(Reading time: 14 - 27 minutes)

“ஹேய்.. நீ வேற.. லவர்ஸ் டேக்கு கிப்ட் கொடுக்கணும்னு எனக்கு தெரியாதா.. ? நான் வேற ஒன்னு யோசிச்சு பேசாம இருந்தா, இந்த நாதாரி உன்னை வரசொல்லி மெசேஜ் அனுப்பிட்டு, என்னை பேசியே கடைக்கு இழுத்து போய் கிப்ட் வாங்க வச்சான்.. அதோட நாலு கார்டும் கொடுக்கணுமாம்.. அதையும் சொல்லி என்னை கம்பல் பண்ணினான்..” என்று சீரியஸ் ஆக சொல்லவும்,

“ஒஹ். அப்படின்னா.. உங்களுக்கு இது எல்லாம் பிடிக்காதா? “ என்று சின்ன குரலில் வினவவும்,

அவளின் குரல் மாற்றத்தை கண்டுகொண்டு

“ஹேய்.. மலர் .. நான் வேற ஒரு பிளான் வச்சி இருந்தேன்.. இவன் அத சொதப்பி விட்டுட்டான்.. அந்த கடுப்புதான் ..சாரி மா.. “

“அப்போ.. உங்க பிளான் படி நீங்க பாருங்க.. நான் கிளம்புறேன்” என்று எழுந்து நடக்க ஆரம்பித்தாள்

‘ஹேய்.. லூசு..” எனவும், மலர் முறைக்க, அவளை இழுத்து பக்கத்துக்கு நாற்காலியில் உட்கார வைக்க முயல, பாலன்ஸ் இல்லாமல் அவன் மடியில் விழுந்தாள்.

இருவரின் கண்களும் அடுத்தவரை நோட்டமிட, சற்று நேரம் தங்களை சுற்றி நடப்பதை அறியாமல் நின்று இருந்தார்கள்..

சற்று தள்ளி சர்வர் ஒரு டம்ளர் கீழே போடவும், அந்த சத்தத்தில் திடுக்கிட்டு விழித்த இருவரும் பிரிந்து நின்றார்கள்.

மலர் தலை நிமிராமல் இருக்க, செழியனோ தன் வெட்கத்தை மறைக்க தன் தலையை கோதிக் கொண்டான்.

பிறகு ஒரு பெருமூச்சு விட்டு இருவரும் தங்கள் சமநிலைக்கு வந்தனர்.

செழியன் “சாரி டா.. என்னை பொறுத்தவரை இப்படி கடையில் வாங்கி கொடுப்பதை விட, என் கையால் வரைந்த ஓவியம் உனக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.. அதை அவன் கெடுத்து விடவே அவன் மேலுள்ள கோபத்தில் இங்கே வந்து விட்டேன்.. அகேயின் சாரி டா..”

“ஏன்.. நீங்கள் ஓவியம் கொடுத்தால் நான் வேண்டாமென்றா சொல்லிவிடுவேன்.”

“அது எனக்கு தெரியும். அந்த மரமண்டைக்கு தெரிந்தால் தானே.. அவன் கிட்டத்தட்ட ஒரு இருபது படம் அலசி விட்டானாம். .அதில் இப்படி யாரும் பரிசு கொடுப்பது இல்லையாம்.. அதனால் பரிசு வித் கார்டு தான் கொடுக்கணும் என்று சண்டை போட்டான்..”

“அதை அவர் செல்வி அக்காவிடம் செய்ய வேண்டியதுதானே..”

“அதை கேட்டதற்கு தான்  அவன் பார்த்த படங்களில் காதலர் தினம் லவர்ஸ் மட்டும் தான் கொண்டடுராங்கலாம். கல்யாணம் ஆனவங்க அதை கொண்டடுவது இல்லையாம்..

“எனக்குதான் எங்கப்பா கல்யாணம் பண்ணி வச்சு இது எல்லாம் கொண்டாட முடியாம பண்ணிட்டாரு.. நீயாவது இதை பண்ணுடா மச்சான். என் ஆசிகள் என்றும் உண்டு..”

அப்படின்னு வசனம் பேசிட்டு போயிட்டான்.“

“சரி.. சரி.. அப்படி என்ன கிப்டு செலக்ட் செய்து இருக்கார்ன்னு பார்கிறேன்.. “ என்று செழியனிடம் கேட்க,

அவனோ “ஹேய்.. இது எல்லாம் பார்த்துட்டு .. என்னை திட்டக் கூடாது.. எல்லாம் அவன் வேலைதான்.” என்று எடுத்துக் கொடுக்க

அந்த கிப்ட் பாக்ஸ்சில் ஒரு கீ செயின் இருந்தது.. சரி எல்லோரும் கொடுப்பதுதானே இதில் கோபபட என்ன இருக்கு என்று பார்த்தால், அங்க்ரி பர்ட் முகம் இருந்தது.

மலர் செழியனை முறைக்க, அவன் சரண்டர் என்பதாக கை உயர்த்தி

“ஹேய்.. என்னை விட்டுடு.. இது அவன் செலெக்ஷன் தான் .. ஏண்டா இப்படி என்றால் எல்லோரும் வழக்கமா, தாஜ்மஹால், டெட்டி பியர், அது மாதிரித்தானே கொடுப்பாங்க.. நாம வித்தியாசமா கொடுப்போம்நு “ சொல்லி பாக் பண்ண கொடுத்துட்டான்..

அதே போல் இரண்டு கிரீடிங் கார்ட் இருக்க, அதில் ஒன்றும் ஸ்பெஷல் இல்லை.. அவளின் முகத்தை பார்த்து

“இதை சொன்னதற்குதான்.. நீ தெரியாம பேசாதடா.. என் தங்கச்சிக்கு என்ன பிடிக்கும்னு கூட தெரியல.. நீ என்ன காதலன்னு “ என்னை இங்கே இறக்கி விட்டுட்டு போயிட்டான்..”

என்று சோகமாக சொல்லி முடிக்கவும், மலர் விழுந்து விழுந்து சிரித்தாள். அவளின் சிரித்த முகத்தை பார்த்த செழியனுக்கும் மெல்ல டென்ஷன் மறைந்து, ரிலாக்ஸ் ஆகி விட்டான்.

அதை நினைவு கூர்ந்த இருவரும் இப்போது மீண்டும் நன்றாக சிரித்து விட்டு போனை வைத்தனர்.

றுநாளில் இருந்து இருவரிடத்திலும் ஒரு உற்சாகம் இருந்தது . இரண்டு நாட்கள் கழித்து அவன் அன்னை வடிவேல் கிட்டே பேசினியா என்று கேட்க,

“இல்லைமா.. அவரிடம் நேரிடையாக பேசினால் அது அப்பா காதுக்கு போக கூடும். அதனால் செந்தில் வைத்து பேச போகிறேன்” என அவன் அம்மாவும் சரி என்றார்.

செந்திலை அழைத்தவன்,

“செந்தில் ..உனக்கு வடிவேல் மாமா பற்றிய விவரம் தெரியமா?”

“அவர் எனக்கு சொந்தம் தான்.. ஆனால் என் மச்சான் வீட்டு வழி தான் நெருங்கின சொந்தம் “

“அவர் போன் நம்பர் , அட்ரஸ் டிடைல்ஸ் கிடைக்குமா?”

“வாங்கிரலாம் டா .. என்ன விஷயம்.?”

செழியன் தன் பிரச்சினையை சொல்ல , அவனுக்கு உதவுவதாக கூறினான்.. அதன் படி அடுத்த வாரத்தில் அந்த வடிவேல் போன் நம்பரை செழியனுக்கு வாங்கி கொடுத்தான் செந்தில

தொடரும்!

Episode # 39

Episode # 41

{kunena_discuss:1126}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.