(Reading time: 7 - 14 minutes)

உள்ளம் முழுதும் ரணமானது கொட்டிக்கிடந்திட, அவனால் அதனில் இருந்து எளிதில் வெளிவந்திட முடியுமா என்று தெரியாத ஓர் தருணத்தில் அகப்பட்டிருப்பதை தெளிவாய் உணர்ந்தான் கௌஷிக்…

மனமானது வெறுப்பினை உமிழ்ந்த வேளை, தலையை திரும்பி அதனை முகத்தினில் அவன் காட்டிட, அவன் விழிகளில் தென்பட்டது அப்புத்தகம்…

எழுந்து சென்று அதனை எடுத்திட்டவனின் முகம் கோடி உணர்வுகளை பிரதிபலித்திட்டது அக்கணமே…

இள மஞ்சள் நிறமும், ஆரஞ்சும் கலந்த புடவை, புடவையின் ஓரத்தில் பச்சை நிறம் அதனை எடுப்பாய் எடுத்துக்காட்டிட, புடவையின் தலைப்பில் சிறு சிறு காப்பி நிற மொட்டுக்களும் பூக்களும் நிரம்பியிருந்திட, புடவைக்கே அழகு சேர்க்கும் விதமாய் கொள்ளை அழகுடன் நின்றிருந்தாள் சாரு… அவளருகே விருதின் புகைப்படம் ஒன்றும் இருந்திட, அந்த வருடத்தின் சிறந்த பாடகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற வாசகமும் அதில் இருந்திட,

மனதோடு அப்புத்தகத்தை புதைக்க சென்றவனின் மனதினில்

“அம்மா….” என சாரு கூறிய வார்த்தைகள் வந்து போக, புத்தகத்தை கையிலேயே வைத்து உறுத்துப்பார்த்திட்டான் கௌஷிக்…

தீபனின் செல்போன் பார்த்துவிட்டு உயிர் அற்றுப்போனவனாய் அவன் வீட்டிற்கு வந்திட்ட வேளை, கல்யாணி அவனருகில் வர, அவன் அவரை நிமிர்ந்தே பார்த்திடவில்லை…

“கௌஷிக்… கண்ணா…”

மேற்கொண்டு அவர் பேசிட இடம்கொடாது, அவன் மெல்ல நகர்ந்திட,

“கண்ணா….” என்றழைத்தவரின் குரலில் இருந்திட்ட வலியினை அவன் உணராமல் இல்லை…

இந்நிலையில் அவரை ஏறெடுத்துப்பார்த்திட முடியும் என்று தோன்றிடவில்லை அவனுக்கு…

“டயர்டா இருக்கு… தூங்குறேன்….ம்மா…..”

அம்மா என்ற வார்த்தையில் இருந்திட்ட தடுமாற்றமும், வலியும் கல்யாணி உணர்ந்திட அவருக்கு சுருக்கென்றது…

அவனின் உடல் அசதியை விட, மன அசதி மிகுதியாக இருக்கிறது என உணர்ந்து கொண்டவருக்கு அதற்கான காரணமும் விளங்கிட, அதற்கு மேலும் அவனை வற்புறுத்த இயலாது பேசாமல் இருந்திட,

தாயின் இந்த மௌனமும் அவனை வாட்டிட, சாருவின் அம்மா என்ற வார்த்தையும் அவனை கலக்கிட, இருதலைக்கொள்ளி எறும்பாய் தவித்தவன், தனதறைக்குள் புகுந்து கதவை சாத்திக்கொள்ள, கல்யாணி மகனின் அம்மாற்றத்தினை கண்ணீரோடு கண்டார் அவர்…

“என்னை மன்னிச்சிடு கண்ணா… உன்னோட இந்த கஷ்டத்துக்கு நான் காரணமா இருக்குறது என்னை எந்த அளவுக்கு கொல்லுதுன்னு உனக்கு தெரியாது… என்னால இந்த வலியை தான் உனக்கு தர முடிஞ்சதே தவிர, சந்தோஷத்தை தர முடியலை கண்ணா… அம்மாவ மன்னிச்சிடு…”

மனதினுள் அவர் உரைத்திட, அவரது விழிகளோ வெளிப்படையாக தனது மன்னிப்பை கேட்டு வெளிவந்திட்டது கண்ணீராய் மளமளவென…

அறைக்குள் கட்டுக்கடங்காமல் தத்தளித்திட்ட அவனது மனம் இப்பொழுது அவளை புத்தக அட்டையில் பார்த்திட, அவனால் அதனை தாங்கிடமுடியவில்லை…

புத்தக அட்டையில் இருப்பவளையே அவன் விழிகள் காதலுடனும், ஆற்றாமையுடனும் பார்த்திட,

அதே கண்களில் தன் நலனையே எண்ணிக்கொண்டிருக்கும் தாயின் முகமும் வந்து போக, அவன் மனதோ யார் பக்கம் சாய என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தது குழந்தையாய்...

அதே நேரம், சுவரில் சாய்ந்திருந்த சாரு, தன் கையில் இருந்த புத்தகத்தில் விழி பதித்தாள்…

அட்டையின் முதல் பக்கத்தில் தன்னவன் கம்பீரமாய் அமர்ந்திருக்க, அவனது விழிகளில் இருந்திட்ட அந்த வசீகரத்தில் ஈர்க்கப்பட்டாள் அவள்…

அதே நேரம், அவளையும் மீறி விழிகளில் கண்ணீரும் வழிந்திட, அட்டைப்புத்தகத்தில் இருந்திட்ட அவனது முகத்தை வருடச் சென்றாள்…

சற்று முன் கண்ட கௌஷிக்கின் உணர்ச்சியில்லாத முகத்தினைக் கண்டு விழி மூடி அவள் சாய, அவள் விழியினைத் தாண்டி வழிந்தது கண்ணீர்…

கைகளை வேகமாக அவன் வசமிருந்து எடுத்துக்கொண்டவள், வாய்விட்டே அழுதிட, புத்தகத்தை மடியினில் வைத்து விட்டு, சுவரில் சாய்ந்து அவனையே பார்த்து பார்த்து விடியும் வரை உறக்கத்தை அவள் தொலைத்திட,

அவனும் மார்போடு அணைத்துக்கொள்ள இருந்த புத்தகத்தினை மடியினில் வைத்தபடி தரையில் அமர்ந்தவன், சுவரோடு சாய்ந்து அமர்ந்து அவள் விழிகளிலேயே தன் விழிகளையும் பதித்து, அங்கே தன்னவள் உறங்காது விடியலைத் தஞ்சமடைந்தது போல் அவனும் அவ்விடியலையேத் தஞ்சமடைந்திட, விடியலும் இருவருக்கும் சில சேதிகளை உணர்த்த தயாராக இருந்தது…

“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”

Episode # 13

Episode # 15

{kunena_discuss:1162}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.