(Reading time: 16 - 31 minutes)

இப்போ நித்யாக்கு கல்யாணம் னு சொன்னதல தா அவ இந்தியாவே வந்தா. இப்போ சொல்லுங்க சம்பந்தி அவ அந்த பையனோட ஒரு நாள் கூட வாழல. அப்படி இருக்கும் போது நீங்க இப்படி நினைக்கறது கஷ்டமா இருக்கு. நாங்க சொல்றது உங்களால நம்ப முடியலன வேற யாருகிட்ட வேணுமனாலும் கேளுங்க.” என்று கூறினார்.

இதைக் கேட்டவுடன் அனைவரும்’ ஒரு நிமிடம் அதிர்ந்தனர். ஹரிஷ் மட்டும், அனந்திதா ஏதோ ஒன்றை, அவள் எல்லாரிடமும் மறைத்திருக்கிறாள் என்று 1௦௦% நம்பினான்.

“சுமதி உங்ககிட்ட பேசினதுக்கு எங்கள மன்னிச்சிடுங்க, எங்களுக்கு எதுவும் தெரியாது இது பற்றி எல்லாம்” என்றார்.

பிறகு ஹரிஷின் அன்னையும் மன்னிப்பை வேண்டினார். பிறகு, ”அனந்திதாவை திரும்ப கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்கலையா?” என்றார்.

அதற்கு அண்ணாமலை, “ அவ இங்க இருந்து போகும் போது எனக்கு கல்யாணம் அப்படி னு யாராவது வீட்ல பேச்சு எடுத்திங்கனா, நான் இந்தியா திரும்ப வர மாட்டேன். நீங்க யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி உங்ககிட்ட இருந்து விலகிடுவேன்னு சொல்லிட்டு தான் flight-ஐ போர்டு பண்ணா. அதுக்கு பயந்துட்டே நாங்க யாரும் எடுக்காம இருந்தோம். எப்படியும் இந்த கல்யாணத்துக்கு வர வைச்சு அவளுக்கு கல்யாணம் பண்ணிடலாம்னு இருந்தோம். பையன் கூட பார்த்துட்டோம். ஆனா இப்போ இப்படி கல்யாணம் ஆயிடுச்சி” , என்றார்.

இவ்வாறு பேசி கொண்டுயிருப்பவர்களைக் கேட்டுக்கொண்டிருந்தவனின் கைபேசி அழைத்தது. அதை எடுக்க சென்றவன் தன்னுடைய வேலையில் முழ்கினான். அவன் சென்ற பிறகு சில முக்கியமான விசயங்களை பேசி அனந்திதாவின் அத்தை, மாமா கிளம்பும் போது வந்தான். அவர்கள் அவனிடம் கூறி விட்டு விடைபெற்றனர். தன்னுடைய பெற்றோர் தன் மீது கோவமாக இருப்பதை அறிந்தவன் அவர்கள் இருவரிடமும், “என்னை நம்புங்கள், இப்போ என்னால எதுவும் சொல்ல முடியாது, ஆனா எல்லாம் உங்களுக்கு சீக்கிரம் சொல்லுவேன். இப்போ நீங்க, உங்கள் மருமகளாக அனந்திதாவை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள் உங்களுடைய மகனின் சந்தோசத்திற்காக !! என்றான். “ நான் போய் ரெஸ்ட் எடுக்கிறேன், அவ தூங்கிட்டு இருப்பா ஜெட்லாக் வேற. நீங்களும் ரெஸ்ட் எடுங்க “, என்று கூறி சென்றான்.

அவன் சென்றபிறகு பிரவின், “ அண்ணா எதையோ மறைக்கிறாங்க டாட், அனா அவங்க அண்ணி மேல ரொம்ப பாசமா இருப்பாங்க போல, நாம கூட பேசிட்டு இருந்தாலும் அவங்க என்ன பண்ணுவாங்கனு சொல்றாரு !!” எப்போ தான் இதுக்கு விடைகிடைக்குமோ என்றபடி சென்றவன். “அம்மா!! மதுவ கூப்பிட போகனுமா? “ என்றான். அவர் கணவனை பார்க்க. அவரோ “ மது நித்யா கூட இருக்கட்டும் நாளைக்கு அவங்க அப்பா அம்மா கூட வரட்டும். போய் மத்த வேலைய பாருங்க”. என்றார். அவர் பின்னே சென்ற சுமதி, “என்ன மன்னிச்சிடுங்க நான் அனந்திதாவ பத்தி அப்படி சொல்லிருக்க கூடாது”. என்றார்.

“உன்னோட பையன் மேலே போய், அவள விட்டுடு எதுக்கு கீழே அவ்வளவு வேகமாக வந்தான் தெரியுமா? நீ ஆரத்தி எடுக்கும் போது உன் முகத்தில இருந்த வெறுப்ப பார்த்துதான். அவன் கீழே வந்தது உனக்கு புரிய வைக்கதான், அவன் பேசனது எல்லாம். இதுதான் கடைசி தடவையா இருக்கணும் இனிமேல் அனந்திதா நம்ம பொண்ணு அந்த பொண்ண கஷ்ட படற மாதிரி எதுவும் பண்ண கூடாது, புரிஞ்சதா? “, என்றார். பிறகு ஏதோ யோசித்தவாறு, “சாயந்திரம் ஜோசியர் பார்க்க போறேன் நைட் நடக்க வேண்டியதற்கு நேரம் பார்க்கணும், இப்போ போய் கொஞ்சம் தூங்கு”, என்றவர் தூங்க போனார். அவரின் மனையாளும் அனைத்தும் நன்றாக நடந்தால் சரி என்று நினைத்து அவரும் ஓய்வு எடுக்க சென்றார்.

மேலே தன் அறைக்கு வந்தவன், அவளை பார்த்து மெய்மறந்தான். 5 அடி உயரம் தான் இருப்பாள், கோதுமை நிறம் களையான முகம், சிறிது எடை கூடி இருந்தது, அதனால் இன்னும் அவள் அழகு கூடியதே தவிர குறையவில்லை.அந்த அமைதியான முகத்தில் சிறிது வாட்டம் இருந்தாலும் ஒரு நிம்மதி அடைந்த திருப்தி இருந்தது அது எதனால் என்று நன்கு அறிவான். அவள் மேனியில் தழுவியிருந்த அந்த பிங்க் நிற புடவை அவள் அழகே மேலும் மேலும் பார்க்க தோன்றியது.

இதற்குமேல் முடியாமல், அவன் குளியலறைக்குள் நுழைந்து, குளித்து விட்டு அவன் படுக்கைக்கு வந்தவன், அவள் இருந்த கோலத்தைப் பார்த்து சிரித்தான். அவள் எப்போழுதும் போல ஒரு தலையணையைக் கட்டிபிடித்துக் கொண்டு உறங்கிக் கொன்டிருந்தாள். அவள் அருகில் சென்றவன் எந்த விதமான தயக்கமும் இன்றி அவளது கையிலிருந்த தலையணையை எடுத்துவிட்டு, அவளை தன் மார்பில் படுக்க வைத்து அவனை அணைத்தவாறு தூங்க தொடங்கினான். அவன் தலையணையை எடுத்தவுடன் முழித்தவள், அவன் என்ன செய்கிறான் என்று தெரிந்துகொள்ள அவள் கண்ணை திறக்காமல் இருந்தாள். அவன் சைகையில் அவளுக்கு கண்ணீர் வர இருந்தது. அதைக் கட்டுபடுத்திகொண்டுக் கொண்டு அவன் மார்பில் மேலும் ஒன்றினாள்.

அதை அறிந்தவன், அவன் நெற்றியில் திருமணத்திற்கு பிறகு மனைவி என்று உரிமையில் தன் முதல் முத்திரையைப் பதித்தான். பிறகு தன்னுடைய உணர்சிகளை மேலும் கட்டுபடுத்திக் கொண்டு தூங்கத் தொடங்கினான். இருவர் மனநிலையும் தங்களது இருப்பிடத்திற்கு வந்த நிம்மதியில், ஆழ்ந்த உறக்கத்தைத் தழுவினர்.

இருப்பினும் அவர்கள் இருவரும் எழுந்தப்பின் எந்தவிதமாக தங்களை மற்றவர் முன் எவ்வாறு ஏமாற்றுக்கிறார்கள் என்பதை அடுத்தப் பகுதியில் காண்போம். இவ்வாறு இரு துருவங்களாக இருப்பவர்களின் கடந்த காலத்தில் என்ன நடந்தது. இவர்களின் இப்போதைய திருமண வாழ்கையின் டாம் அண்ட் ஜெர்ரி சண்டைகளின் சுவாரசியங்களையும் கலந்து இக்கதையின் வழியாக அடுத்த அத்தியாயத்தில் அறியலாம்.

தொடரும்...

Episode # 02

{kunena_discuss:1192}

The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.. All the copyright content at chillzee.in are protected by national and international laws & regulations. We are against plagiarism! If you find our site's content copied in any other website or being broadcasted in audio / video format, we request you to let us know at This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it..
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.