Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
<h3><strong>September 2018 Stars</strong></h3>

September 2018 Stars

 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- கதைகள் (Stories) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- ஃபாரம் (Forum) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --
(Reading time: 11 - 21 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா - 5.0 out of 5 based on 2 votes

தொடர்கதை - உன்னில்  தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையா

Unnil tholainthavan naanadi

நாட்கள் எதற்கும் கவலை படாமல் ஓடியதில், வயோதிகம் பாடாய் படுத்த, குணாவின் தாயும் காலமானார். சற்றே கலங்கித்தான் போனாள் சுந்தரி.  

இத்தனை வருடம் உடன் இருந்த ஓர் உறவு, திடீரென்று ஒரு நாள் இல்லாமல் போனதில் சற்றே மனம் கலங்கினாள். தன் அம்மச்சி இறந்த போது, மனம் உடைந்து போன சுந்தரியை அன்பாய் ஆறுதல் கூறி தேற்றியவள் அவளின் மாமியார். இப்போது அவளின் மறைவிற்கு அவளுக்கு ஆறுதல் கூறியது வள்ளியம்மை மட்டுமே.

எத்தனை ஆசை இருந்தது அந்த ஆத்மாவிற்கு! தன் மூத்த பேத்தியை மணப்பெண்ணாய் காண வேண்டும் என்று. ஒன்றா, இரண்டா எத்தனை வருடங்கள்? அவளுக்கும் வயது ஏறிக்கொண்டே தானே செல்கிறது?

வருபவன் ஜாதகத்தை குறை கூறி, வரதட்சணையாக கேட்ட தொகை அவர்களை மலைக்க வைத்தது.

இந்நிலையில், இங்கு இருந்தால் இவர்கள் தனக்கு திருமணமே முடிக்க மாட்டார்கள். இவர்கள் கையாலாகாதவர்கள் என்று எண்ணலானாள் சந்திரா.

சந்திராவின் திருமணம் தவிர்த்து வேறெதற்கும் குறையில்லை அவர்கள் இல்லத்தில். ஆனால், அந்த நிம்மதிக்கும் ஆயுள் குறைவு தான் என்று அப்போது யாருக்கும் தெரியவில்லை.

எல்லாம் ஓரளவு சீராகத்தான் சென்றது, திடீரென ஒரு நாள் சின்னையா கண் கலங்கி, குணாவை சக்கர நாற்காலியில் கொண்டு வரும் வரை.

ஒரு கை, ஒரு கால் இழுத்து, வாய் கோணி, தன் தந்தையை அந்த நிலையில் ராசாத்தியால் காண இயலவில்லை. அலறினாள் அப்பா!”என்று. திடீரென்று கை கால் இழுத்து வாய் கோண, மருத்துவ மனையில் பரிசோதனை செய்து  பக்கவாதம் என்று அறியவந்த போது உடைந்து போனான் சின்னையா

நோய் என்ன நல்லவர், கெட்டவர் என்று அலசி ஆராய்ந்த பின்பா வருகிறது? அவ்வாறு இருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அனைவரும் நோய்க்கு அஞ்சியாவது நல்லவராக இருக்க முயற்சி செய்வார்கள் தானே!

ஓடி ஆடி தன் குடும்பத்திற்காக ஓயாமல் உழைத்த குணா, வீட்டில் முடக்கப்பட, வாழ்வின் ஆதாரம் ஆட்டம் கண்டு விடுமோ? என்று அஞ்சினாள் சுந்தரி.

சின்னையாவோ, அவன் பணியில் இருந்த போது கொடுத்த அதே ஊதியத்தை கொடுத்ததோடு, அவனின் மருத்துவ செலவையும் பார்த்து கொண்டான்.

இதை ஏற்றுக்கொள்ள முடியாத சுந்தரி பங்களாவிற்கு வேலைக்கு வந்தே தீருவேன்என்று அடம் பிடித்து சேர்ந்தாள்.

சோர்வுற்ற ராசாத்தியை தந்தையின் பார்வை தான் திடம் கொள்ள செய்தது.

தந்தையின் அறிவுரை ஒவ்வொன்றும் அவளை உடைந்து விடாமல் எழ செய்ய, மீண்டும் கல்வியில் கவனம் செலுத்தினாள்.அப்போது அவள் இரண்டாம் ஆண்டு இறுதி தேர்வை எதிர்நோக்கி இருந்தாள்.

அங்கே சின்னையாவின் மகனும், அந்த பட்டு ரோஜாவும் மேற்படிப்பை முடித்து சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு ஏற்பாடு செய்திருப்பதாய் சுந்தரி குணாவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

கம்பெனி தொடங்கி ஒரு வருடம் சிறப்பாக சென்றிருக்க, தன் வெளிநாட்டு தோழியின் திருமணத்திற்கு சின்னையாவின் மகனும், அந்த பட்டு ரோஜாவும் வெளிநாடு செல்ல வேண்டி இருந்தது. சென்ற இடத்தில் இன்னது நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை என்றாலும், செய்தி என்னவோ பட்டு ரோஜா, எவனோ ஒருவனால் சுடப்பட்டு அந்த இடத்திலேயே இறந்து போனாள் என்பது தான்!

இங்கு குணாவின் வாழ்வில் தான் சூறாவளி என்றால், அவன் முதலாளி வீட்டில் பூகம்பமே வந்திருந்தது. பட்டு ரோஜாவை பிணமாய் கொண்டு வந்த சின்னையாவின் மகன் பயித்தியம் போல் நடந்து கொள்வதாக சொன்னாள் சுந்தரி.

தினமும் குடித்து விட்டு, போதை பொருளுக்கு அடிமையாகி கொண்டிருப்பதாக சொன்னாள் அவள்.

அவனுக்கும் அந்த பெண்ணிற்கும் திருமணம் செய்யபோவதாய் வள்ளியம்மை தன்னிடம் தெரிவித்ததை குணாவிடம் அறிவித்தாள் சுந்தரி.

சின்னையாவின் குடும்ப நிலை அறிந்து பெரிதும் கலங்கினான் குணா. தான்னால் என்ன செய்ய முடியும்? என்ற வேதனை, கட்டிய மனைவி, பிள்ளைகளை எவ்வாறு கரை சேர்க்க போகிறோம்? என்ற கவலை எட்டிப்பார்க்க, முதல் முறை, தவறு செய்து விட்டோமோ? சுந்தரி சொன்னது போல் பெரியவளுக்கும் ராசாத்திக்கும் 16, 17 வயதில் திருமணம் முடித்திருக்கலாமோ? என்று எண்ணினான் குணா.

நாட்களும் உருண்டோட, குணாவின் நிலையில் பெரிதாய் ஏதும் முன்னேற்றம் வந்ததாக தெரியவில்லை. இப்படியே வாழ்வை ஏற்று கொள்ள சுந்தரி தன் பிள்ளைகளுக்கு அறிவுறுத்த, சந்திராவால் இதனை ஜீரணிக்க முடியவில்லை. ஏற்கனவே தன் பெற்றோர் கையாலாகாதவர்கள் என்ற அவளின் எண்ணம் மேலும் மேலும் வலுபெற்றது.

About the Author

Prama Subbiah

Completed Stories
On-going Stories
Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாThenmozhi 2018-04-19 09:22
andrum indrum meet seira idam super (y)

appothu enna nadanthathu enbathu inum curious-aga ituku :-) Kathirku eppadi sari anathu?
Avaroda sister-ku unmaiyil enna aachu pondra kelvigal vanthu arvathai kodukkuthu.

Sundari ena ananga?

Waiting to read all about it (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாmadhumathi9 2018-04-15 18:43
:clap: super epi.waiting to read more. :thnkx: 4 this epi (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாSaaru 2018-04-15 16:25
Nice update...
Suspence udachachi
Kathir epadi marinan Guna ku ena achi
Chandra ena ana...
Waiting fr fb
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாAdharvJo 2018-04-15 15:00
Interesting update ma'am :clap: :clap: OK finally we got to know the connection Btw the fb, kadhir baby moon, but gunna uncle-k ena anadhu??? Indha paati seriyana villiya irukangale facepalm good Vicky ippadi attack panalana engalaukkm unmai enan therindhu irukadhu :P rekha oda feelings understandable :D kathir n ila en ippadi irukangale?? However Mr kadhir veer k kodukkum confidence is simply super :dance: but how did he turn out like an spoiled brat steam innum neriya suspense appadiye irukungale INI ena agumn therindhu kola waiting ma'am :yes: thank you!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாTamilthendral 2018-04-15 14:00
Finally secret-i reveal seithutteenga :-)
Kathir maarinathu eppadi :Q: Ila thaniya irukka karanam enna :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - உன்னில் தொலைந்தவன் நானடி – 13 - பிரேமா சுப்பையாSAJU 2018-04-15 13:27
nice ud sis
Reply | Reply with quote | Quote
# UTN by PramaSahithyaraj 2018-04-15 11:23
wow unexpected connection. Very interesting. Ahuthan Kathir ippadi adakkama irukkaro. Superb.
Reply | Reply with quote | Quote

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

சுடச் சுடச்...!

Today's Specials

 

Poetry

Short stories

Sarvathopathra vyoogam

Jokes

Kathal kathalitha kathaliyai kathalikkum

Chillzee Stars

Chillzee Contests

Chillzee Featured

Announcements

Chillzee Forum

அதிகம் வாசித்தவை

 

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Episodes

Stories update schedule

  M Tu W Th F Sa  Su 

Mor

AN

Eve
08
KVJK

PVOVN

NiNi
09
MINN

PPPP

MAMN
10
PMNa

EMPM

MUN
11
EEU01

KaNe

KPY
12
TAEP

UVME

Enn
13
VVUK

NKU

Tha
14
KI

-

-


Mor

AN

Eve
15
KVJK

ST

NiNi
16
MMSV

PPPP

MAMN
17
GM

EMPM

MUN
18
ISAK

KaNe

KPY
19
-

Ame

-
20
VVUK

NKU

Tha
21
KI

-

-

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Go to top