(Reading time: 16 - 31 minutes)

தொடர்கதை - இரு துருவங்கள் - 01 - மித்ரா

Iru thuruvangal

ண்டபமே அதிர்ந்து நின்றது அவனது வார்த்தையில், இந்த கல்யாணம் நடக்கும் ஆனால், “ என்னை கல்யாணம் பண்ணிக்க போறது நித்யா இல்ல, அனந்திதா !! “.

“ஐயோ !! என்ன ஹரிஷ் சொல்ற என்று அழ அயத்தமானால் அவன் அன்னை சுமதி.

“ என்ன நடக்குது இங்க? என்ன நினைச்சிட்டு இருக்கான் உங்க பையன் என்னோட இரண்டாவது பெண்ணை மணமேடை வரை வரவைச்சிட்டு. இப்போ என்னோட முதல் பெண்ணை கல்யாணம் பண்ணிகறனு சொன்னா என்ன அர்த்தம்? கல்யாணம் னா என்ன விளையாட்ட போச்சா? என தனது கோபத்தை அவனை பெற்றவர்களிடம் காட்டி கொண்டிருந்தார், அவ்விருபெண்களின் தந்தை ராம்ப்ரகாஷ்.

இப்பொழுது அதற்கான எந்த பதிலும் தன்னை பெற்றவர்களிடம் இல்லை என தெரிந்து அவரை தன் வார்த்தையால் கட்டுபடுத்திவிட்டான்.

“இங்க பாருங்க உங்க குடும்பத்தோட மான மரியாதை போக வேணாம் னா, நீங்க இந்த கல்யாணத்துக்கு ஒத்துகிட்டே ஆகணும், என்ன பொண்ணு மாறான மட்டும் தா கல்யாணம் நடக்கும். இல்லனா சொல்லிடுங்க, நாங்க இப்பவே கிளம்பறோம் !! “, என்ற கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கூறி கொண்டிருந்தவனை அதிர்ச்சியில் பார்த்து கொன்டிருந்தாள் கண்ணில் நீர் வழிய நித்யா.

அவளை அணைத்து கொண்டு அவள் தாய் மீனா அழுந்தபடி மணமகள் அறைக்கு அழைத்து சென்றார். அங்கே அதிர்ச்சியில் உறைந்து தரையில் விழுந்து கிடந்த அனந்திதாவை கண்டவுடன், இருவரும் அதிர்ந்து அவளை எழுப்ப முயன்றனர்.

“ அனந்திதா !! அக்கா என இருவரின் குரலில் அனைவரும் மணமகள் அறையிற்கு வந்தனர், அவன் ஒருவனைத்தவிர.

இப்போ என்ன பண்றது என்று அனைவரும் குழப்பத்தில் இருந்தனர். அனந்திதாவே இந்த திருமணத்திற்கு வந்து அதுவும் 1 மணிநேரமே ஆயிற்று, ஏன் இப்பொழுது தான் அவளை அவன் வீட்டினரே பார்க்கின்றனர். அப்படி இருக்கும் போது அப்படி என்னவாயிற்று அதுவும் விவாகரத்து ஆன அனந்திதா வை திருமணம் செய்ய வற்புறுத்துகிறான் என்று புரியாமல்.

அனந்திதா வின் தாய்மாமன் அண்ணாமலை, “ இப்படியே எல்லாரும் யோசிச்சிட்டு இருக்கறதல எந்த பிரயோஜனமும் இல்ல, இன்னும் 1 மணி நேரத்துல எல்லாரும் வந்துடுவாங்க மண்டபத்துக்கு. எல்லார் முன்னாடியும் அவமானபடறதுக்கு முன்னாடி ஒரு முடிவு எடுக்கலாம்” என்றார்.

இரு வீட்டினரும் எந்த விதமான யோசிக்கும் நிலைமையில் இல்லை என்று அறிந்தார். நேரே அனந்திதா விடம் வந்தவர் “ உனக்கு ஹரிஷை தெரியுமா என்று கேட்டார்? “

அதில் அதிர்ந்தவள் ஒன்றும் பேசாமல் அழுகையில் இருக்கவும். அவள் தந்தை, “அவ இப்போதான மண்டபத்துக்கே வந்தா, அதுவும் இந்தியாவே 3 வருஷத்துக்கு அப்பறம் தா வந்து இருக்கா, அப்படி இருக்கும் போது இது என்ன கேள்வி மலை? “

“அது மட்டுமா இன்னைக்கு தா அவனையே பாக்கற அப்படி இருக்கும் போது அதற்கான வாய்ப்பில்லை “ இப்போ என்ன பண்ணலாம் ரெண்டு குடும்பத்தோட மானமே போற நிலைமையில் இருக்கு அதுக்கு என்ன பண்ணலாம் அதுக்கு எதாவது வழி சொல்லு?  இப்போ ", விரக்தியாக.

“ ஒரே வழிதான் இருக்கு !! இவ்வளவு நேரம் அமைதியா இருந்த சிதம்பரம் , ஹரிஷின் தந்தை.

என்ன என்பது போல எல்லாரது பார்வையும் அவர் மேலே இருப்பதை அறிந்து, “ ஹரிஷ்கும் அனந்திதாக்கும் இன்னும் ஒரு மணி நேரத்துல கல்யாணம் நடக்கனும் “, என்றார் அவர்.

எல்லாரும் ஒரு நொடி அதிர்ந்து “ஏன்? “ என்றனர். “எனக்கு என் மகனை நல்லா தெரியும், அவன் ஒரு தடவ முடிவு பண்ணிட்டன அத மாத்திக்கமாட்டன். அவன் நித்யாவே கல்யாணம் பண்ணிக்கனும்னு இருந்தது நாங்க பண்ண முடிவால தா அவன் விருப்பபட்டு ஒத்துக்கல, ஆன இப்போ அனந்திதாவையே கல்யாணம் பண்ணிகறனு சொல்றான, அதுவும் இவ்ளோ தீவிரம, அப்போ ஏதோ மறைக்கிறான். இப்போ முடியாதுன்னு சொன்னா கூட அவன் போய்டுவான் ஆன உங்க பொண்ணுக்கு வேற கல்யாணம் பண்ண முடியாம தொந்தரவு கொடுத்துட்டு இருப்பான். என்னடா என்னுடைய மகனை பத்தி தப்பா சொல்றனு நீங்க நினைக்கலாம். அவனுக்கு பிடிவாதம் அதிகம் அவன் நினைச்சத சாதிக்கறவன். அதனால தா இந்த முடிவ சொல்றேன். உங்கள கட்டாயபடுத்துல. ஆன இத தவிர வேற வழி இல்லை. பாதி கிணற தாண்டிடோம், இப்போ கல்யாணம் நின்னுச்சு னா ரெண்டு குடும்பமும் நிறைய ப்ராபளம் face பண்ண வேண்டி இருக்கும். உங்க வீட்ல இன்னும் ஒரு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும், எங்க வீட்ல அவனோட தம்பிக்கும் தங்கச்சிக்கும் பண்ணனும். எல்லார் வாழ்க்கையும் இந்த கல்யாணத்துல தா இருக்கு”, என்று மிக நீளமான விளக்கத்தை அளித்தார் .

அவர் கூறிய பிறகு எல்லாரும் அவர் விளக்கத்தின் உண்மையை அறிந்தனர்.

ராம்ப்ரகாஷ் தன் மனைவியை பார்த்தார் அவர் ஒத்து கொள்வது போல தோன்றியது. அதை போலவே சிதம்பரமும் சுமதியை பார்த்தார் அவருக்கும் இது சரி என்றே பட்டது.

அதன் பின் அனந்திதா மற்றும் நித்யா விடம் பேச, அவர்களது வீட்டினரை தவிர எல்லாரும் வெளியே வந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.