(Reading time: 20 - 39 minutes)

"நான் ஒன்னும்  அவ்வளவு குண்டு கிடையாது. என் வெயிட் பட்டு  உங்களுக்கு வலிக்குதா? போங்க அத்தான்"

"உன் வெயிட் பட்டு ஏன் வலிக்க போகுது. வெயிட் பட்ட இடம் தானே பிரச்சனை", என்று நினைத்து கொண்டு அதை விடு கலை. ஆமா  நீ இப்படி எல்லாம் பேசுவியா கலை?", என்று கேட்டான்.

"உங்க கிட்ட மட்டும் தான் இப்படி. ஏன்னு தெரியலை. சரி  சொல்லி கொடுங்க"

"நீ இன்னைக்கு என்னை தெரிச்சு ஓட  விடனும் அப்படிங்குற முடிவுல  தான் இருக்க போல? ப்ளீஸ்  குட்டி மா. உன் அத்தான் தாங்க மாட்டேன்"

"இப்ப சொல்ல போறீங்களா இல்லையா?"

"அடியே, சொன்னா உனக்கு தான் டி பிரச்சனை  பரவால்லயா?"

"எனக்கா? எனக்கு  எதுக்கு பிரச்சனை? புருசன் பொண்டாட்டி சேர்ந்து வாழ்ந்தா நல்லது தான?"

"மக்கு பொண்டாட்டி அது சரி தான். ஆனா சேந்து வாழ்ந்தா அடுத்து என்ன ஆகும்னு தெரியுமா?"

"என்ன ஆகும்?"

"சேந்து வாழ்ந்தா உனக்கும் எனக்கும் பாப்பா வந்துரும் பரவால்லயா?"

"இது ஒரு பிரச்சனையா? கல்யாணம் ஆனா பாப்பா பிறக்கும் தான? ஐ ஜாலி. எனக்கும் பிறக்கும். எனக்கு கிடைக்காத அம்மா பாசமும், அப்பா பாசமும் நம்ம பிள்ளைக்கு கிடைக்கும்ல?", என்று கூறியவளின் குரலில் உண்மையான எதிர்பார்ப்பு இருந்தது.

அப்படியே அவளை இறுக்கி கொண்டவன் "குட்டி பாப்பா வரது நல்ல விசயம் தான். நாம ரெண்டு பேரும் பாப்பாவை  நல்லா வளக்கலாம் தான். ஆனா நீயே குட்டி பாப்பாவா இருக்கியே கலை?", என்றான்.

அவன் இறுக்கியதில்  அவன் நெஞ்சில் தலை சாய்த்தவள் "நான் ஒண்ணும் குட்டி பாப்பா இல்லை. பெரிய பொண்ணு ஆகிட்டேன். அதனால தான கல்யாணம் செஞ்சி வச்சாங்க", என்று கேட்டாள்.

"ம்ம் பெரிய பொண்ணு தான். எனக்கும் அப்படி தான் பாக்க தோணுது. ஆனா என்ன பண்ண? கலை குட்டி இங்க பாரேன். கல்யாணம் அப்பறம் பாப்பா பெத்துக்குறது சரி தான். ஆனா அது படிச்சு முடிச்சிட்டு கல்யாணம் 

பண்றவங்களுக்கு. இப்ப நாம சேந்து வாழ்ந்தா நீ மாசமா ஆகிருவ. அப்புறம் என்ன ஆகும். உன் வயிறு பெருசா வளந்துட்டே  போகும். அப்புறம் உன் காலேஜ்ல எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க தான?"

"ஐயோ  ஆமா. எங்க கனி மொழி மேடம் மாசமா இருக்காங்க. அவங்க பெரிய வயிதை தூக்கிட்டு காலேஜ் வரதே ஒரு மாதிரி இருக்கும். இதுல நான்னா அவ்வளவு தான். இதுக்கு தான் படிச்சு முடிச்ச அப்பறம் சேந்து வாழலாம்னு சொன்னீங்களா அத்தான்?"

"ஆமா டி"

"ஹ்ம் படிச்சு முடிஞ்ச பிறகே சேந்து வாழலாம். ஆனா சேந்து வாழ்ந்தா பாப்பா வந்துரும்னா, பாப்பா வந்த அப்பறம் புருசனும் பொண்டாட்டியும் சேந்து வாழ மாட்டாங்களா?", என்ற பெரிய சந்தேகத்தை சூர்யாவிடம்  கேட்டாள் கலைமதி.

அதிர்ச்சியில் வாயடைத்து போன சூர்யா "எங்க இருந்து டி உனக்கு இப்படி எல்லாம் கேக்க தோணுது?", என்று கேட்டான்.

"நீங்க சொன்னதுல இருந்து தான் தோணுச்சு. சரி பதில் சொல்லுங்க"

"பாப்பா வராமலும் சேந்து வாழலாம் டி. ஆனா அது கஸ்டம்"

"ஓ அப்ப அது எப்படின்னு உங்களுக்கு தெரியாதா?", என்று கேட்டு அவன் இளமையை சோதித்தாள்.

"பிளீஸ் டி செல்லம். இந்த பேச்சை விட்டுறேன். இப்பவே என்னன்னவோ  ஆகுது. முடில டி", என்று கூறி கொண்டே அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான்.

"கூசுது அத்தான் விடுங்க. ஏன் அத்தான், நீங்க ஏன் இப்படி செய்ய கூடாது?", என்று கேட்டாள்.

"இவ எதை சொல்றா?", என்று நினைத்து கொண்டு "எப்படி செய்யணும்?", என்று கேட்டான்.

"உங்களுக்கு கல்யாணம் முடிஞ்ச பிரண்ட்ஸ்  இருப்பபங்கல்ல? அவங்க கிட்ட பாப்பா வராம எப்படி சேந்து வாழணும்னு  கேளுங்களேன்"

அடுத்த நொடி மடியில் அமர்ந்திருந்தவளை கட்டிலுக்கு நகற்றியவன் அவளையே குறுகுறுவென்று  பார்த்தான்.

அவன் பார்வையில் ஏதோ புரியாத உணர்வை அடைந்தாள் கலை. அவனை பார்க்க முடியாமல்  அவள் தலை குனிந்தது.

மெதுவாக தன் இரு கைகளையும் அவள் தோள் மீது வைத்தான் சூர்யா. "என்ன செய்றான்?", என்று நினைத்து கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தாள் கலைமதி.

தோள்களில் கை வைத்து அவளை அப்படியே படுக்கையில் படுக்க வைத்தான். "யார் கிட்டயாவது கேக்க சொன்னா நீங்க என்ன செய்றீங்க அத்தான்?", என்று கேட்டாள்.

"யார் கிட்டயும் கேக்காமலே  எனக்கு தெரியும் டி. ஆனா என்னால பாலோ பண்ண முடியுமானு தெரியாது", என்று மனதுக்குள்ளே  பேசியவன் அவள் மீதே கவிழ்ந்து அவள் உதடுகளை சிறை செய்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.