“அம்மா…”
கௌஷிக் போனை தன் காதுக்கு கொடுத்தவாறு அழைத்திட,
“கண்ணா… சொல்லுப்பா…”
“வீட்டுக்கு யாரும்மா வந்தா?.. சங்கரண்ணா போன் போட்டாங்க…”
அவனின் கேள்விக்கு சற்று நேரம் பதில் சொல்லாமல் இருந்த கல்யாணி, ஒரு பெருமூச்சுடன்
“கண்ணா… உன்னைத் தேடி தீபன் வந்தான்ப்பா…” என்றார்…
“தீபனா?...”
தீபன் என்று சொன்னதுமே அவன் எண்ணங்கள் நிற்காது அடுத்து முன்னேற, அவன் தன் மனதால் அதற்கு முட்டுக்கட்டையிட்டபடி,
“என்ன விஷயம்னு சொன்னாராம்மா?...”
“அது….” என அவர் தயங்கிட,
“சொல்லுங்கம்மா… என்ன சொன்னார்?...”
அவரும் அவன் வந்து பேசிவிட்டு போனதை குரல் கம்ம கூற, கௌஷிக்கின் கோபம் தலைக்கேறியது வெகுவாய்…
“கண்ணா… நீ எதும் கோபத்துல பேசிடாதப்பா… அவன் சின்னப்பையன்…”
“நான் பார்த்துக்குறேன்ம்மா…” என்றவனின் குரலிலேயே அவன் கோபத்தை அடக்க முடியாது பல்லைக்கடிப்பது புரிந்தது அவருக்கு…
“கண்ணா… அம்மா சொல்லுறதைக் கேளுப்பா…”
அவர் தன்மையாய் கூறிட, “கவலைப்படாதீங்கம்மா… நீங்க பயப்படுற மாதிரி எதும் நடக்காது…” என்றவன் போனை வைத்திட, அவருக்கு தலை விண் விண் என்று வலிக்க ஆரம்பித்தது…
“கடவுளே இது என்ன புது சோதனை?....” அவரின் மனமானது கூக்குரலிட, கண்கள் மூடி இறைவனை தியானிக்க ஆரம்பித்தார் அவர்…
தன்னையே ஆயுதமாக்க முடிவெடுத்த சாரு, தீபனை நின்று நிதானமாக பார்த்திட்டாள்…
“இதுதான் உன் முடிவா தீபா?...”
“ஆமா…”
“எப்போ என் முடிவையும் நான் சொல்லுறேன்… கேட்டுக்கோ…”
அவளின் குரல் மாற்றத்தினை அவன் கண்கள் இடுங்க கண்டுகொள்கையிலேயே,
“எங்கிட்ட சொல்லாம இனி நீ அவங்களைப் பார்க்க போகக்கூடாது…” என்றாள் அவள் உறுதியுடன்…
“போனா?....”
“தீபா… விளையாடாத…”
“நான் விளையாடலை… சீரியஸா தான் கேட்குறேன்… சொல்லு… போனா என்ன செய்வ?... என்னை அடிப்பியா?... பேசாம போவீயா?... இல்லை வீட்டை விட்டு வெளியே போன்னு சொல்லுவியா?...”
“செத்துடுவேன்….”
அதிர்ந்தே விட்டான் தீபன் சாருவின் அந்த வார்த்தையில்…
“சாரு!!!!!!!!!!!!!!!....”
“நிஜமா தான் சொல்லுறேன் தீபா… செத்துடுவேன்… விளையாட்டுக்கு சொல்லலை…”
அவளின் குரலில் இருந்திட்ட உறுதி அவனை புரட்டி போட்டிட, வேதனையுடன் அவளின் முகம் பார்த்திட்டான் அவன்…
அவளும் நிமிர்ந்து அவனை கோபமும், வேதனையுமாக பார்த்திட, இரண்டடி எடுத்து வைத்தவன், பின் நின்று அவளைப் பார்த்து முறைத்துவிட்டு, வேகமாக தன் கைகளில் இருந்திட்ட போனை தூக்கி தரையில் அடித்தான் வேகமாய்…
சில்லு சில்லாய் அது சிதறி, தெறிக்க, அவள் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்திட, அவன் கோபத்தில் தன் கைகளை மடக்குவது தெரிந்தது அவளுக்கு…
“யார் யாருக்காகவோ, என்னை நீ கட்டிப்போடுறீயா சாரு?...”
“அவங்க யாரோ இல்லை தீபா….”
“வேற யாரு அவங்க…”
“அவங்க…. அவங்க…. அவரோட….”
அவள் கோபத்தில் கூற நினைத்து பின் சுதாரித்து நிற்க,
“சொல்லு யாரு அவங்க நமக்கு?...” என்றான் அவனும் அதே கோபத்தின் தொனியுடன்…
“அம்மா……………………….” என உரக்க கத்தியவள், “அம்மா…. போதுமா?...” என முகம் மூடி அழ ஆரம்பிக்க, விழிகளில் உண்டான நீருடன், அவளருகில் சென்றான் அவன்…
அவள் விரல் பிரித்து அவளின் முகம் பார்த்திட்டவன்,
“அம்மா?.... ஹ்ம்ம்… அவங்களா?...” என விரக்தி மேலோங்கி கூறிவிட்டு
“இப்போ சொல்லுறேன் கேட்டுக்கோ… உனக்கு வேணும்னா அவங்க அம்மாவா இருக்கலாம்… ஆனா எனக்கு நீ தான் அம்மா… வேற யாரையும் அந்த ஸ்தானத்துல நான் பார்க்கவும் மாட்டேன்… நினைக்கவும் மாட்டேன்… ஏன் என்னைப் பெத்தவளே இருந்தாலும் உனக்கு பிறகு தான் அவளும்… புரிஞ்சதா?...”
அவன் ஆணித்தரமாக அடித்துக்கூறிட, அவள் ஊமையாகி நின்றாள் அப்படியே…
“முகம் பார்த்திட காத்திருக்கும் மலராய்… தன்னவனின் வருகையை எதிர்நோக்கி…”
{kunena_discuss:1162}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.