(Reading time: 14 - 27 minutes)

“சரி.. இவ்வளவு நேரம் என் அப்பா, அம்மா பத்தி மட்டுமே பேசிகிட்டு இருந்தியே.. உன் சைடு பத்தி சொல்லவே இல்லியே?”

“என் சைடு அப்பா, அம்மா பிரச்சினை இல்லை. பாட்டி தான் வில்லங்கம்.. “

“ஒஹ் .. அப்போ அவங்கள கரெக்ட் பண்றதுக்கு எதாவது ஐடியா கொடேன்.’

“அந்த மாதிரி எல்லாம் ட்ரை பண்ணா, ப்யூட்டி கியுட்டா கண்டுபிடிச்சிடும். அதுகிட்டே ரொம்ப உஷாரா இருந்துக்கனும்..”

“ஹா.. ஹ.. பாட்டிக்கு சரியான பேருதான் ப்யூட்டி... சீக்கிரம் இந்த வார்த்தை வச்சே அவங்கள கவுத்துடறேன்..”

“நீங்க ஒண்ணுமே பண்ண வேண்டாம்.. நேத்திக்கு பண்ண மாதிரி கண்டும் காணாம இருங்க.. அதே சமயம் நீங்க பண்றத பண்ணிகிட்டே இருங்க.. அதுவா சக்சஸ் ஆயிடும்..”

“ஹே.. என்ன சொல்ற.. தெளிவா சொல்லு.. “

“அதான்பா.. டாகிங் டாம் மாதிரி பேசிட்டே இருக்காம, கண்ணும் கண்ணும் நோக்கியாவ மெய்ண்டைன் பண்ணுங்க.. அதே சமயம் உங்க நல்லவன்னு இருக்கிற இமேஜ் கண்டினியு பண்ணுங்க..”

“சுத்தம்.. கொஞ்ச நஞ்சம் புரிஞ்சதும் இப்போ ஒன்னும் புரியல.. நல்லவன்னா இருக்கணும் னா. எவ்ளோ அடிச்சாலும் தாங்கணுமா.. மீ ரொம்ப பாவம்..”

“ப்ரொபசர் சார். ரொம்ப ரீல் சுத்தாதீங்க.. பாட்டிய பொறுத்தவரை நீங்க அக்கறை உள்ள புள்ள.. நல்லா படிச்சு இருக்கீங்க.. நல்ல வேலைலே இருக்கீங்க.. உங்க அம்மாவும் அவங்களுக்கு பிடிச்சு இருக்கு..”

“ஹேய். இது எல்லாம் உனக்கு எப்படி தெரியும்?”

“எல்லாம் எங்க அப்பாகிட்டே எங்க பாட்டி எடுத்து சொன்ன டயலாக் .. ‘ என

“வாவ்..” என்று இப்போது துள்ளி குதிப்பது அவனின் முறை ஆனது.. அவனின் மக்ழ்ச்சியில் அவளின் மனமும் ஆர்ப்பரித்தது.

“நீ இவ்ளோ லேட்டா இந்த விஷயத்தை சொல்றியே.. “

“அடேங்கப்பா.. இதில் என்ன இவ்வளவு சந்தோஷமோ ?”

“உங்க வீட்டிலேயே நான் சமாளிக்க வேண்டியது  உங்க பாட்டிய தான்.. அவங்களே என் சைடு கோல் போட்டதுக்கு அப்புறம்.. எனக்கு என்ன கவலை.. “

“இளா. ரொம்ப சந்தோஷ படாதீங்க.. அவங்க இப்போ அடிச்சது சேம் சைடு கோல்.. எப்போ வேணும்னாலும் நமக்கு ஒப்போசிட் கோல் போடலாம்.. “

“ஏன் அப்படி சொல்றே மலர்?”

“இல்லைங்க.. ஒரு மனுஷனா உங்கள அவங்களுக்கு பிடிச்சு இருக்கு.. அவங்க பேத்திக்கு மாப்பிள்ளைனா லேசில் சம்மதிப்பாங்களா தெரியல..”

“அத பத்தி ஏன் கவலைபடுற.. மலர்  .. நான் அவங்க எப்படி கேட்டாலும் அத ப்ரூவ் பண்ண ரெடியா இருக்கேன் “

“இல்லை இளா.. நாம அந்த மாதிரி எதுவும் செய்ய வேண்டாம்.. நாம நாமாளாவே இருப்போம்.. அதுதான் எல்லோருக்கும் நல்லது.. “

“ஹ்ம்ம் அதுவும் சரிதான்.. “ என்றவன்

“இத கொண்டாட நான் உனக்கு கிபிட் தரணுமே.. “ என

“எது காதலர் தினத்திற்கு கொடுத்திங்களே அது மாதிரியா?”

“ஏன்மா அதுக்கு என்ன குறைச்சல்?” என

“ஹ்ம்ம்கும்.. அதிலே உங்களுக்கு பெருமை வேறா?” என்று சண்டையிட்டவள் அன்றைய தினத்தை நினைவு கூர்ந்தாள்.

செழியன் நினைவும் அங்கேயே நகர்ந்தது..

காதலர் தினத்தன்று காலேஜ்ஜில் இருந்து வீட்டிற்கு போகும் வழியில் உள்ள ஹோட்டல் பற்றி சொல்லி மலரை அங்கே காத்து இருக்குமாறு மெசேஜ் வந்து இருந்தது.

மலரும் ஒரு இனிய எதிர்பார்ப்போடு காத்து இருந்தால், செழியன் உள்ளே வரும்போதே எரிச்சல் முகத்தில் தெரிய வந்து கொண்டு இருந்தான்.. அவனை பார்த்தால் காதலியை சந்திக்க வந்தார் போல் தெரியவில்லை. எதிரி நாட்டுக்கு கப்பம் செலுத்துபவன் செல்லும் நிலையில் இருந்தான்.

வேகமாக வந்தவன், மலரின் எதிர் இருக்கையில் அமர்ந்தான். ஒரு டம்ளர் தண்ணீரை ஒரே வாயில் குடித்தவன்,

“டேய் .. பக்கி.. பன்னாடை.. நீ மட்டும் என் கையில் கிடைச்சே கொன்னே போடுவேன்..” என்று திட்டிக் கொண்டு இருந்தான்..

“இளா.. ரிலாக்ஸ்.. யார பிடிச்சு தாளிசுட்டு இருக்கீங்க..:”

“எல்லாம் அந்த வீணா போன செந்தில் தான்..”

“ஏன் அண்ணா என்ன பண்ணினார்..?”

“இன்னிக்கு காதலர் தினத்துக்கு உனக்கு கிப்ட் கொடுக்கனுமாமே .. அதுக்கு எனக்கு கிளாஸ் எடுத்துட்டு இருக்கான்..”

“ஏன் இதில் எனன் இருக்கு?”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.