(Reading time: 14 - 28 minutes)

தொடர்கதை - கன்னத்து முத்தமொன்று - 14 - வத்ஸலா

Kannathil muthamondru

தென் ஆப்ரிக்காவில் நடைபெறும் ஒரு நாள் போட்டிகளின் கடைசி நாள் ஆட்டம் அது. இந்த போட்டியில் வென்றால்தான் ஒரு நாள் தொடரை கைப்பற்ற முடியும் என்ற நிலையில் இருந்தது இந்திய அணி. ஐந்து விக்கெட்டுகள் சரிந்திருக்க இன்னும் பத்து ஓவர்களில் நூற்றி ஐம்பது ஓட்டங்கள் எடுக்க வேண்டி இருந்தது.

விளாசிக்கொண்டுதான் இருந்தான் ஹரிஷ். அதைதான் தாங்கிக்கொள்ள முடியாதவனாக நின்றிருந்தான் பரம் அகர்வால். அணியை பொறுத்தவரை பரம் ஹரிஷை விட கொஞ்சம் சீனியர் என்ற போதிலும் வந்த சில நாட்களிலேயே அவனை தாண்டி கடகடவென முன்னேறிக்கொண்டிருந்தான் ஹரிஷ்.

அவன் உள்ளமெங்கும் பொறாமை எனும் கரும் புகை பரவிக்கிடந்தது. ஹரிஷின் படிப்படியான முன்னேற்றம் அவனை கேப்டன் பதவிக்கு கொண்டு சேர்த்துவிடும் என்ற எண்ணமே அவனை உலுக்கிகொண்டிருந்தது.

தென் ஆப்பரிக்க வீரனின் அடுத்த பந்து ஹரிஷின் பேட்டில் பட்டு பறந்தது பௌண்டரியை நோக்கி.

தென் ஆப்ரிக்காவில் நேரம் காலை பதினோரு மணியை தொட்டிருக்க இங்கே சென்னையில் நேரம் மதியம் இரண்டரை மணி. அன்று விடுப்பு என்பதால் மேட்சை பார்த்துக்கொண்டு டி.வி.யின் முன்னால் அமர்ந்திருந்தாள் அனுராதா. வீட்டில் அவளும் கீதாவும் மட்டுமே.

பெரியப்பாவை தவிர மற்றவர்கள் அவளிடம் பேசியே நாட்கள் ஆகி இருக்க, இன்று என்ன தோன்றியதோ அவளருகில் வந்து அமர்ந்தாள் கீதா.

‘ஹரிஷ் விளையாடறானா? என்றாள் மெதுவாக

‘ம்?’ திகைத்து திரும்பினாள் அனுராதா.

அங்கே ஒரு ஓவர் முடிந்து அடுத்த ஓவர் மாற்றம். பொதுவாக ஓவர் மாற்றங்களில் இரண்டு ஆட்டக்காரர்களும் அடுத்து வரும் ஓவர்கள் பற்றி பேசிக்கொள்வது வழக்கமே. ஆனால் பரமின் குணம் தெரிந்ததினால் அவனுடன் அதிகம் பேசுவதில்லை ஹரிஷ்.

இங்கே இவன் கையுறையை கழற்றி சரியாக மாட்டிக்கொண்டிருக்க வெகு இயல்பாக இவன் அருகில் வந்தான் பரம்.

‘பெரிய இவனாடா நீ?’ என்றான் ஹிந்தியில் அதனோடு சேர்த்து உதிர்த்தான் அந்த கெட்ட வார்த்தையையும். ஒரு நொடியில் தலை முதல் கால் வரை கொதித்து போனது ஹரிஷ்க்கு

கிரிக்கெட் மைதானத்தில் இது போல பேசுவது அடிக்கடி நடக்கும் ஒரு விஷயம்தான். நேம் காலிங். பொதுவாக இது இரண்டு எதிர் எதிர் அணி வீரர்களுக்குள்தான்  நடக்கும். ஒருவர் மற்றவரின் கோபத்தை கிளறி கவனத்தை ஆட்டத்திலிருந்து திசை திருப்பி அவர்களை ஆட்டம் இழக்க செய்ய  இது ஒரு குறுக்கு வழியும் கூட.

இது ஹரிஷ் மற்ற அணி வீரர்களிடமிருந்து ஓரிரு முறைகள் சந்தித்த விஷயம் என்பதால் இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லைதான் அவன். ஆனால் இன்று பரம் பேசிய விதத்தில் நிறையவே வன்மம் கலந்திருப்பதை போல் தோன்றியது அவனுக்கு.

அடுத்த பௌலர் பந்து வீச தயாராக பரம் தனது இடத்தை அடைந்து பந்தை சந்திக்க தயாரானான். ஒரு ஆழ்ந்த சுவாசம் எடுத்துக்கொண்டான் ஹரிஷ்.

‘என்னை எதை நோக்கி தூண்டிவிடுகிறான் இவன்?’ கொஞ்சம் யோசித்தது நிதானப்பட்ட மனம்.

பந்துகளை வீணாக்கிக்கொண்டிருந்தான் பரம். சற்றே எரிச்சல் மண்டியது இவனுக்குள் அடுத்த பந்தில் ஓடியிருந்தான் அந்த பக்கம். இப்போது அணியின் வெற்றியே இவனது குறிக்கோள். அடுத்த பந்தை கோபத்திலும் வேகத்திலுமாக சேர்த்து சுழற்றி இருந்தான் ஆறு ரன்களுக்கு.

கேப்டன் முதற்கொண்டு அனைவரும் எழுந்து நின்று இவனுக்கு கைத்தட்ட இன்னுமாக கொதிக்க ஆரம்பித்திருந்தான் பரம். அவனை இந்த பக்கம் விடாமல் ஓவரின் கடைசி பந்தில் ஒரு ஓட்டம் ஓடி விட்டிருந்தான் ஹரிஷ்.

தனது இடத்தை அடைந்து சற்றே திரும்பி பரமை பார்த்தவனுக்குள் எதிராளியின் செய்கையும் உதட்டசைவும் எரிமலையை உருவாக்கியது நிஜம். கண்களை மூடி அப்படியே தன்னை அடக்கிக்கொண்டான் ஹரிஷ்

அடுத்த ஓவர் முழுவதும் ரன் மழை பொழிந்தது ஜோஹானிஸ்பெர்க் நகரத்தில். இவனது ஆத்திரத்தையும் வேகத்தையும் தாங்க முடியாமல் கதற ஆரம்பித்த பந்து பௌண்டரியே தஞ்சமென கிடக்க இந்திய ரசிகர்களால் அரங்கம் அதிர்ந்துக்கொண்டிருக்க பரம் பொறாமை தீயில் வெந்துக்கொண்டிருந்தான்.

இது போன்ற தூண்டதல்களால் சற்றே தடுமாறி ஹரிஷ் தன்னிலை மறந்து ஏதாவது செய்தால், அதாவது இவன் மீது கை வைத்தால் அடுத்து வரும் இரண்டொரு போட்டிகளில் அவன் ஆடுவதற்கு தடை விழும்.

அப்படி வந்தால் அவனது கிரிக்கெட் வாழ்க்கையில் அது ஒரு கரும்புள்ளிதான். கேப்டன் பதவிக்கு செல்வதற்கு கூட அது ஒரு தடையாக மாறும். இப்படியாக போய்க்கொண்டிருந்தன பரமின் மனக்கணக்குகள்.

ஆனால் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் என்ற ஒன்று இல்லையே!!!

ங்கே சென்னையில் பதறிக்கொண்டிருந்தது அனுராதாவின் இதயம். இத்தனை நாட்களாக கிரிக்கெட் விளையாட்டை கவனிப்பவளுக்கு, ஹரிஷோடு பழகுபவளுக்கு அவனது உடல் மொழியை வைத்து அங்கே நடப்பதை புரிந்துக்கொள்வது ஒன்றும் சிரமமாக இருக்கவில்லை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.