(Reading time: 16 - 31 minutes)

அதன்பிறகு அனைத்தும் மிகவேகமாக நடந்தேறியது. ஐயர் மந்திரங்களை கூற ஹரிஷும் அனந்திதாவும் மணமேடையில் அமர்ந்திருந்தனர் இரு வேறு மனநிலைகளில்.

ஹரிஷ், தன் அருகில் இருந்தவளின் அருகாமையை ரசித்தவன். பின் எதிலோ வெற்றி பெற்ற சந்தோசத்தில் திளைத்தான். “ பார்த்தியாடி உலகத்துல நீ எங்க இருந்தாலும், நீ எனக்கு சொந்தமாவதை தடுக்க யாராலும் முடியாது. உன்னால கூட இத தடுக்க முடியல !! உன்ன இப்படி கார்னர் பண்றது எனக்கே புடிக்கல. உன்ன மறந்துட்டு ஒரு வாழ்கையை அமைக்கலாம்னு எங்க அப்பா அம்மாக்காக தா ஒத்துகிட்டேன். ஆனா நீ என் முன்னாடி வராம இருந்திருந்தா இந்த கல்யாணம் எந்த பிரச்சினையும் இல்லாம உன் தங்கச்சி கூட நடந்திருக்கும். ஆனா நீ எனக்கு ஆனவனு கடவுள் எழுதிட்டாரு போல நீயே என் கண்முன்னாடி வந்துட்ட !! இனிமேல் உன்னை என்ன விட்டுடு போக விடமாட்டேன்டி “, என்றான் மனதில் பிடிவாதமாக.

அவளோ, “கடவுளே !! ஏன் இப்படி சோதிக்கற, என்னால இவனை எந்த காரணத்தாலயும் விலக்கி வைக்கவே முடியாதே !! இவனை பத்தி எல்லாம் தெரிஞ்சும் இந்த திமிரு புடிச்சவன் கிட்டயே திரும்ப திரும்ப கொண்டு வந்து விடற !! இந்த முறை அவன எந்த காரணத்தகொண்டும்  ஜெயிக்கவைக்கமாட்டேன். பார்க்கலாம் டா நீயா ? நானா? னு “, என்று கொதித்து போயிருந்தாள்.

அப்பொழுது ஐயர், “ கெட்டிமேளம்!! கெட்டிமேளம்!! னு என்று கூறி அவனிடம் திருமாங்கல்யத்தை தந்தார். அதை வாங்கியவன் அவள் அருகில் வந்து அவள் கழுத்தில் கட்டியவன் அவள் கண்களை பார்த்தான். அவன் பார்வையில் என்ன இருந்ததோ அதில் ஒரு நிமிடம் மயங்கியவள். பின் தன்னை இறுக்கமாக வைத்து கொண்டாள். அதை அறிந்தவன் அவளை சீண்ட எண்ணி, மூன்றாவது முடிச்சு போட வந்த அவனது தங்கையை விலக்கி அவனே மூன்று முடிச்சுகளையும் போட்டு அவளைத் தன்னவள் ஆக்கிகொண்டான்.”

 அவனை முறைத்தவள் எல்லாரும் தங்களை பார்ப்பதனால் தன் உணர்ச்சிகளை அடக்க முயன்றாள், அதை அறிந்து, அவன் ஐயர் தன்னிடம் தந்த குங்குமத்தை அவள் நெற்றி வடுகில் இட்டவன், அவளைப் பார்த்து கண்ணடித்தவன். ‘ உன்னை என்னவள் ஆகிட்டேன் டி இனிமேல் என்னை விட்டு போக விட மாட்டேன்டி` என்றான். “ பார்க்கலாம் டா உன்னால எப்பவும் என்னை நெருங்கவிடாத மாதிரி பண்றான் டா “ என்றாள் பதிலாக.

அதையும் பார்க்கதான போறேன் என்று மனதில் நினைத்து, “life will be so excited from today onwards “ என்று கூறினான். அவளோ இமைக்க மறந்து என்னால இப்போ வரைக்கும் இவனை புரிஞ்சிக்கவே முடியலயே என்று நினைத்து அவனை எப்படி எதிர்கொள்வது என யோசிக்க ஆரம்பித்தாள்.

திருமணம் நல்ல படியாக நடந்தேறினாலும் அதனால் ஏற்படும் விளைவுகளை இரு குடும்பத்தினரும் நன்கு அறிந்திருந்தனர். இனிமேலும் இவற்றை எல்லாம் கண்கொண்டு பார்க்க முடியாமல் தன் தாயிடம் வந்தாள் நித்யா. “அம்மா !! என்னால இங்க இருக்க முடியல மா! என்னைய வீட்ல கொண்டு போய் விட சொல்லுங்க மா ! என்றாள்.” அவள் நிலை அறிந்தும் என்ன செய்வது இங்கே அனைவரும் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதால், தவித்து கொண்டு இருந்தவரின் அருகில் வந்த சுமதி, இங்க பாருங்க சம்பந்தி! நீங்க தப்ப நினைக்கலனா, நம்ம மதுவோட அனுப்பி விடலாம் இதுக்கு மேல நித்யாவுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்” என்றார். மீனாவின் மனதினே அறிந்தவராக.

“ ரொம்ப நன்றி சம்பந்தியம்மா !! எப்படி அனுப்பறது? வண்டி இருக்கானு தெரியலயே?, என்றார்.

“அது ஒன்னும் பிரச்சனை இல்லை ஆண்டி, நான் நித்யா வை கூட்டிட்டி போகிறேன்! “, என்றாள் ஹரிஷின் தங்கை மதுமிதா. அவர்கள் இவர்களையும் பத்திரமாக போகசொல்லி அனுப்பினர் இரு தாயார்களும். அப்போது அங்கு வந்த பிரவீன், எங்கே அனுப்பறிங்க இரண்டு பேரையும்? என்றான் ஹரிஷின் தம்பி.

சுமதி அதற்குள், “ அவங்க ரெண்டு பேரும் நித்யா வீட்டிற்கு அனுப்பிட்டேன்” என்றார். அதைப் புரிந்து கொண்டவனாக கல்யாண வேலை பார்க்க சென்றான். ஹரிஷ் மற்றும் அனந்திதா திருமணத்தால் நடந்த குழப்பங்களால், இவர்கள் இருவரின் பெற்றோர்களும் தங்களது உறவினர்களிடம் மணபெண் மாறியதற்கு அவர்களுக்கு தகுந்த மாதிரி சமாளித்து கொண்டிருந்தனர்.

இதற்கு காரணமானவனோ, கூலாக அனைவரிடமும் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தான். அனந்திதாவோ ஒரு பிளாஸ்டிக் சிரிப்பை முகத்தில் ஒட்டி வைத்து கொண்டு அனைவருக்கும் காட்சி அளித்தாள். எங்கே தனது கோவத்தை காட்டிவிடுவோமோ !!, என்ற பயமும் அவளிடம் இருந்தது.

அனைத்து சம்பிரதாயங்களும் முடிந்து, அனைவரும் மண்டபத்தில் இருந்து வெளியேறி ஹரிஷின் வீட்டிற்கு செல்ல அயத்தமாயினர். மாப்பிள்ளை பெண்ணிடம் சொல்லிக் கொண்டு செல்ல வந்தனர் அனந்திதாவின் பெற்றோர்கள். அவர்கள் தன்னிடம் தயங்குவதை அறிந்த ஹரிஷ், “எனக்கு தெரியும் உங்களுக்கு என்மேல ரொம்ப கோவம் இருக்கு என்று, ஆனால் நான் ஏன் இவ்வளவு பிடிவாதமா இருந்தேன்னு நீங்க சீக்கிரம் புரிஞ்சிப்பிங்க !! நான் அனந்திதாவை நல்லா பார்த்துப்பேன் நீங்க கவலைபடாதிங்க !! என்றவன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.