(Reading time: 20 - 39 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 09 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

லையில் கை வைத்து அமர்ந்திருந்த சூர்யாவை பார்த்த கலைமதி  "அத்தான் என்ன ஆச்சு?", என்று பதறினாள்.

"என்ன ஆச்சா? இனி எப்ப ஆக? இவளுக்கு எப்ப விசயம் புரிஞ்சு? ஹ்ம்ம். விளங்கிரும்", என்று நினைத்து கொண்டு  "ஒன்னும் ஆகல டா. சும்மா தான்", என்று அவளை பார்த்து சிரித்தான்.

"இல்ல நீங்க பொய் சொல்றீங்க? என்னது தெரியாதான்னு கேட்டீங்க? காவ்யா ஏன் உங்க கிட்ட கேக்க சொன்னா?", என்று கலக்கமான குரலில் கேட்டாள் கலைமதி.

அவள் கையை பிடித்து இழுத்து அவன் அருகில் அமர செய்தவன் "கலை, இப்ப எதுக்கு உன் முகம் சோகமா மாறுது?", என்று கனிவுடன் கேட்டான்.

"நீங்க ஏதோ கேட்டீங்கள்ல? எனக்கு அது தெரியலைனு சொன்னா கோப படுவீங்களா? நீங்க பேசலைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும் அத்தான்"

"லூசு. அப்படி எல்லாம் இல்லை மா"

"பொய் சொல்றீங்க. இப்ப கூட கோபமா இருக்கீங்க. அதனால தான் என்கிட்ட ஒழுங்கா பேச மாட்டுக்கீங்க. என்ன கேக்க வந்தீங்கன்னும் சொல்ல மாட்டுக்கீங்க?"

"உன்கிட்ட பேசாம நான் யார் கிட்ட பேச கலை? நான் கேக்க வந்தது கல்யாணம் அப்புறம் புருசனும் பொண்டாட்டியும் வாழ்ற வாழ்க்கையை பத்தி. அதை பத்தி உனக்கு ஒண்ணுமே தெரியாதா?"

"அதை பத்தி யோசிக்கிறது தப்புனு தெரியும். ஒரு பொண்ணும், பையனும் பக்கத்துல இருந்தாலே தப்புனு எங்க சித்தி சொன்னதுல புரிஞ்சிருக்கேன். ஆனா கல்யாணம் ஆனா அது சரினு தெரியும்", என்று முகத்தில் சிறு சிவப்போடு  சொன்னவள் "படத்துல கிஸ் பண்றது, கட்டி பிடிக்கிறது எல்லாம் பாத்துருக்கேன். அது பாக்கும் போது என்னவோ போல இருக்கும். ஆனா சித்தி டிவி பாக்க விட மாட்டாங்க. அதனால அதுவும் அதிகம் தெரியாது. அப்புறம்  குழந்தை பிறக்குறதை பத்தி ஏதாவது நம்ம ஊர்ல பேசுவாங்க. புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் இடையில என்ன நடக்கும்னு தெரியாது. ஆனா எதுவோ ஒன்னு வெளிய தெரியாத விசயம் நடக்கும்னு தெரியும்", என்று கூறி விட்டு தலை குனிந்து கொண்டாள்.

"வாறே வா. சேம குட்டி மா. உனக்கு எதுவோ ஒன்னு நடக்கும்னு தெரிஞ்சிருக்குறதே போதும். அப்புறம் ரொமான்ஸ் பத்தியும்  தெரிஞ்சிருக்கு. இது போதாதா? கல்யாணத்துக்கு முன்னாடி பொண்ணுங்களுக்கு  இவ்வளவு தான் தெரிஞ்சிருக்கணும். மத்தது எல்லாம் புருசன் தான் சொல்லி தரணும். சமத்து டி நீ"

"அப்படியா?"

"ஆமா கலை"

"அப்ப சொல்லி தாங்க", என்று அசால்டாக சொன்னாள் கலைமதி.

"என்னது???", என்று அதிர்ச்சியாக கேட்டான் சூர்யா.

"நீங்க தான தெரியாலைன்னா புருசன் சொல்லி தரணும்னு சொன்னீங்க. அதான் சொல்லி தாங்கன்னு  சொல்றேன்"

"படுத்தாத டி லட்டு. அதெல்லாம் இப்ப சொல்லி கொடுக்க கூடாது"

"அப்புறம் எப்ப சொல்லி தரனும். நமக்கு தான் கல்யாணம் ஆகிட்டே. அப்புறம் கட்டி புடிச்சிருக்கோம். முத்தமும் கொடுத்தீங்க. அப்பறம் என்ன?"

"அதெல்லாம் செய்யலாம். இது இப்ப செய்ய கூடாது கலை"

"ஓ அப்ப ரிசப்ஷன்  முடிஞ்சு சொல்லி தருவீங்களா?"

"அப்ப இல்லை. நீ படிச்சு முடிச்ச பிறகு தான்"

"பாத்தீங்களா? புருசன் தான் பொண்டாட்டிக்கு சொல்லி கொடுக்கணும்னு சொன்னீங்க. இப்ப மாட்டேன்னு  சொல்றீங்க. அப்ப என்னை உங்க பொண்டாட்டியா நினைக்கலை தான?"

"ஏய் செல்லம், அப்படி எல்லாம் இல்லை டி. இப்படி பேசியே மனுசனை மூட் ஏத்தாத. நானே இன்னும் நீ படிச்சு முடிக்க மூணு செமஸ்டர் இருக்கேன்னு  கவலைல இருக்கேன்"

"படிப்புக்கும்  அதுக்கும் என்ன சம்பந்தம் அத்தான்?"

"சரியான கேள்வி தான். ஆனா நிலைமை அப்படி தான இருக்கு"

"என்ன நிலைமை? நான் படிச்சு முடிச்சதும் வேலைக்கு போவேன்னு  சொன்னது கோபமா? ஹாஸ்டல் போறேன்னு  சொன்னப்ப போ னு சொன்ன மாதிரி வேலைக்கு போறேன்னு  சொன்னதுக்கு படிச்சிட்டு வேலைக்கு போன்னு  என்னை  விரட்ட பாக்குறீங்களா உங்களை விட்டு?"

"அடியே ஜாங்கிரி", என்று கொஞ்சி கொண்டே அவளை இழுத்து தன் மடி  மீது அமர வைத்தான் சூர்யா.

"அத்தான் என்ன பண்றீங்க, விடுங்க", என்று இறங்க பார்த்தாள் கலைமதி.

"நீ தான சொல்லி தர சொன்ன? இப்ப விடுங்கனு சொல்ற?"

"சொல்லி தர சொன்னது இது வா?"

"ஹா ஹா அது இது இல்லை தான். ஆனா இப்படி தான் ஆரம்பிக்கணும்"

"ஓ அப்படியா? அப்ப சரி சொல்லுங்க", என்று கூறி கொண்டே அவன் மடியில் அழுத்தி அமர்ந்தாள்.

அடுத்த நொடி  ஆ என்று அலறியவன் "இப்படியா டி உக்காருவ? ஒரு நிமிசத்துல வலி உயிர் போயிட்டு", என்று சொல்லி அவளை சரியாக அமர வைத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.