(Reading time: 15 - 29 minutes)

சரோஜாவோ மென்மையாய் அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தார்..

“என் அழகுப் பொண்ணே இப்டி இருக்க வேண்டிவளா இத்தனை நாளும் அழுதுவடிஞ்ச முகத்தை வச்சுட்டு இருந்த..எவ்ளோ அழகாயிருக்க தெரியுமா?? எனக்கு தெரிஞ்சு தமிழ் அங்க இங்க நகரமாட்டான் போ..”,என கன்னம்கிள்ளி சிரிக்க,

“அத்தை நீங்க ஒரு தீர்க்க தரிசி..கரெக்ட்டா சொல்றீங்களே”, என நிர்பயாவை இடித்தாள்..பெண்ணவளோ மனம் நிறைந்து தன்னை மறந்து போனாள்..இப்படியாய் மதியம் வரை பொழுது கழிய மாலை காபியை கொடுத்தவாறு சரோஜா,

“நிர்பயா அக்கம் பக்கத்துல இருக்குறவங்கலா உன்னை பாக்க வருவாங்க உன் ரூம் பீரோல புடவையெல்லாம் வச்சுருக்கேன் பாரு அதுல எதையாவது எடுத்துக் கட்டிக்கோ..அப்பறமா நா தலைவாரி பூ வச்சு விடுறேன்..சரியா போம்மா..”

“ம்மாமா..அது வந்து..”

“என்னடா??”

“எனக்கு புடவை கட்டத் தெரியாதும்மா..”

“அடடா நானே நினைச்சேன்..சரி பரவால்ல நீ ரூம்க்கு போ நா வந்து கட்டிவிடுறேன்..”

அவரே வந்து அழகாய் அவளை அலங்கரித்து தலைவாரி அரிசி பின்னல் இட்டுவிட்டார்..

“உன் முடி நீளத்துக்கு இது நல்லாயிருக்குடா..நீங்க ஊருக்கு போற வர நாதான் உனக்கு அலங்காரம் பண்ணிவிடுவேன் சரியா..எனக்கு பெண் குழந்தைனா ரொம்ப பிடிக்கும்..ராஜிக்கு கல்யாணம் ஆன புதுசுல கூட நாதான் அவளுக்கு தலைபின்னி விடுவேன்..அப்பறம் அவளுக்கும் வேலை குழந்தைநு சரியா இருக்கும் நேரம்..இப்போ நீ வந்துட்ட..

உனக்கு எங்க ஊர் பழக்கமெல்லாம் தெரியாதில்ல..நாளைக்கு பூச்சடை வச்சு பின்னிவிடுறேன் ரொம்ப அழகா இருக்கும்”, என அவளோடு பேசியவாறே கைநிறைய இருந்த பூச்சரத்தை சூட்டி விட்டார்..என் கண்ணே பட்ரும் போல இருக்கு..சரி நா கீழே போறேன் நீ வா என்றவாறு அவர் கீழிறங்க,

கண்ணாடியில் தன்னை பார்த்தவளுக்கு அவளையே அடையாளம் தெரியவில்லை..அத்தனை அழகாய் நேர்த்தியாய் அவள் ஒருபோதும் தன்னை தயார்படுத்திக் கொண்டதில்லை..திருமணகளை என்பது இதுதானோ எனத் தோன்ற அனைத்தும் சரியாய் இருப்பதை உறுதிபடுத்திக் கொண்டு கீழே இறங்கினாள்..

ஹாலில் கேசவனும் வெற்றியும் அமர்ந்திருக்க தமிழ் இல்லாததை உணர்ந்து நிம்மதியெழ இருப்பினும் மனதோரம் எங்கோ வருத்தம் எட்டிப்பார்த்தது உண்மை..சரோஜாவை தேடி கிச்சனிற்கு செல்ல அங்கு தமிழ் தீவிரமாய் ஏதோ சமைத்துக் கொண்டிருந்தான்..ஒரு நொடி அதிர்ந்தவள் சத்தம் எழுப்பாமல் நகர எத்தனிக்க,

“என்ன புதுப் பொண்ணே ரெடி ஆய்ட்டியா “,என தலை திருப்பாமல் கேட்க அப்படியே நின்றுவிட்டாள்..மறுபுறம் பதில் வராமல் இருக்க திரும்பியவன் கண்ணிமைக்க மறந்து நின்றான்..அழகிய. டார்க் பிங்க் நிற மைசூர் சில்க் புடவையில் கருநீல நிற பார்ட்டரோடு அழகாய் அளவாய் ஒப்பனை செய்து நின்ற விதத்தில் அச்சு அசல் திருநெல்வேலி பெண் சாயலிலேயே இருந்தது..

“மாமியாரும் மருமகளும் பின்றீங்களேம்மா..ஒரு மணி நேரமா ரெண்டு பேரையும் காணாம போகும்போதே நினைச்சேன்..ம்ம் சரி வா உக்காரு பால் கொழுக்கட்டை பண்ணிருக்கேன் சாப்டுறியா??”

“அப்படினா??”

“அப்பப்போ நீ ஒரு ரசகுல்லாங்கிறத மறந்துரேன்..அது ஒரு ஸ்வீட் இந்தா சாப்ட்டு பாரு..”

“அப்பாக்கு அம்மாக்கு??”

“எல்லாரும் அப்பறம்தான் சாப்டுவாங்க நீ எடுத்துக்கோ நா வெற்றிக்கு குடுத்துட்டு வரேன்”, என அவன் நகர,

“செல்வா..”

“ம்ம்”

“புடவை எப்படியிருக்கு??”

“ஐயோ காலையிலே இருந்து ஷாக் மேல ஷாக் குடுக்குற நிரு..ரொம்ப ரொம்பபபப அழகாயிருக்கு..மீதியை மாடிக்கு வந்து சொல்றேன் “,என கண்ணடித்துச் சொல்ல சட்டென திரும்பி அமர்ந்து கொண்டாள்..

மாலை நேரமும் ஒவ்வொருவராய் அவர்களை பார்க்க வர காலையில் போன்று அல்லாமல் ஓரளவு சிரித்த முகத்தோடு பதிலளித்தாள்..

அனைவருமே அவளை பற்றி நல்லவிதமாக சரோஜாவிடம் பெருமையாய் பேசிவிட்டுச் சென்றார்கள்…

“சரோஜா மருமக பொண்ணு ரொம்ப நல்லா பேசுறாளே..நா கூட வடநாட்டு புள்ளயாச்சே எப்படியிருக்குமோநு நினைச்சேன்..நம்ம தமிழுக்கு ஏத்த ஜோடிதான்..”,என நெருங்கிய உறவினர் ஒருவர் கூறிச் செல்ல அவருக்கு நிம்மதியாய் இருந்தது..

காதல் திருமணம் என்பதே ஊர் பக்கத்தில் பெரிய விஷயம் அதிலும் மொழி பழக்கவழக்கம் என அனைத்துமே ஒத்துப்போகாத ஒரு பெண்ணை திருமணம் செய்வது என்பது ரொம்பவே பெரிய விஷயம்..தமிழ் யார் பேச்சை பற்றியும் கவலைபடுபவன் இல்லை..அதனால் தான் நிர்பயாவை திருமணம் செய்வதில் உறுதியாய் இருந்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.