சம் கண்டிப்பானவர் மாதிரி தெரிஞ்சுது. அதான் நம்மாலே அவுகளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதேன்னு தோணிச்சு..”

“மனுஷ மனசு என்னிக்கும் ஒன்னு போலவா திரியும். ஒருநா கோபம் வந்தா மறுநா சமாதானம் ஆயிட்டு போகுது.. அந்த புள்ள பார்வதி பேசினத பார்த்தா அந்த மனுஷன் குடும்பத்து மேலே உசுரே வசிருப்பாராட்டம் இருக்கு.. கோபம் இருக்கிற இடத்துலேதான் குணமும் இருக்கும்.. அதானாலே பெருசா பிரச்சினை ஒன்னும் வராது..”

“சரி.. சரி.. வாங்க அடுத்த சோலிய பார்ப்போம்..” என்றபடி கிளம்பினார்.

இங்கு நடந்த மொத்த சம்பாஷனைகளையும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தாள் மலர். அவளின் பாட்டி மனதில் செழியனை மட்டுமல்லாமல் அவன் குடும்பத்தை பற்றியும் நல்ல எண்ணம் இருப்பது குறித்து அவளுக்கு மிகுந்த மகிழ்ச்சி.. கல்யாணம் பற்றிய பேச்சு எடுக்கும் போது இது எல்லாம் உதவும் என்பது அவளின் எண்ணமாக இருந்தது.

செழியன் தன் அம்மாவின் சம்மதம் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, மலரோ பாட்டிக்கு செழியன் குடும்பம் மீதுள்ள மதிப்பு குறித்த மகிழ்ச்சியில் இருக்க, இருவரும் அன்று இரவு போன் வரும் நேரத்தை ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

இரவு ஒரே நேரம் இருவரும் மாறி மாறி முயற்சி செய்ய, லைன் பிஸியாக இருந்தது.. ச்சே.. என்று சலித்தபடி ரெண்டு பேரும் முயற்சி செய்வதை விட, அப்போது போன் அமைதியாக இருப்பதை பார்த்து இருவருக்கும் எரிச்சல் வந்தது. இப்போது மீண்டும் முயற்சி செய்ய, இப்போதும் பிஸி என்றே வர, இருவருக்கும் அப்போதுதான் பல்பு எரிந்தது.

மலருக்கு செழியன் முயற்சி செய்கிறானோ என்றும், செழியனுக்கு மலர் முயற்சி செய்கிறாளோ என்றும் தோன்ற, இருவருமே தற்போது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பினார்கள்.

அதை படித்த மலர் தான் காத்திருப்பதாகவும், செழியனை போன் செய்யுமாறும் மெசேஜ் அனுப்பினாள்.

செழியன் கால் வரவும்,

“ஹாய் .. இளா” என,

“ஹாய் .. விழிடியர்..” என்று பேச ஆரம்பித்தார்கள்.

‘என்ன இன்னிக்கு ப்ரோபாசர் சார்.. குரல் துள்ளிக்கிட்டு இருக்கு ? “

“எல்லாம் நல்ல விஷயம் தான்.. “

“என்ன இளா..?”

“எங்க அம்மாக்கு நாம் ரெண்டுபேரும் நேசிக்கிறது தெரிஞ்சுபோச்சு “

“ஐயோ.. என்ன சொன்னாங்க..?”

“இதுக்கு ஏன் இவ்ளோ பெரிய ஷாக்.. ? என்னிக்கு இருந்தாலும் தெரிய போறது தானே..?”

“நாம சொன்னா வேற..? அவங்கள தெரிஞ்சிகிட்டா வருத்தபடுவாங்க தானே..?”

“அது சரிதான்.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு நானே சொல்லி இருப்பேன். அதுக்குள்ளே அவங்களே தெரிஞ்சிகிட்டாங்க.. என்ன செய்ய?”

“அவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது..?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.