(Reading time: 14 - 28 minutes)

‘ஹலோ ஹரிஷ்...’

பல நாட்களுக்கு பிறகு அவனது உயிர் தோழியின் குரல் செவிகளை தொடமுறை குலுங்கி ஓய்ந்தது அவன் உடல். ஒரு நொடி, இரண்டு நொடிகள், மூன்று நொடிகள் மௌனமாய் இருந்தவன் பட்டென துண்டிதிருந்தான் அழைப்பை.

அடுத்து மூன்று டி ட்வென்டி ஆட்டங்கள் மிச்சமிருந்தன. உடல்நிலை காரணமாக இரண்டு ஆட்டங்களிலாவது ஹரிஷ் விளையாட மாட்டான் என்றார்கள்.

அணியின் வீரர்கள் அனைவரும் ஹரிஷுடன் நின்றனர். பரம் மீது ஒழுங்கு நடவடிக்கைகள், மற்றும் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்கள். இனி அவன் இந்திய அணியில் விளையாடுவது கடினம் என்றார்கள்.

ஊடங்கங்களும், வலைதளங்களும் தங்களுக்கு தெரிந்த கதைகளை பேசிக்கொண்டிருக்க அதிலே அங்கங்கே அனுவும் இழுக்கப்பட அவன் அனுவுக்காகத்தான் ஸ்டம்பை நொறுக்கினான் என்று எல்லாரும் பேச  எல்லாவற்றையும் மௌனமாக பார்த்துக்கொண்டிருந்தார் சுவாமிநாதன்.

இங்கே அனுவின் வீட்டில் பெரியம்மாவும், ஷங்கரும் இதை பற்றி அனுவிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை.

திருமண நாளும் நெருங்கிக்கொண்டிருந்தது. ஊரில் இருக்கும் எந்த சொந்தங்களுக்குள் பத்திரிக்கை கொடுக்கக்கூடாது என்பதே பெரியம்மாவின் ஆணையாக இருந்தது.

‘உங்க பொண்ணோட வாழ்க்கை. அவ விருப்பப்படி நடக்கட்டும். ஆனா வீட்டிலே எல்லாரையும் கூப்பிட்டுட்டு அப்புறம் நான் வரலன்னா என் மானம் போயிடும். அதனாலே நீங்களும் அருமை பொண்ணும் போய் இந்த கல்யாணத்தை நடத்திக்கோங்க’ சொல்லி இருந்தார் உறுதியாக.

பெரியப்பாவுக்கும் யாரையும் அழைப்பதில் உடன்பாடு இல்லைதான். வருபவர்கள் நிச்சியம் வாய் மூடி இருக்க போவதில்லை. அங்கே திருமணத்தில் ஒன்று கிடக்க ஒன்றை பேசி அது அனுவிற்கு பிரச்சனையாக முடியும் என்பதே அவர் எண்ணமாக இருந்தது.. அனுவின் நண்பர்களுக்கு மட்டும் அழைப்பிதழ்கள் கொடுக்கப்பட்டன

அதே நேரத்தில் அனுவுக்கு தேவையான எல்லாவற்றையும் தேடித்தேடி வாங்கிக்கொண்டிருந்தார் பெரியப்பா.

‘சந்தோஷமா இருக்கியா அனு?’ பெரியப்பா கேட்க

‘எல்லாம் சரிதான் பெரியப்பா. ஆனா நம்ம வீட்டிலே மட்டும் கல்யாண களையே இல்லையே. இது கல்யாண வீடு மாதிரியே இல்லை’ என்றாள் அனுராதா.

‘இல்லமா. எல்லாரையும் கூப்பிடலாம்தான். வர்றவங்க ஆளுக்கு ஒண்ணு பேசுவாங்க. கல்யாணம் நடக்குறப்போ சந்தோஷமா இருக்குறதை விட அதுக்கு அப்புறம் நீ சந்தோஷமா இருக்கிறதுதான் முக்கியம். அது நீ இருப்பே. கண்டிப்பா இருப்பே’ பெரியப்பா சொன்னார் அவளை சமாதன படுத்தும் விதமாக.

கடைசி டீ ட்வென்டி ஆட்டத்தை முடித்துக்கொண்டு இந்தியா வந்து இறங்கி இருந்தான் ஹரிஷ். இன்னும் இரண்டு நாட்களில் கோவையில் திருமணம்.

வலைத்தளங்கள், ஊடங்கங்கள் என எல்லாவற்றிலும் இவர்கள் திருமணம் பற்றிய செய்திகள் அனுவின் புகைப்படங்களுடன் வந்துக்கொண்டிருக்க பல்வேறு .திசைகளிலிருந்தும் வாழ்த்துக்களும் குவிந்துக்கொண்டிருக்க பெரியம்மாவின் சொந்தங்களும் மெல்ல மெல்ல இதை பற்றி தெரிந்துக்கொள்ள ஆரம்பித்திருந்தனர்.

பல்வேறு கேள்விகளுடன் நிறையவே தொலைப்பேசி அழைப்புகள் பெரியம்மாவுக்கும் பெரியப்பாவுக்கு,ம். ஏதேதோ சொல்லி இருவரும் சமாளித்துக்கொண்டிருந்தனர் என்றாலும் கொதிப்பின் உச்சத்தில்தான் இருந்தார் பெரியம்மா.

ஹரிஷுடன் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தாலும் இதை பற்றி எல்லாம் எதுவும் அவனிடம் சொல்லிக்கொள்ளவில்லை அனுராதா. சொல்லி இருக்க வேண்டுமோ அவள்? சொல்லி இருந்தால் அவன் ஏதும் செய்திருப்பானோ?

மொத்த கோவையையும் கோலாகலமாக மாற்றிக்கொண்டிருந்தார் சுவாமிநாதன். ஏன் ஹரிஷும் கூட சந்தோஷ மேகத்தில்தான் மிதந்துக்கொண்டிருந்தான். அதே நேரத்தில் மனதின் ஓரத்தில் சின்னதாய் ஒரு உறுத்தல்.

‘நடக்குமா எல்லாம் சரியாக நடக்குமா?’ கண்களை மூடிக்கொண்டான் அவன். அவன் நினைவில் நின்றது அந்த முத்தம் தென் ஆப்ரிக்கா போவதற்கு முன்னால் அவள் அவன் கன்னத்தில் அழுத்தமாக கொடுத்த அந்த முத்தம்.

‘எது நடந்த போதும் அவள் என்னவள்’ என ஒரு நம்பிக்கை. அழுத்தமாக ஒரு நம்பிக்கை இருந்தது அவனுக்குள்ளே.

‘பார்த்துக்கலாம் அனும்மா. எது நடந்தாலும் பார்த்துக்கலாம்’ ஏனோ மானசீகமாக சொல்லிக்கொண்டான் அவளிடத்தில்.

மறுநாள் விடிந்திருந்தது. இன்று மாலையில் அவளும்  பெரியப்பாவும் மட்டும் கோவை கிளம்புவதாக இருக்க அப்போது வந்தது அவருக்கு அந்த தொலைப்பேசி அழைப்பு.

வந்திருக்க வேண்டாம் அது.! வந்திருக்கவே வேண்டாம் அது!

 

தொடரும்...

Episode 13

Episode 15

{kunena_discuss:1147}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.