(Reading time: 15 - 29 minutes)

ஆனால் சரோஜாவிற்கும் கேசவனுக்கும் அது அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை..ஆயிரம் பேர் ஆயிரம் கேள்வி கேட்க அவரவருக்கு ஏற்ற பதில் கூறி அவர்களை பகைத்து கொள்ளாமல் இதுவரை கொண்டு வந்துள்ளனர்…ஆக அனைவரும் நிறைவாய் பேசியது அவர்களை பொறுத்த வரையில் மிகப் பெரிய விஷயம் தான்..

இரவு உணவு முடித்து அனைவரும் உறங்கச் செல்ல தமிழ் வெற்றியின் அறையிலும் ராஜி குழந்தையோடு நிர்பயா அறையிலும் படுத்துக் கொண்டாள்..சிறிது நேரம் பேசிவிட்டு அசதியில் ராஜி உறங்கிவிட நிர்பயாவிற்கு உறக்கம் வர மறுத்தது..புரண்டு புரண்டு படுத்தவள் குழந்தை எழுந்து விடுமோ என்றெண்ணி மெதுவாய் எழுந்து வெளியே வந்தாள்..ஹாலை தாண்டிய கதவை லேசாய் திறந்து வைத்தவாறு வெளியே மொட்டை மாடிக்குச் செல்லும் படிகளில் அமர்ந்தாள்..

சற்று நேரத்தில் போன் பேசுவதற்காக வெளியே வந்தவன் கதவு திறந்திருப்பதை கண்டு வெளியே வர படிகளில் அமர்ந்து எங்கோ பார்த்துக் கொண்டிருப்பவளை பார்த்து,

“ஓய் தூங்கலயா??”

“இல்லங்க தூக்கம் வரல..”

“என்னாச்சு புது இடமே அதனாலயா?? “,என்றவாறு அவளிற்கு கீழே இரண்டு படி தள்ளி அமர்ந்தான்..

“அப்படினு இல்ல எப்பவுமே நைட் தூக்கத்தை கஷ்டப்பட்டு கொண்டு வந்து தான் தூங்குவேன்..எதை எதையோ போட்டு குழப்பிப்பேன் ஆனா இன்னைக்கு தூங்காம இருக்குறதுக்கு முழு காரணமும் சந்தோஷம் மட்டும் தான்..இந்த ஊர் இந்த குடும்பம் இந்த மக்கள் இப்படி எல்லாமே ரொம்பவே அழகா தெரியுது…”

“ம்ம் பரவால்லையே இவ்ளோ பேசுற சரி இதெல்லாம் மட்டும்தான் காரணமா நா இல்லையா??”

சட்டென அமைதியானவள் ஒன்றும்கூறாமல் இருக்க,”என்ன பதிலே காணும்??”

“நா என் வாழ்க்கைல கிடைச்ச சந்தோஷத்த பத்தி தான பேசிட்டு இருக்கேன்..அதுல நீங்க எப்படி வருவீங்க..என் வாழ்க்கையே நீங்கதான “,cஎன மென்குரலில் கூறியவளை தலைசாய்த்து பார்த்தவன் ஒன்றும் கூறாமல் சிரித்தான்..

“சரி உனக்கு தூக்கம் வர்றதுக்கு ஒரு வழியிருக்கு..சாயந்திரம் என்கிட்ட நீ ஒரு கேள்வி கேட்டியே நாகூட மாடிக்கு…அதுக்கு பதில இப்போ சொல்லட்டுமா”, என ரகசியமாய் கேட்க,

அந்த இருளிலும் தன் முகம் சூடேறுவதை அறிந்து விடுவானோ என்றெண்ணியவள் எனக்கு தூக்கம் வருது உள்ளே போலாமா என வேறெங்கோ பார்த்தப்படி கேட்டாள்..

சத்தமாய் சிரித்தவன்,” நாதான் சொன்னேனே..சரி வா.போய் ஒழுங்கா தூங்கு புரியுதா??குட் நைட்”, என அவளுக்கு வழிவிட்டு நின்றவனை கடந்து செல்லும் வரையிலுமே மூச்சு வாங்கியது பெண்ணவளுக்கு…வந்து படுத்தவளுக்கு சந்தோஷத்தாலும் நிம்மதியாலும் தூக்கம் கண்களை தழுவியது..

காலை அனைவருமே எழுந்திருக்க நிர்பயாவை பற்றி ராஜியிடம் சரோஜா கேட்டார்..

“அவ நல்ல தூக்கத்துல இருந்தா அத்தை சரி எழுப்ப வேண்டாமேநு விட்டுடேன்..”,காபியை பருகியபடியே வந்தவன்,

“நைட் அவ ரொம்ப நேரம் தூங்கலம்மா தற்செயலா பாத்தா வெளில உக்காந்திருந்தா அப்பறம்தான் தூங்க போனா..”

“ஓஓ புது இடமில்லையா அதனால இருக்கும் சரி நீ போய் அவள எழுப்பிட்டு வா தமிழ்..நாம குலதெய்வ கோவிலுக்கு போனும் உங்கப்பா ரெடி ஆய்ட்டாருனா மத்தவங்கள ஒரு வழி ஆக்கிடுவார்..ராஜி நீ வாம்மா பூஜை தட்டு ரெடி பண்ணணும்”, என்று கூறிச் சென்றார்..

அவளுக்காக காபி கலந்து எடுத்துச் சென்றவன் கதவை திறக்க கட்டிலின் ஓரத்தில்  சுவரோடு ஒன்றிக் கொண்டு குழந்தையாய் உறங்குபவளை எழுப்ப தோன்றாமல் நின்றான்..பின் மெதுவாய் கட்டிலில் அமர்ந்து அவள் தோள்தட்டி எழுப்ப அடுத்த நொடி எழுந்து கொண்டாள்..பதறி எழுந்தவளை பார்த்தவனுக்கு மனம் ஏதோ செய்ய அதை மறைத்து அவளிடம்,

“குட் மார்னிங் நிரு..ரிலாக்ஸ் நா தான்..”

நீண்ட மூச்செடுத்தவள்..”சாரிங்க ரொம்ப லேட் ஆய்டுச்சா..குட் மார்னிங்..”,என்றவாறு தலையை கோதி சரி செய்தாள்..

“லேட்லா ஆகல நாம இன்னைக்கு குலதெய்வம் கோவிலுக்கு போறோமாம் அதான் எழுப்பினேன்டா..இந்தா காபி சாப்ட்டு குளிச்சு ரெடி ஆய்ட்டு வா ம்ம் என்றவாறு எழுந்தவன் டேக் கேர் நிரு”, என உச்சியில் இதழ்பதித்துச் சென்றான்..

மனம் அவளையே சுற்றி வந்தது..எந்தளவு மனம் ரணப்பட்டிருந்தால் எதிர்பாராத சிறு தொடுதலுக்கே இந்த அளவு பயந்து போவாள்..தான் வந்திருக்க கூடாதோ என்று கூட தோன்றியது..அவன் தாய் சொன்னது நினைவிற்கு வர,எல்லாத்தையும் ஏத்துக்க அவளுக்கு டைம் தேவைப்படும் தமிழ்,தனக்கு தானே சமாதானம் கூறிக் கொண்டான்..

மக்களே திருநெல்வேலி எப்படியிருக்கு?வசதிக்கெல்லாம் குறைவில்லையே..கல்யாண கலாட்டாக்களுக்கு காத்திருங்கள்.. smile

தொடரும்

Episode 07

Episode 09

{kunena_discuss:1164}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.