Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

இனிய Chillzee வாசகர்களே, கொரோனா வைரஸ் நோய் (COVID-19) என்பது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். உங்களையும், மற்றவர்களையும் இந்த நோய் தொடராமல் காத்துக்கொள்ள, Social distancing எனும் சமூக விலகலை கடைப்பிடியுங்கள். Hand soap பயன்படுத்தி கைகளை கழுவுங்கள். தேவை இல்லாமல் உங்கள் முகத்தைத் தொடாமல் இருங்கள். இந்த வைரஸ் பற்றிய அதிகாரப்பூர்வமான விபரங்களுக்கு கீழிருக்கும் இணையத்தளங்களை பாருங்கள்:
உலக சுகாதார அமைப்பு (WHO), இந்திய அரசு, தமிழக அரசு
வதந்திகளை பரப்பாதீர்கள், வதந்திகளை நம்பாதீர்கள்!
- Chillzee Team

1 1 1 1 1 Rating 5.00 (3 Votes)
தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகா - 5.0 out of 5 based on 3 votes
Pin It

தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகா

Aathibanin kaadhali

க்கீல் மாமா தன்னுடைய குடும்பத்துடன் ஒன்று சேர்ந்தாலும் ஆதிபனின் பார்வை மட்டும் கோபமாக தன் மீது விழுவதை கண்டும் ஆதிரா எந்தவித பயமும் இல்லாமல் ரூமிற்கு சென்றாள்.

எப்படியும் ஆதிபன் பின்னாடியே வருவான் அவன் வருவதற்காக அவள் காத்திருந்தாள்.

ஆனால் ஆதிபனோ வரவேயில்லை. நேரம் செல்ல செல்ல குழம்பிய அவள் மெல்ல கீழே சென்று பார்க்கலானாள்.

அங்கே மொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்கள் பேசுவதை ஒரு ஓரமாக நின்று ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தாள் ஆதிரா.

”நான் கூட இன்னிக்கு நடந்த பிரச்சனையில பயந்தே போனேன்.

ஆதிரா இப்படி விவாகரத்து டிராமா வரைக்கும் போவாள்னு நான் நினைக்கல” எனறார் பாட்டி

”ஆமாம் அத்தை அவள் இன்னும் சின்ன பொண்ணுதானே தாயில்லாத பொண்ணு வேற அம்மான்னு ஒருத்தியிருந்தா சரி எது தப்பு எதுன்னு அவளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்க

இனிமே நாம தான் அவளுக்கு வாழ்க்கையை புரியவைக்கனும் குடும்பம்னா என்னன்னு புரியவைக்கனும்.

யார்கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னும் பெரியவங்க கிட்ட எப்படி நல்லவிதமா மரியாதையா பேசனும்னு கூட சொல்லிக்கொடுக்கனும்.

அவளோட ட்ராமாவாலதானே நம்ம வீட்டுக்கு இன்னிக்கு ரெண்டு சந்தோஷம் கிடைச்சிருக்கு ஒண்ணு உங்க மாப்பிள்ளை வந்தது இன்னொன்னு என் பையன் திலீபன் மாப்பிள்ளையாக போறது” என்றார் சிவகாமி

”நீ சொன்னதும் சரிதான் ஆதிரா சின்ன பொண்ணாவே இருந்தாலும் அவளும் ஒரு வக்கீல்தானே

அவளுக்கும் சட்டம் தெரியும் எந்த அடிப்படையில அவள் விவாகரத்து வாங்கனும்னு நினைச்சா மாப்பிள்ளை” என தாத்தா தன் மாப்பிள்ளையான வக்கீல் புகழேந்தியிடம் கேட்க

”இந்த விவகாரத்துக்கு காரணமே இந்த ஆதிபன்தான் சின்ன பொண்ணுகிட்ட மென்மையா நடந்துக்காம முரட்டுத்தனமா நடந்துக்கிட்டிருக்கிறான்.

ஆதிரா என்கிட்ட அழுதுகிட்டே சொல்லும் போது கஷ்டமாயிடுச்சி

அவள் சொல்றா என் விருப்பிமில்லாம என்னை அடையனும்னு நினைக்கிறாரு

அது எனக்கு பிடிக்கலை இந்த காரணத்தை வச்சி டைவர்ஸ் வாங்கிக்கொடுங்கன்னு கேட்டா

நான் ஒரு நிமிஷம் ஆடிப்போயிட்டேன். என்னதான் ட்ராமான்னாலும் அவள் சொன்ன காரணம் உண்மைதானே அவள் உடம்புல இருந்த காயங்களை பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமாயிருந்திச்சி மாமா

ஆதிபன் அவள் கிட்ட இப்படி கடினமா நடந்திருக்கக்கூடாது பாவம் ஆதிரா சின்ன பொண்ணு” என்றார் புகழேந்தி அதற்கு தாத்தாவும்

”நான் அப்பவே ஆதிபன் கிட்ட சொன்னேன். முரட்டுத்தனமா நடந்துக்காதேன்னு கேட்டானா”

”விடுங்க அவனும் என்னதான் செய்வான் இத்தனை வருஷமும் காத்துகிடந்தான்ல” என்றார் பார்வதி

”அதுக்காக இப்படியா அவனால பாவம் அந்த பொண்ணுக்குதானே கஷ்டம்” என்றார் ரத்தினவேல் பாண்டியன்

”எப்படியோ அந்த ஆதிரா இந்த வீட்டுக்கு மருமகளா வந்த ராசி பிரிஞ்ச குடும்பங்கள்லாம் ஒண்ணு ஒண்ணா நம்மளோட சேருது அதுக்கு நாம அவளுக்குதான் நன்றி சொல்லனும்” என்றார் தனலட்சுமி

”ஆமாம் இத்தனை வருஷத்தில எத்தனை பிரச்சனை எத்தனை சண்டை எத்தனை அவமானம் ஆனா இப்ப எல்லாமே ஒரு முடிவுக்கு வந்துடுச்சில்ல” என்றார் அன்பரசு

”இத்தனை சண்டை சச்சரவுகளையும் தாண்டி இப்பவும் நாம ஒண்ணா இருக்கறத நினைச்சா சந்தோஷமாயிருக்கு

அப்படியே நம்ம சகலை செந்தில்வேலனும் நம்மோட சேர்ந்திட்டா இன்னும் நல்லாயிருக்குமே” என்றார் ஆளவந்தான்.

”அவனா அவன் ஒரு ரோஷக்காரனாச்சே முதல் முதல்ல பிரச்சனையை ஆரம்பிச்சவனே அவன் தானே அமைதியா இருந்த நம்மகிட்ட வந்து ஆதிபனை நான்தான் என்னுடைய மாப்பிள்ளையாக்கப் போறேன்னு அவன் சொன்னாதால நாமளும் ஆசைப்பட்டோம் அதனால இத்தனை வருஷமும் சண்டைகளும் சச்சரவுகளும் அதனால பிரிவுகளும் தானே வந்திச்சி” என்றார் செந்தமிழ்நம்பி.

”ஆமாம் அவர் மட்டும் இங்க வரவே கூடாது ஏதோ இப்பதான் நம்ம குடும்பம் ஒண்ணு சேர்ந்திருக்கு அவர் மட்டும் வந்தா திரும்பவும் இந்த குடும்பம் தனித்தனியா பிரிஞ்சிடும்” என்றார் தேவநாயகி

”என்னம்மா உன் புருஷனை பத்தி நீயே இப்படி சொல்ற” என்றார் அலமேலு

”நான் அவரு கூட வாழ்ந்திருக்கேன் அக்கா அவரு எப்படிப்பட்டவர்னு எனக்கு தெரியாதா அதனாலதான் சொல்றேன் அவரு வரவே கூடாது வந்தாலும் பிரச்சனைதான் வருமே தவிர தீர்வு கிடைக்காது”

”அதுக்காக எல்லாரும் ஒண்ணா சேர்ந்து வாழும் போது நீ மட்டும் தனியா இருந்தா எப்படிம்மா” என்றார் பானுமதி

”விடுங்க பெரியம்மா அம்மா சொல்றதும் சரிதான் அப்பா வராம இருக்கறதே மேல்” என்றாள் மலர்.

இவர்கள் பேசுவதை கேட்ட ஆதிராவிற்கு முதலில் குழப்பமும் பின்பு ஒரு திட்டமும் உதயமானது.

அதை நிறைவேற்ற அவளுக்கு வாய்ப்பு தேவைப்பட்டது.

அதனால் அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தாள்.

அவளை பார்த்ததும் அனைவரும் ஒரு நிமிடம் அமைதியாகிவிட்டனர்.

அதைக்கண்ட ஆதிரா அவளே பேச்சை ஆரம்பித்தாள்.

”என்னாச்சி நான் வந்ததும் ஏன் எல்லாரும் அமைதியாயிட்டீங்க”

”அப்படியெல்லாம் இல்லம்மா நாங்க சும்மா கதை பேசிக்கிட்டு இருக்கோம்” என்றார் தாத்தா

”நான் உங்க எல்லார்கிட்டயும் ஒரு விசயம் பேசனும்” என்றாள் ஆதிரா

”சொல்லும்மா என்ன விசயம் இப்பவாவது எங்ககிட்ட பிரச்சனையை சொல்லனும்னு நினைச்சியே சொல்லும்மா” என்றார் தாத்தா

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Latest Books published in Chillzee KiMo

 • AndrilAndril
 • I MyselfI Myself
 • Nin thiruvadi saranamNin thiruvadi saranam
 • Pinai vendum panmaaya kalvanPinai vendum panmaaya kalvan
 • Tholaivil Ni Ninaivil NaanTholaivil Ni Ninaivil Naan
 • Thedum Kan Paarvai ThavikkaThedum Kan Paarvai Thavikka
 • Un nesam en suvasamUn nesam en suvasam
 • Unnai kan thedutheUnnai kan theduthe

Completed Stories
On-going Stories
Add comment

Comments  
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாvijayalakshmi 2018-03-24 11:05
ஆதிபன் பாவம் facepalm
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 12:07
Quoting vijayalakshmi:
ஆதிபன் பாவம் facepalm

:cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாராணி 2018-03-24 11:04
nice story keep rocking :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 12:07
Quoting ராணி:
nice story keep rocking :GL:

:hatsoff: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாAdharvJo 2018-03-23 21:32
Penulti-a vandhachi where is the samadhanam thudhu pura :D :D Ivanga sandai mudinja padu illaye but one of the grandpa's had some grudge over adhira adhu ena anadhu :Q: Avanga Chennai-la seitha sodhapals :Q: Indha po-va appove solli irukakudadha ippadi indha kannir aruvi irundhu irukkuma sollunga adhipan unlce facepalm indha adhira pazhivangura pazhivangura-n pirindhu irundha ellariyum serthu vachi angle mathiri parandhu poitangale....onname puriyala pa waiting to know the suspense...enjoyed reading. Thank you, Sasi ma'am... Best wishes for the finale. Adhira good girl-n tile kuduthu anupunga pavam :P :cool:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 10:58
Quoting AdharvJo:
Penulti-a vandhachi where is the samadhanam thudhu pura :D :D Ivanga sandai mudinja padu illaye but one of the grandpa's had some grudge over adhira adhu ena anadhu :Q: Avanga Chennai-la seitha sodhapals :Q: Indha po-va appove solli irukakudadha ippadi indha kannir aruvi irundhu irukkuma sollunga adhipan unlce facepalm indha adhira pazhivangura pazhivangura-n pirindhu irundha ellariyum serthu vachi angle mathiri parandhu poitangale....onname puriyala pa waiting to know the suspense...enjoyed reading. Thank you, Sasi ma'am... Best wishes for the finale. Adhira good girl-n tile kuduthu anupunga pavam :P :cool:

:thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாmadhumathi9 2018-03-22 19:28
Fantastic epi.waiting to read more.thankx 4 this epi.adutha epiyai padikka migaaavala kaathu kondu irukkirom. :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 10:58
Quoting madhumathi9:
Fantastic epi.waiting to read more.thankx 4 this epi.adutha epiyai padikka migaaavala kaathu kondu irukkirom. :clap:

:cool: :thnkx:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாSaaru 2018-03-22 17:48
Nice update
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 10:59
Quoting Saaru:
Nice update

:grin:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாSAJU 2018-03-22 17:33
superrrrrrrrrr
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - ஆதிபனின் காதலி - 20 - சசிரேகாsasi 2018-03-24 10:59
Quoting SAJU:
superrrrrrrrrr

:clap:
Reply | Reply with quote | Quote
Share your novel

Come join the FUN!

Write @ Chillzee
Go to top