(Reading time: 15 - 29 minutes)

நல்லாயிருக்கனும் நீங்க ரெண்டு பேரும் அதான் எங்களுக்கும் வேணும் அவங்களும் விரும்புவாங்க..சரியா??”,எனும்போதே கண்ணில் நீர் திரண்டு வழியே சரோஜா ஒருபுறமும் ராஜி ஒருபுறமுமாய் அவள் தோள்தட்டி சமாதானபடுத்தினர்..

சற்றே தன்னை தேற்றியவள்,தேங்க்ஸ்ப்பா..என கேசவனை பார்க்க.பாச தலையசைப்போடு சாப்டு என செய்கை செய்தார்..அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த தமிழை அவள் பார்க்க என்னவென பார்வையால் கேட்டவனை விழி அகல பார்த்து இடவலமாய் தலையசைத்து குனிந்து கொண்டாள்..

உணவு முடிந்து ஆண்கள் ஹாலுக்குச் செல்ல நிர்பயா பெண்களோடு சமையலறையில் அமர்ந்தாள்..

“நிர்பயா நா ஊர்ல இருந்து கிளம்பும் போதே என்ன சொல்லிட்டு வந்தேன் சந்தோஷமா ஊருக்கு வாநு சொன்னேனா இல்லையா??இப்படியா அழறது??”

“அம்மா நிஜமாவே இந்த பாசத்துக்கு நா தகுதியானவ தானா??”

“என்ன பேச்சு இது??”

“இல்லம்மா நிஜமாவே இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு..உங்க பையன் என்னை கல்யாணம் பண்ணிக்குறேன்னு சொன்னதே பெரிய விஷயம் இதுல நீங்களும் அண்ணியும் இப்படி எனக்காக உங்க ஹஸ்பெண்ட்ஸ்கிட்ட கூட என்ன விட்டுகொடுக்காம..”,எனும்போதே குரல் தழுதழுக்க,

ராஜி அவளை அதட்டினாள்..”இங்க பாரு முதல்ல அழறத நிறுத்து..பழசையெல்லாம் மறந்துருநு அத்தை சொன்னாங்களா இல்லையா??இனி இதுதான் உன் குடும்பம் இதுதான் உன் வாழ்க்கை..நடந்ததுல உன் தப்பு என்ன இருக்கு நிர்பயா??ஆம்பள திமிருல அந்த நாய் பண்ணிணதுக்கு நீ எதுக்கு வாழ்க்கை புல்லா தண்டனை அனுபவிக்கனும்..

நீ அதையே நினைச்சு நினைச்சு தம்பிய கஷ்டப்படுத்தாத..நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் தம்பி உனக்காக ஒவ்வொரு விஷயத்துலயும் எவ்ளோ  பாத்து பாத்து பண்றாருனு..அப்படியிருக்கும் போது நீ இப்படி வருத்தப்பட்டா அது அவனுக்கு எவ்ளோ கஷ்டத்தை கொடுக்கும்..தம்பிக்கு அடுத்ததா உனக்கு புல் சப்போர்டா நானும் அத்தையும் இருக்கோம்..இதைவிட உனக்கு என்ன வேணும் சொல்லு..கல்யாண பொண்ணா அழகா ரெடியாகி சிரிச்ச முகமா வா பாக்கலாம்..”,என தோள்தட்டி அனுப்பி வைத்தாள்..

மாடிக்குச் சென்றவளுக்கு அவள் பேச்சின் அர்த்தம் புரிந்தது..எக்காரணத்திற்காகவும் தமிழ் மனம் நோகும்படி நடந்துவிட கூடாது..கடவுளே கொடுத்த வாழ்க்கையை தன் குழப்பத்தால் அழித்துவிட கூடாது என மீண்டும் மீண்டும் தனக்குள் பதிய வைத்துக் கொண்டவள் முகம் கழுவி லேசாய் ஒப்பனை செய்து தலையை விரித்து நடுவில் மட்டும் கிளிப் போட்வாறு துப்பாட்டாவை சரி செய்து கிளம்ப எத்தனிக்க சரியாய் அறைகதவு தட்டும் ஓசைக் கேட்டது..முகத்தில் ஒட்டிய புன்னகையோடு கதவை திறந்தவள் அங்கு தமிழை சற்றும் எதிர்பார்க்கவில்லை..

அவளை பார்த்தவனோ விசிலடித்தவாறு கைகளை மார்பின் நடுவே கட்டியவாறு கதவில் சாய்ந்து நின்றான்..

“வாவ் யார் இது புதுசா இருக்கு??என் அழுமூஞ்சி பொண்டாட்டிய யாராவது பாத்தீங்களா”, என அறைக்குள் தேடுவதாய் நடிக்க,வழக்கம்போல் வெட்கத்தில் முகம் சிவக்க நின்றவளை சிறு இடைவெளிவிட்டு  அவள் பக்கவாட்டுசுவரில் ஒரு கையை ஊன்றியவாறு நெருங்கி நின்றான்..

“கல்யாண பொண்ணுக்கு கல்யாண களை வந்திடுச்சு போல??”,என மென்குரலில் கேட்டான்..

அவனை விழி உயர்த்தி பார்த்தவள் எதிர்கொள்ள முடியாமல் மீண்டுமாய் தலைசாய்த்துக் கொண்டாள்..

“இப்படியே இரு நிரு..ரொம்ப அழகாயிருக்க..”,என உச்சந்தலையில் இதழ்பதித்து நகர்ந்தவனை கைப்பிடித்து நிறுத்தியவளை ஆச்சரியமாய் அவன் பார்க்க,

“ரொம்ப நாளுக்கப்பறம் இந்த சிரிப்பு என் முகத்துல வர்றதுக்கு முழு காரணமும் நீங்க மட்டும்தான் செல்வா தேங்க் யூ சோ மச் “,என அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள்..

இதை சற்றும் எதிர்பாராதவன் மென்மையாய் அவளை தன்னோடு சேர்த்துக் கொண்டான்..இந்த நொடி இது நிச்சயம் அவளுக்கு தேவை என தோன்றியது..அவளாய் விலகும் வரை தன் அணைப்பிலேயே வைத்திருந்தவன் அவளை மேலும் சீண்டாமல்,

“ வா நிரு அண்ணி உன்னை கூப்பிட்டாங்க..நா போறேன் நீ ரெடி ஆய்ட்டு வா “,என கன்னம்தட்டிச் சென்றான்..

கீழே வந்தவனை ராஜி குறும்பாய் பார்க்க,அண்ணி இதோ வந்துட்டேயிருக்கா..

“நல்லவேளை தம்பி எங்க உங்கள கூட்டிட்டு வர ஆள் அனுப்பனுமோனு நினைச்சேன்..”,என்றதை காதில் வாங்காதவனாய் போனை எடுத்துக் கொண்டு நகர்ந்தான்..

அடுத்ததாய் வந்தவளை பார்த்த ராஜிக்குமே நிறைவாய் இருந்தது..,”ம்ம் இப்போ தான தெரியுது தம்பி கீழே வர ஏன் லேட் ஆச்சுநு..திரும்பு கொஞ்சம்..”, என்றவாறு தன் கையில் வைத்திருந்த மல்லிச் சரத்தை அவள் தலையில் வைத்துவிட்டு திருப்பியவள் திருஷ்டி கழித்து தன் கண் மையை எடுத்து அவள் காதருகில் வைத்தாள்..தேவதை மாதிரி இருக்க வா என உள்ளே அழைத்துச் சென்றாள்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.